tjm
*ஷரீஅத்தின் போர்வாள்*
*T.J.M.ஸலாஹுத்தீன் ரியாஜி துளிகள்*
*(1942_ முதல் 2022 வரை 80 தகவல்கள்)*
*✍️..மவ்லவி, ஏ.ஏஸ்.அபூபக்கர் சித்திக் உலவி..*
*வடகரை*
1) மண்ணில் மலர்ந்த நாள்_ 12/12/1942.
2) பெற்றோர் ஜெய்னுல் ஆபிதீன்_ ஜமீலா பேகம்.
3) உடன் பிறந்தவர்கள் இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள்.
4) உள்ளூர் பள்ளிக்கூடத்தில் ஏழாம் வகுப்பு வரை படித்தார்கள்.
4) பதிமூன்றாம் வயதில் உள்ளூரில் உள்ள அரபிக் கல்லூரியில் 3_ஜும்ரா வரை ஓதினார்கள்.
5) நான்காம் ஜும்ரா 5_ம் ஜும்ரா லால்பேட்டையில் ஓதினார்கள்.
6) மீண்டும் உள்ளூரில் ரியாலுல் ஜினான் அரபிக் கல்லூரியில் சேர்ந்து 6,7 ஜும்ரா ஓதினார்கள்.
7) 1963_ஆம் ஆண்டு ஆலிம் ரியாஜி பட்டம் பெற்றார்கள்.
8) 1963 முதல் 1970 வரை எட்டு ஆண்டுகள் ஓதிய மதரசாவில் பேராசிரியராக பணியாற்றினார்கள்..
10) 1971 முதல் 2012 _வரை எம். ஜி. பி மஹல்லாவில் ஹஸனாத்துல் ஜாரியாத் அரபிக்கல்லூரி உருவாக்கி அதன் முதல்வராக பணியாற்றினார்கள்.
11) 15_ 12_1963 சிந்தாமதார் பாத்திமா என்ற பெண்ணை திருமணம் செய்தார்கள்.
12) அஹ்மது அனஸ்,ஷம்ஸுல் ஹுதா, முஸம்மில் சாதிக், ஆகிய மூன்று ஆண் பிள்ளைகளும்,
ஜுவைரிய்யா,மிஸ்பாஹுன் நிஸா நஜிபா ஆகிய இரண்டு பெண் பிள்ளைகள்..
13) மொத்தம் 14 பேரன், பேத்திகள் இவர்களில் ஒருவர் ஆலிம்.
14) அபாரமான ஞாபக சக்தி உடையவர்கள்...
15) ஒருவருக்கொருவரை அறிமுகம் செய்து வைப்பதில் புதிய அகராதியை ஏற்படுத்தியவர்கள்.
16) கைப்பிடித்து முஸாபஹா செய்வதிலேயே அன்பை வெளிப்படுத்தி விடுவார்கள்.
17) மாணவர்களை,ஆலிம்களை அம்மா என்றே அழைப்பார்கள்.
18) இமாமத் பணியில் சங்கடங்களை சந்தித்து நின்றால் ஒரு தந்தையைப் போல் ஆறுதல் கூறுவார்கள்.
19) ஒவ்வொரு ஆசிரியரும் தனது மாணவர்களை நேசிப்பார்கள். ஆனால் ஹழ்ரத் அவர்கள் அனைத்து மாணவர்களையும், ஆலிம்களையும் தனது மாணவர்களை போல நேசித்தார்கள்.
20) தன் ஆசிரியர் எஸ் ஆர். எஸ். சம்சுல் ஹுதா ஹழ்ரத் (ரஹ்மத்துல்லாஹி) அவர்கள் மீது அதிகம் பாசம் வைத்திருந்தார்கள்.
21) அன்பின் வெளிப்பாடாய் தனது இரண்டாவது மகனுக்கு சம்சுல் ஹுதா என பெயர் வைத்தார்கள்.
