*உங்களது பிள்ளைகளுக்கு மூன்று விஷயங்களை பற்றிய ஒழுக்கங்களை போதியுங்கள்*
உங்களுடைய நபியை அன்பு வைப்பது பற்றியும், அவர்களின் குடும்பத்தாரை (ஸாதாத்மார்களை) நேசிப்பது பற்றியும், அதன் பின் அல்குர்ஆனை ஒதுவதற்குமாகும்.
அபூபக்கர் சித்தீக் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்.
என் உயிர் யார் வசம் உள்ளதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக, அருமை நாயகம் முஹம்மது ﷺ அவர்களின் குடும்பத்தாரை நேசிப்பது என் குடும்பத்தாருடன் இணைந்து இருப்பதை விடவும் எனக்கு மிகப்பிரியமாகும்.
1. அஹ்லே பைத்துகளை தொடர்வதால் நேர்வழியில் நிலைத்திருக்க முடியும்.
2. அழிவிலிருந்து பாதுகாப்பு கிடைக்கின்றது
3. பாவம் மன்னிக்கப்பட காரணமாகின்றது
பல வலிமார்கள் விலாயத் என்னும் வலித்துவம் பெற்றதே பூமான் நபியின் புனித குடும்பத்தாரை நேசித்ததினால்தான்.
இமாம் அஹ்மத் பின் ஹம்பலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னை நோவினை செய்த கலீபா மாமூன் ரஷீத் என்பவரை மன்னித்து விட்டார்கள் காரணம், அவர் அஹ்லுல்பைத் என்பதால். நாளை மறுமையில் அல்லாஹ்வின் ரஸூலின் குடும்பத்திற்கு எதிராகவா வழக்காடுவேன் என்றார்கள்.
அஹ்லேபைத்துகள் தவறே செய்தாலும் அவர்கள் மீது வழக்கு தொடரக்கூடாது. அவர்களை சிறை பிடிக்கக் கூடாது என்றார்கள் ஷைகு முஹியித்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
சொல்லால் சொல்லிடவோ எழுத்தால் வடித்திடவோ முடியாத பெரும் சிறப்பிற்கும் கௌரவத்திற்கும் உரிய உத்தம நபிகள் நாயகம் ﷺ அவர்களின் உயர் குடும்பத்தார்கள் அவர்களில் உள்ளவர்கள்தான் நமது குவலயம் போற்றும் குருநாதர் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு, குத்புல் ஹிந்த் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி ரலியல்லாஹு அன்ஹு, குத்புல் மஜீத் நாகூர் ஷாகுல் ஹமீத் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு, திருச்சி தப்லே ஆலம் நத்ஹர்ஷா வலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு போன்ற மாபெரும் மகான்கள், அவர்களின் வழியாகத்தான் இன்றளவும்
இஸ்லாம் எழுச்சி பெற்று நிற்கின்றது. அத்தகைய ஜெயசீலர்களை போற்றுவோம், அவர்களின் மகிமைகளை உணர்வோம்.
நூல்: மஹ்லரா அரபிக்கல்லூரி சிறப்புமலர்
கருத்துகள்
கருத்துரையிடுக