புத்தகம்
தனி மனிதர்கள் தங்கள் தேவைகளுக்காகச் சேர்த்து வைத்திருந்தவை. சுருக்கமாகச் சொன்னால் தனக்கென ஒரு நூல் நிலையத்தை வைத்துக் கொள்ளாத இஸ்லாமிய அறிஞர் ஒருவரும் இல்லை இஸ்லாமிய சகாப்தத்தில்.
இந்தப் பட்டியலை இங்கே தர முற்பட்டால் அவை நீண்டு கொண்டேபோகும். புத்தகங்களின் பால் நம்மவர்கள் கொண்ட அன்புக்கோர் அகண்ட எல்லை இதோ:
எகிப்து நாட்டின் ஹிஜ்ரி ஐந்தாம் நூற்றாண்டு ஆட்சியாளர்களுள் ஒருவர் இப்னு ஃபாத்திக் அவர்கள் சதா சர்வ காலமும் புத்தகப் புழுவாகவே நெளிந்து கொண்டிருந்தார்கள். இதனால் அவர் தன் மனைவிக்குப் போதிய கவனம் தரவில்லை.
இதைக் கண்ணுற்ற அவரது மனைவி அலுத்துப் போய் விட்டார். இதனால் புத்தகங்களை வெறுக்க ஆரம்பித்து விட்டார். அவரது மனைவியார். இப்னு ஃபாத்திக் அவர்கள் மரணித்த போது அந்த நூல்களைப் பார்த்து அங்காலய்த்தாராம் அவரது மனைவி. 'அவர் இந்த உலகைப் பிரியும் வரை அவரோடு இருந்து என் உரிமைகளைப் பறித்தீர்களே' என அழுதாராம் அவர்.
இப்படி அலாதியானதோர் அன்பைக் கொட்டிப் புத்தகங் களைச் சேர்த்து அறிவுத் சுரங்கங்களாக அவர்களை ஆக்கி வைத்திருந்தார்கள் நமது இலட்சிய வாழ்வின் நாள்களில்.
வந்தார்கள் எதிரிகள்.
காலச் சக்கரம் வரலாற்றைச் சுழற்றிப் போட்டது வரலாறு நமக்கெதிராக உருவானது. எதிரிகள் இஸ்லாத்தின் ஆட்சிக்குள்ளிருந்த இடங்களைக் கைப்பற்றினார்கள்.
"இந்த முஸ்லிம்களை உலகின் வழிகாட்டிகளாக மிளிரச் செய்து கொண்டிருப்பவை இந்த நூல் நிலையங்களும், கல்விக் கூடங்களும் தானே! அவற்றைக் கொன்றொழிக்கின்றோம். பாருங்கள்!'' என வரிந்து கட்டினார்கள்.
முஸ்லிம்கள் ஏற்படுத்தி வைத்திருந்த நூல்களை அழித்தார்கள் நூல் நிலையங்களை எரித்தார்கள்.
எதிரிகளின் இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயல் களால், அறிவுப் பெட்டகங்களாக ஒளி வீசிக் கொண்டிருந்த நூல் நிலையங்களை மனித இனம் முழுமையாக இழந்தது. அது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல; மனித இனத்திற்கே பெரும் இழப்பானது.
தார்த்தாரிகள் பாக்தாத்திற்குள் நுழைந்தபோது அவர்கள் தங்களது முதல் குறியாக நூல் நிலையங்கையே கொண்டார்கள். புத்தகங்களை இந்த அறிவிலிகள் மூட்டை மூட்டையாகக் கட்டி 'டைகிரீஸ்' ஆற்றில் தூக்கி வீசினார்கள் புத்தக மூட்டைகள் இவர்கள் ஆற்றைக் கடந்து செல்லும் பாலமாகப் பயன்படுத்தப் பட்டன. நீண்ட நாட்கள் வரை இந்த ஆற்றின் நீர் இந்த நூல்கள் எழுதப் பெற்றிருந்த மை கரைந்து கறுப்பு நிறமாக ஓடியது.
சிலுவைப் போர்களின் போதும் கிறிஸ்துவர்கள் இதுபோன்ற தொரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை முஸ்லிம்கள் நிலைநாட்டியிருந்த நூல் நிலையங்கள் மேல் தொடுத்தார்கள். திரிப்போலி, பைத்துல் முகத்தஸ் போன்ற பெரிய நூல் நிலையங்களையெல்லாம் தாக்கித் தரைமட்டமாக்கினார்கள். திரிப்போவியில் மட்டும் கிறிஸ்தவர்கள் 30 லட்சம் நூல்களை எரித்தார்கள்.
ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்ட பின் அங்கிருந்த நூல் நிலையங்களும் அழிக்கப்பட்டன. இந்த நூல்கள் அவை எடுத்து வீசப்பட்ட இடங்களில் குன்றெனக் குவிந்து நின்றன. மக்கிப்போய் காகித மலைகளாக அவை ஆயின. பிற்றை நாட்களில் இவை 'புத்தகக் குன்றுகள்" என பேசப்பட்டன.
இதில் மகிழ்ச்சி தரும் ஒரே செய்தி இந்த நூல்களில் ஒரு பெரும் பகுதி ஐரோப்பாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள நூல் நிலையங்களில் வைக்கப்பட்டது. இவற்றால் இன்றளவும் மனித இனம் நன்மையடைந்து கொண்டிருக்கின்றது.
இப்படி அறிவைத் தேடி வைத்திருந்த முஸ்லிம்களே மீண்டும் தொடரட்டும் உங்கள் முயற்சி! எழுங்கள்! இந்த உலகுக்கு வழிகாட்ட முன்வாருங்கள்!
கருத்துகள்
கருத்துரையிடுக