22) தனது ஆசிரியர் 1988_ ஆம் ஆண்டு வஃபாத்தான போது தரையில் விழுந்த மீனாய் துடி துடித்துப் போனார்கள்.
23) தனது ஆசிரியர் மிஸ்பாஹுல் ஹுதா முதல்வராக இருப்பதால் அந்த மதரஸாவை நினைவில் கொண்டு தனது மகளுக்கு மிஸ்பாஹுன்னிஸா என பெயரிட்டார்கள்.
24) எஸ். ஆர். எஸ் ஹழ்ரத் அவர்கள் தனது வீடு திறப்பு விழாவில் TJM ஹழ்ரத் அவர்களை பேச வைத்து அழகு பார்த்தார்கள்.
25) S.R.S. ஹழ்ரத் அவர்கள் தனது மகள் கனவில் தோன்றி T.J.M_மை திருமணத்திற்கு கூப்பிடு எனக்கூற போன் அழைப்பின் பேரில் 2014_ திருமணத்தில் கலந்து சிறப்புரையாற்றினார்கள்.
26) S.R.S ஹழ்ரத்தின் சிறப்பை இவர்கள் கூற அதைக் கேட்டு அவர்களிடம் ஓத முடியவில்லையே என ஒரு மாணவர் ஏங்கித் தவிக்க எஸ்.ஆர்.எஸ் ஹழ்ரத் அவர்களே அந்த மாணவர் கனவில் "என்னிடம் ஓதுவதும் T.J.M _யிடம் ஓதுவதும் ஒன்றே" எனக் கூறினார்கள்..
27) எந்த விழாவானாலும் சக ஆலிம்களை பெ ரிதாக மதித்து உயர்வாக பேசுவார்கள்..
28) ஆலிம் என்ற மூன்றெழுத்து போதும் இந்த மூன்று எழுத்து துடியாய் துடிக்கும்.
29) பல ஆலிம்களின் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள்.
30) எந்த ஆலிமானாலும் அவர்களின் வாழ்க்கை தரம் உயர வழிவகை செய்து கொடுப்பார்கள்.
31) இமாம்களுக்கு நெருக்கடிகள் வரும்போது தலையிட்டு தீர்த்து வைப்பார்கள்.
32) எல்லா ஊரும் நல்ல ஊர்தான் இமாம்கள் தான் அந்தந்த ஊரின் மாற்றங்களுக்குக் காரணம் என்பார்கள்.
33) பாதிக்கப்பட்ட பல ஆலிம்களுக்கு தனது செல்வாக்கு, சொல்வாக்கினால் உதவி புரிந்தார்கள்.
34) இமாமத் பணியில் தாமரை இலைப்போல பயணிக்க வேண்டும் என்பார்கள்.
35) இமாமத்தில் ஆரம்பத்தில் அதிகம் பாசம் உள்ளவர்களே கடைசியில் எதிரி ஆவார்கள் என்பார்கள்.
36) இமாமை ஏதும் செய்ய முடியாத நிலை வரும்போது கடைசியாக பெண்கள் விஷயத்தை கையில் எடுப்பார்கள். ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பார்கள்.
37) ஒரு ஊரின் அஸ்திவாரமே மக்தப் மதரசா தான் எனவே மத்ரசாவை திறமையாக நடத்துங்கள் என்பார்கள்.
38) வருங்கால சந்ததிகள் வழிகெட்டு போகாமலிருக்க வழிகாட்டும் பொறுப்பு பெற்றோர்களைப் போல மக்தப் ஆசிரியருக்கும் உண்டு என்பார்கள்.
39) 2016_ம் ஆண்டில் முஸ்லிம் தொண்டு இயக்கம் ஹழ்ரத் அவர்களுக்கு சிறந்த மார்க்க அறிஞர் விருது வழங்கியது.
40) 2019ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கியது இப்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இவ்விருதை வழங்கினார்.
41) சமுதாய சேவை செய்பவர்களை ரொம்ப நேசிப்பார்கள். ஊக்கமளிப்பார்கள்.
