நாய்
வீட்டில் நாயை வளர்க்காதீர்கள், அது மனிதனுக்கு தீமை தான் என்பதை 1438 வருடங்களுக்கு முன்பே கூறிச் சென்றார்கள் இறைவனின் தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.
ஆனால் நம்மில் சிலரோ வீட்டில் செல்லப் பிராணியாக நாயை வளர்த்து வருகிறார்கள்.
அவர்களின் கவனத்திற்கு இந்த வீடியோ...
1) உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அவர் அதைக் கொட்டி விட்டு ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவிக் கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.
ஆதார நூல் : முஸ்லிம் - 469
2) நாய் வாய்வைத்துவிட்ட உங்களது பாத்திரத்தைச் சுத்தம் செய்யும் முறை யாதெனில், அதை ஏழு தடவை தண்ணீரால் கழுவுவதாகும். முதல் தடவை மண்ணிட்டுக் கழுவ வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.
ஆதார நூல் : முஸ்லிம் - 471
3) யார் வேட்டை நாய், ஆடுகளைக் காவல்காக்கும் நாய் அல்லாமல் வேறு நாய்களை வளர்க்கிறாரோ அவருடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு "கீராத்" (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.
ஆதார நூல் : முஸ்லிம் - 3212
கருத்துகள்
கருத்துரையிடுக