டெல்லியை ஆட்சி மன்னர் பிருதிவிராஜனின் அமைச்சரவையில் இருந்த சில இராஜபுத்திரர்கள் சூஃபி ஞானி அஜ்மீர் காஜாமுயீனுத்தீன் (رحمة الله عليه ) அவர்களை அணுகி இஸ்லாத்தைத் தழுவி தீட்சையும் பெற்றார்கள்.
இதனை அறிந்த பிருதிவிராஜன் அவர்களுக்கு அடுக்கான தொல்லைகளையும் துன்பங்களையும் கொடுத்தான்.
இந்த சூழலை சூஃபி ஞானி அஜ்மீர் காஜாமுயீனுத்தீன் (رحمة الله عليه ) அவர்களிடம் முறையிட அவர்கள் பிருதிவிராஜனுக்கு மடல் எழுதினார்கள்
அதை கிழித்தெறிந்தான் மன்னர் பிருத்விராஜன்
சூஃபி ஞானி அஜ்மீர் காஜாமுயீனுத்தீன் (رحمة الله عليه ) இதனை அறிந்ததும் "நாம் பிருதிவி ராஜனை முஸ்லீம் படைகளிடம் ஒப்படைத்து விட்டோம்" என்று (வஸியத்) கூறினார்கள்
கி,பி 1191 ஆம் ஆண்டில் முகம்மது கோரி என்ற ஷிஹாபுத்தீன் கோரி என்ற ஆப்கான் கஜினி வம்ச மன்னர் தாரவாடியில் நடந்த போரில் பிருதிவிராஜனிடம் படுதோல்வி அடைந்தார் .
கி.பி 1192-ல் அதே தாரவாடி அதே மன்னன் பிருதிவிராஜனுடன் நடந்த போரில் பிருத்வி தோல்வி அடைந்தான் டெல்லி அரியணை முஹம்மது கோரிக்கு சொந்தமானது
இந்த வெற்றியை ஞானி மகான் அஜ்மீரின் காஜா அவர்களிடம் சமர்பித்தார் மன்னர் கோரி
பின்பு முகம்மது கோரி தற்செயலாக கருவூல அறைகளைப் பார்வையிட அதில் காகிதச் சுருள் அதில் எழுதபட்டு இருப்பது என்னவென்றால்
"கஜினியின் அரச பீடத்தில் அமருபவர்களுக்கு, என் வேண்டுகோள் என் அரசவை அறிஞர் ஆலோசகராக இருந்த அல் பைரூனி
(அல் பைரூனி அவர்கள் மன்னர் முஹம்மது கஜினி அவரது மகன் மசூது அவர்களுக்கும் அரசியல் ஆலோசகராக சிறிது காலம் இந்தியாவில் பணியாற்றினர் ) இந்துஸ்தானில் ( டெல்லியில்) சுற்றுபயணம் செய்த பொழுது , சமஸ்கிருத மொழியில் ,
"அலோ உபநிஷத் " என்ற நூலில் எம்பெருமானார் (صلى الله عليه وسلم ) அவர்களின் வருகையைப் பற்றிய முன்னறிவிப்புகள் தெளிவாக எழுதப்பட்டிருப்பதாக என்னிடம் கூறினார்.
அதனை கேள்விபட்டு அதனைக் காண வேண்டுமென்ற ஆவலால் நான் பதினேழு தடவை இந்துஸ்தான் மீது படையெடுத்து, அதைக் காண எத்தனயோ இந்துஸ்தான் பண்டிதர்களையும், சமஸ்கிருத வித்துவான்களிடம் விசாரித்தேன். அது பற்றி எனக்கு யாதொரு துப்பும் துவங்கவில்லை. அத்தகு நூல் ஒன்று இருப்பதாகவே நிச்சயமாக என் மனம் நம்புகிறது. அதனைக் கண்டு பிடித்து, உலகுக்கு உணர்த்த வேண்டியது உங்களின் தலையாய கடமை என்று கூறி நிறைவு செய்கிறேன்.
இங்ஙனம் : அல்லாஹ்வின் அடிமை சுல்தான் மஹ்மூது கஸ்னவீ என்ற " கஜினி முஹம்மது .
இதனைப் படித்த ஷிஹாபுத்தீன் கோரி என்ற முஹம்மது கோரி அந்த பாக்கியம் தனக்கு கிடைக்க இறைவனை இறைஞ்சினார்.