42) இளம்பருவத்தில் மாத இதழ்கள் பலதை மொத்தமாக வாங்கி வீடு வீடாக விற்பனை செய்து இஸ்லாமிய எழுச்சிக்கு பாடுபட்டுள்ளார்கள்.
43) சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல மிகச் சிறந்த எழுத்தாளரும் ஆவார்கள்.
44) 1984 முதல் 2000 வரை பதினாறு ஆண்டுகள் "ஷரீஅத் பேசுகிறது" மாத இதழை நடத்தி வந்தார்கள்.
45) மாத இதழ்கள் பல மாணவர்களின் செலவினங்களை பூர்த்தி செய்துள்ளது.
46) சந்தா அனுப்பினாலும் இல்லை என்றாலும் தொடர்ந்து இதழ்களை அனுப்பி வைப்பார்கள்.
47) வருமானத்தின் மிகுதியை மாத இதழுக்கே செலவு செய்தார்கள்.
48) பல ஆயிரம் கிலோமீட்டர்கள் சூறாவளியாக சுற்றுப் பயணம் செய்தவர்கள்.
49) பயானுக்காக பேரம் பேசியது இல்லை சொந்த பணத்தை செலவு செய்து பல விழாக்களில் கலந்து விட்டு வந்திருக்கிறார்கள்.
50) 60_ ஆண்டுகால பொதுவாழ்வில் ஏறக்குறைய பத்தாயிரம் மேடைகளில் பேசியிருப்பார்கள்.
51) 2006_ஆம் ஒருமுறை ஹஜ் செய்துள்ளார்கள்.
52) 1992_ முதல் 2002 வரை மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளராக இருந்து திறமையாக பணியாற்றினார்கள்.
53) ஜமாஅத்துல் உலமா என்ற இந்த அமைப்புக்கு பரவலாக அங்கீகாரத்தை அமைத்து தந்தவர்கள்.
54) இன்று உயர்ந்து நிற்கும் "ஜமாஅத்துல் உலமாவின்" அஸ்திவாரம் அவர்கள்.
55) பல லட்சம் சொந்த பணத்தை ஜமாஅத்துல் உலமாவுக்காக செலவு செய்தவர்கள்.
56) மாநில ஜமாத்துல் உலமாவில் மூன்று முறை பதவி வகித்தார்கள்.
57) மாநில ஜமாஅத்துல் உலமாவின் அனைத்து பதவிக்கும் முன்மொழியப்பட்டுள்ளவர்கள் ஹழ்ரத் மட்டுமே.
58) எனது பெயரை இனி பதவிகளுக்கு முன்மொழிய வேண்டாம் எனக்கூறி நோட்டீஸ் போட்டு வெளியிட்டு விலகி, இளைய உலமாக்களுக்கு வழி விட்டார்கள்.
59) பொறுப்பு வகித்த நேரத்தில் "பிறை" விஷயத்தில் தீர்க்கமான ஒரு முடிவை எடுத்தார்கள்.
60) "ஸதக்கத்துல் ஃபித்ரு" விஷயத்திலும் ஒரு முழுமையான முடிவை எடுத்தார்கள்....
61) அச்சம் தயை தாட்சண்யம் இல்லாது உள்ளதை உள்ளபடி பேசியதால் எதிர்ப்புக்கும், தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளார்கள்.
62_ கீழக்கரையில் தொடர்ந்து 48_ ஆண்டு காலம் பெண்கள் தைக்காவில் தராவீஹ் தொழுகை நடத்தியுள்ளார்கள்.
63) மேடைகளில் சிங்கமாக சீற்றம் காட்டினாலும் மிக இளகிய மனதுடையவர்கள்.
64) தனது இளம் மாணவ ஆலிம் இறந்த நேரத்தில் தேம்பித் தேம்பி அழுதார்கள்.
65) பல மாணவர்கள் கடன் வாங்கி உள்ளார்கள்.
திரும்ப கொடுத்தால் வாங்கமாட்டார்கள்.
