இளைஞர்கள்

*இஸ்லாமிய இளைஞர்களே! #உங்களுக்கான இருபது உபதேசங்கள்.*
**************************
*1,* அதிகாலையில் விழித்திடுங்கள்.
தஹஜத் 4 ரக்காத் தொழதிடுங்கள்.

*2,* சுபுஹு தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் தொழுகுங்கள்.

*3,* காலையில் சிறிது நேரம் குர்ஆன் ஷரீப் ஓதுங்கள். 

*4,* தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். 

*5,* நேரங்களையும், செய்ய வேண்டிய வேலைகளையும் சரியாக திட்டமிடுங்கள்.

*6,* எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்குங்கள்.

*7,* பெற்றோர்களுக்கு பணிவிடை செய்யுங்கள். 

*8,* உற்றார், உறவினர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள். 

*9,* ஸாலிஹான நல்ல நண்பர்களுடன் பழகுங்கள்.

*10,* ஆரோக்கியத்தை தரும் சத்தான ஆகாரங்களை சாப்பிடுங்கள்.

*11,* சமூக சேவையில் ஈடுபாடு காட்டுங்கள். 

*12,* செல்போனை அவசியத்தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துங்கள்.

*13,* கடந்த கால இஸ்லாமிய வரலாறுகளை நேரம் ஒதுக்கி படியுங்கள். 

*14,* மற்றவர்களிடம் சிரித்த முகத்துடன் கனிவாக பேசுங்கள். 

*15,* எப்பொழுதும் தூய்மையாக இருங்கள். 

*16,* வெட்கப்படாமல் சுன்னத்தான தாடி வையுங்கள். 

*17,* அழகிய நற்பண்புகளை நடைமுறை படுத்துங்கள். 

*18,* நீங்கள் பட்டதாரியாக இருந்தால் அரசு அதிகாரியாக ஆக முயற்சி செய்யுங்கள். 

*19,* ஹலாலான முறையில் [மார்க்கம் அனுமதித்த வழியில் மட்டும் ] சம்பாதியுங்கள்.

*20,* இரவில் இறைவனிடம் பாவமன்னிப்பு தேடிவிட்டு சீக்கிரம் தூங்கி விடுங்கள். 

இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

நாளைய வரலாறாக நீங்கள் மாற வேண்டும் என்று ஆசைப்படும் உங்கள் அன்பு நண்பன்.
மெளலானா *N.S.இன்ஆமுல் ஹஸன்காஷிஃபி.* தென்னூர்,திருச்சி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?