பின் டெல்லி அரியணையில் கோரி அமர்ந்தும், பிருத்வி ராஜாவின் தாயார் ராஜமாதா
வாசவதத்தாவும் பிருதிவி மனைவி ராணி சம்யுக்தாவும், மகன் கோலாவும், பிருத்வியை விடுதலை செய்யக் கோரினர் .
அதற்கு கோரி " அவர் நலமாக என் நாட்டில் இருக்கிறார் .அவர் இங்கிருந்தால், கலகம் ஏற்படலாம் என்று சூழலை எடுத்துரைத்தார்
அவர் எனக்கு கப்பம் தந்து ஆட்சி செய்ய இணக்கம் தெரிவிப்பின் அவரை அஜ்மீர் அரியணையில் நானே ஏற்றி அமரச் செய்வேன். தாங்கள் அனுமதியளிப்பின் , தங்களின் பேரன் கோலாவையே இந்த அரியணையில் ஏற்றி மகிழ நான் இக்கணமும் தயாராக உள்ளேன் தாங்கள் என்னையும் மகனாக ஏற்றுக் கொள்ளுங்கள் "என்று முஹம்மது கோரி கூறினார்.
பின்னர் , அவர் அன்னை வாசவதத்தாவை நோக்கி,
"அன்னையே தாங்களோ கல்வி ஞானங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன் . இஸ்லாத்தின் இறுதி மாநபி முஹம்மது (صلى الله عليه وسلم ) அவர்களைப் பற்றி தங்களின் வேத நூலான
" அலோ உபநிஷத்தில் முன்னறிவிப்புச் செய்யப்பட்டிருப்பதாக அறியலானேன் . அது பற்றித் தங்களுக்கு யாதேனும் தெரியுமா ?" என்று கோரி வினவினார்.
உடனே அன்னை வாசவதத்தா " இதுதான் தாங்கள் கூறும் அலோ உபநிஷத் .இது எங்களின் அதர்வண வேதத்தின் ஒரு பகுதியாகும் இதில் தங்களின் திருநபியைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை படிக்கிறேன் . கேளுங்கள் .
" அல்லா ஜி யேஷ்டம் பரமம் பூரணம் பிரஹ்மாணம் அல்லாம் அல்லோ ரஸூல மஹாமத் கபரஸ்ய அல்லோ இல்லல்லே தி இல்லல்லலா . " _ படித்து முடித்து ' "
அதற்குரிய பொருளானது ,
"அல்லாஹ்வுக்கு துவக்கம் இல்லை. | அவன் சம்பூரணமானவன் , முழுப் பிரஹ்மானத்துடைய இரட்சகன் , சிவனுடைய பதவியிலிருக்கும் மஹாமத் , அல்லாஹ்வுடைய ரசூல். ஓம் ஹிரீம் மந்திர மூலமாகத் தீயோர்களை அழிக்கும் மஹாமத் . அல்லாஹ்வின் ரசூல். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியோன். வேறு எவருமில்லை" என்று பொருள் விரித்தார்.
சுல்தான் கோரி முஹம்மது அந்தச் சுவடி எடுத்துக் கொண்டு அஜ்மீர் காஜாவிடம் காட்டி விட்டு இந்துஸ்தானில் தன் ஆட்சி அதிகாரத்திற்கு துஆ செய்யச் சொல்ல, காஜா அவர்கள் , "கவலைப்படாதீர் 700 வருடங்கள் இந்துஸ்தானில் ஆட்சி நடைபெறும் "என்று கூற, பிருதிவி ராஜனின் மகன் கோலாவை அஜ்மீர் அரியணையில் ஏற்றி விட்டு, டெல்லியை தன் அடிமையும் தத்து மகனுமான குத்புத்தீன் ஐபெக்கிடம் ஒப்படைத்து விட்டு கஜினி சென்றார் கோரி முஹம்மது .
ஆமாம் . இஸ்லாமிய ஆட்சி இந்துஸ்தானில் 700 வருடங்கள் ஆட்சி செலுத்தியது. இந்த 700 வருடத்திற்குப் பிறகும் அந்த காஜாவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது .
வரலாற்று ஆய்வாளர்
ரஹ்மத் ராஜகுமாரன்
கருத்துகள்
கருத்துரையிடுக