மிஃராஜ்

*மிஃராஜ்:*

ஒரு நாள் மூஸா அலைஹி ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் மீது கொண்ட காதலின் வெளிப்பாட்டால்.

யா அல்லாஹ்...!

உன்னை பார்க்க வேண்டும்.

உன் திருகாட்சியை எனக்கு காட்டு என்பதாக கேட்டார்கள்.

அல்லாஹ் சொன்னான்...!

யா மூஸா அலைஹிஸலாம் உன்னால் என்னை பார்க்க முடியாது .

திரும்ப மூஸா அலைஹி ஸலாம் அவர்கள் அடம்பிடித்து கேட்டார்கள்.

யா அல்லாஹ் ...!

உன் திருகாட்சியை எனக்கு காட்டு என்பதாக.

கலிமுல்லாஹ்வாகிய மூஸா அலைஹி ஸலாம் அடம்பிடிப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு.

மூஸாவே....! அலைஹி ஸலாம்.

தூரிஸீனா மலைக்கு வா.

அங்க எனது தஜல்லிய்தில் ஒரு துளியை தூரிஸீனா மலையின் மீது ஓர்முகப்படுத்துகிறேன்.

நீர் பார்த்துக்கொள் .

மூஸா அலைஹி ஸலாம் மிக ஆசையோடு சென்றார்கள்.

அல்லாஹ்வின் தஜல்லிய்யத் தூரிஸீனா மலையின் மீது பட்டது.

அந்த தஜ்ஜலிய்யத்தை மூஸா அலைஹி ஸலாம் பார்த்து மயக்கம் போட்டு கீழே விழுந்தார்கள்.

மலையின் சுக்கு நூராக வெடித்து சிதறியது.

அல்லாஹு அக்பர்.

அல்லாஹ்வின் தஜல்லிய்யத்தின் ஒரு துளி வெளிப்பாடை மூஸா அலைஹி ஸலாம் பார்த்ததற்கே மயக்கம் போட்டு கீழே விழுந்தது மட்டுமல்ல.

அன்றிலிருந்து தனது கண்களுக்கு திரைபோட்டுக்கொண்டார்கள்.

காரணம் ..அல்லாஹ்வின் தஜல்லிய்யத்தை கண்ட கண்களை யாரும் பார்த்தால் அவர்களின் கண் பார்வை அற்றதாக போய்விடும் என்பதாக...

ஆனால் எங்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ.

அல்லாஹ்வின் தஜல்லிய்யத்தின் ஒரு துளியை பார்க்க வில்லை.

அல்லாஹ்வையே பூரணமாக பார்த்தார்கள்.

எந்த அளவு என்று சொன்னால் இரண்டு புருவங்கள் இனைவதைவிடவும் மிக மிக நெருக்கமாக.....

சுப்ஹானல்லாஹ்.

இவ்வளவு நெரும் நெருங்கியும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொஞ்சம் கூட தனது முபாரக்காண கண்களை இமைக்கவில்லை.

கண்கள் ஒளியால் கூசவுமில்லை.

என்றால் அல்லாஹ் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எந்தளவுக்கு ஆற்றலைக்கொடுத்திருப்பான்.

அவர்களின் மகத்துவம் என்ன?

அவர்களின் அந்தஸ்து என்ன?

அல்லாஹு அக்பர்.

நூரும் நூரும் சந்தித்த ஒரு உன்னதமான சந்திப்பு மிஃராஜ்.

அல்லாஹ் அகமகிழ்ந்து தன் ஹபீப் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ரசித்த இரவு அல்லவா அந்த மிஃராஜ் இரவு.

உண்மையில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது நாம் கொண்ட காதலின் வெளிப்பாடாக.

முஃமின்களாகிய நாம் அந்த இரவை கொண்டாடவேண்டும்.

அந்த இரவில் நஃபிலான வணக்கங்களை செய்யவேண்டும்.

ஸலவாத்துக்களை அதிகம் ஓதவேண்டும்.

அந்த இரவில் நமது நாட்டங்களையெல்லாம் அல்லாஹ்விடம் மன்றாடி பெற்றுக்கொள்ளவேண்டும்.

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழை பாடி அகமகிழவேண்டும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் மிஃராஜ் இரவை கொண்டாடும் பாக்கியத்தையும்,

அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவிலும்,நனவிலும், நேரிலும் காணும் பாக்கியத்தை தந்தருள்வானாக...

மர்ஹபா யா மர்ஹபா மிஃராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?