66) புத்தகம் வெளியிட்டால் இலவசமாக பலருக்கு வழங்குவார்கள்.
67) "தீனருவி ஆயிரம் கேள்வி பதில்" புத்தகத்தை தானே விற்பனை செய்து புத்தக ஆசிரியருக்கு பணம் அனுப்பி வைத்தார்கள்.
68) நம்பர்களை குறிப்பிட்டு பயான் செய்வது ஹழ்ரத்திற்கு கைவந்த கலையாகும்.தேதி 7 மணமகன் பெயரின் எழுத்துக்கள் ஏழு,வானம் ஏழு , வாரத்தின் நாட்கள் ஏழு.
69) 1992 பாபர் மசூதி இடிப்பின் போது ஹழ்ரத் அவர்கள் ஆற்றிய எழுச்சியுரை மறக்கமுடியாதவை.
70) புது வீடு கட்டும் போது ஒவ்வொன்றுக்கும் ஒரு அறை இருப்பது போல தொழுது கொள்ளவும் சிறிய அறை கட்டுங்கள் என்பார்கள்..
71) மீலாது விழாக்கள் அதிகம் நடத்தப்பட வேண்டும் என ஆண்டுக்கு ஆண்டு நோட்டீஸ் அனுப்பி வைப்பார்கள்.
72) "திப்பில் குலூபி வதவாயிஹா" என்று பயானை ஆரம்பிக்கும் போதே உணர்ச்சிகளை உடம்பில் பாய்ச்சக் கூடியவர்கள்.
73) ஹழ்ரத் அவர்கள் தனது பயானில் கூறும் உயிரோட்டமான வார்த்தைகளில் ஆலிம்களைப்பற்றி சமுதாயத்தின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் பொறுப்பேற்றுள்ள ஆலிம்கள் என்பார்கள்.
74) நகர,மாநகர, வட்டார மாவட்ட, மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் உறுப்பினர் களே, உயிருக்கு உயிரான உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று மனமுருகி கூறுவார்கள்.
75) சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் அதன் சீற்றங்கள் குறைவதில்லை என்பது போல கடைசி வரையிலும் குரலும் கம்பீரமும் குறையவே யில்லை.
76) கடைசி காலத்தில் சில அவஸ்தைகளை அனுபவித்து மரணத்தின் அறிகுறி அறிந்து தனக்கு பிரியமானவர்களே கடைசியாக பார்த்து விட்டு போகச் சொன்னார்கள்.
77) ஹழ்ரத் அவர்களின் மாணவர்கள், முஹிப்பீன்கள் T.J.M. ஹழ்ரத் பெயரில் பாசறை வைத்துள்ளார்கள். அது கியாம நாள் பர்யந்தம் அவர்களின் பிரசுரங்களை வெளியிட்டு கொண்டே இருக்கும் ஹழ்ரத் அவர்களின் ஆசையும் இதுவே.
78) 2021 ஆகஸ்ட் _16 மதுரை தாருல் உலமா கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்வில் 75 வயது பூர்த்தியான மூத்த ஆலிம் களுக்கு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வழங்கிய ரூபாய் ஒரு லட்சம் பொற்கிழி யை ஹழ்ரத் அவர்களும் பெற்றார்கள்.
78) அவர்களின் மாணவர்களிடையே அன்னாரை குளிப்பாட்டி கஃபனிட்டு, நல்லடக்கம் செய்திட போட்டியே நிலவியது.
80) 28 _01_ 20222 அன்று இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற்று 29_ 01_2022 அன்று மக்தூம் ஞானியார் பள்ளிவாசல் கப்ருஸ்தானில் ஹழ்ரத் தின் பாசத்திற்குரிய நண்பர் மர்ஹூம் M. ஃபத்ஹுல்லாஹ் ஆலிம் மிஸ்பாஹி அவர்களின் மண்ணறை அருகே அடக்கம் செய்யப்பட்டார்கள்....
கருத்துகள்
கருத்துரையிடுக