அன்னை உம்மு ஸலமா

அன்னை உம்மு ஸலமா ( ரழி ) அவர்களின் இயற்பெயர் ஹின்த். அவர்களுக்கு ஸலமா என்ற மகன் பிறந்ததிலிருந்து உம்மு ஸலமா ( ஸலமாவின் தாய் ) என்று அழைக்கப்பட்டார்கள். அவர்களின் கணவர் அப்துல்லாஹ்வும் அபூ ஸலமா ( ஸலமா வின் தந்தை ) என்றே அழைக்கப்பட்டார்.


உஹுத் போரில் கலந்து கொண்ட போது அபூ உஸாமா அல் ஜஷ்மீ என்பவன் எறிந்த அம்பு அபூ ஸலமா ( ரழி ) அவர்களின் தொடையை பதம் பார்க்க ஒரு மாத காலம் மருத்துவம் செய்தார்கள் குணம் அடைந்து வருவதாக அவர்கள் நினைத்திருந்தாலும் அவர்களை அறியாமல் புண் முற்றிக் கொண்டு வந்தது


ஹிஜ்ரத் செய்து முப்பத்தைந்தாவது மாதத்தின் துவக்கத்தில் முஹர்ரம் மாதத்தில் நபி ஸல் அவர்கள் ஒரு படையை பனூ உஸைத் கூட்டாத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள் அக்கூட்டத்தில் அபூ ஸலமா ( ரழி ) சென்று பத்து நாட்கள் கழித்து வந்தார்கள் அப்போது அவர்களின் புண் வெடித்து நோயுற்று ஜமாதுல் ஆகிர் பிறை 3 ல் மரணித்தார்கள்.


அபூ ஸலமா ( ரழி ) அவர்களுடன் அன்னை உம்மு ஸலமா ( ரழி ) அவர்கள் வாழ்ந்த போது ,” என்னுடைய கட்டளைக்கு நீ கட்டுப்படுவாயா ?” என்று அபூ ஸலமா ( ரழி ) கேட்டார்கள்.” உங்களுக்குக் கட்டுப்படத் தானே நான் உள்ளேன் “ என உம்மு ஸலமா ( ரழி ) கூறினார்கள். “ அப்படியானால் நீ மறுமணம் செய்து கொள்ள வேண்டும் “ என்று கூறிவிட்டு , “ இறைவா ! எனக்குப் பிறகு உம்மு ஸலமாவிற்கு அவரை கவலை கொள்ளச் செய்யாத அவரை நோவினை செய்யாத , என்னை விடச் சிறந்த ஒருவரைக் கொடுப்பாயாக !” என்று பிரார்த்தனை செய்தார்கள் . அவர்கள் இறந்த போது , ‘ அபூ ஸலமாவை விடச் சிறந்த மனிதர் எவர் இருக்கிறார் ‘ என்று நான் கேட்டுக் கொண்டேன் . அவருடன் இப்படி இப்படியெல்லாம் நான் வாழ்ந்தேன் என்று எண்ணிக் கொண்டேன் பின்னர் நபி ஸல் அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள்.


நூல் : தபகாத் இப்னு ஸ அத் பாகம் 8 பக் 88 , அல் இஸாபா 11845




 நபி ஸல் அவர்கள் உம்மு ஸலமா ( ரழி ) அவர்களை எவ்வாறு திருமணம் செய்தார்கள் என்ற விபரமும் ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது


”உங்களில் எவருக்கேனும் துன்பம் ஏற்பட்டால் அவர், “ நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்விற்கு உரியவர்கள் ; நிச்சயமாக நாங்கள் அவனிடமே திரும்பச் செல்வபர்கள்; ( இறைவா !) எனக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு உன்னிடமே நன்மையை எதிர்பார்க்கிறேன் . அதற்குரிய கூலியைத் தருவாயாக ! என்று கூறுங்கள் “ என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.


எனது கணவர் அபூ ஸலமா இறக்கும் நேரத்தில் ,” இறைவா ! என் மனைவிக்கு சிறந்த ஒன்றைப் பகரமாக வழங்கு !” என்று பிரார்த்தித்தார்கள் . அவர்கள் இறந்த போது,” நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்விற்கு உரியவர்கள்; நிச்சயமாக நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள் ; ( இறைவா ! ) எனக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு உன்னிடமே நன்மையை எதிர்ப்பார்க்கிறேன், அதற்குரிய கூலியைத் தருவாயாக !” என்று கூற எண்ணிய போது அபூ ஸலமாவை விடச் சிறந்தவர் யார் இருக்கிறார் என்று நான் சொல்லிக் கொண்டு இறுதியில் ( அந்த பிரார்த்தனையைக் ) கேட்டு விட்டேன்.

என்னுடைய இத்தா காலம் முடிந்தவுன் அபூபக்ர் ( ரழி ) என்னைப் பெண் கேட்டார்கள். நான் மறுத்து விட்டேன். பின்னர் உமர் ( ரழி ) பெண் கேட்டார்கள் அவர்களையும் நான் மறுத்து விட்டேன். பிறகு நபி ஸல் அவர்கள் பெண் கேட்டு அனுப்பினார்கள் அதற்கு ,” நான் ரோஷம் நிறைந்த பெண் . மேலும் எனக்குக் குழந்தைகள் உள்ளன. எனக்குப் பொறுப்பாளர்களும் இல்லை” என்று நபி ஸல் அவர்களிடம் தெரிவிக்குமாறு சொல்லியனுப்பினேன்.


‘ நான் குழந்தை உள்ளவளாக இருக்கிறேன் ‘ என்று கூறினீர்கள் அல்லாஹ் த ஆலா உங்கள்குழந்தைகளுக்குப் போதுமானவனாக இருப்பான் “ நான் ரோஷம் நிறைந்தவள் “ என்று கூறினீர்கள் உங்கள் ரோஷ உணர்வைப் போக்கும் வண்ணம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறேன் . என்னை வெறுக்கக் கூடிய உங்களுடைய பொறுப்பாளர் இங்கோ வெளியிலோ இல்லை என்று நபி ஸல் அவர்கள் சொல்லியனுப்பினார்கள்.

நான் ( என் மகன் உமரை நோக்கி ) “ உமரே ! என்னை நபி ஸல் அவர்களுக்குத் திருமணம் செய்து வை ! “ என்று கூறினேன் ( திருமணம் முடிந்தது )

“உன்னுடைய இன்ன சகோதரிக்கு ( அதாவது நபியவர்களின் மற்ற மனைவிக்கு ) வழங்கிய இரண்டு திருகை , இரண்டு தோல் பாத்திரம் , பேரீத்த நார்கள் அடைக்கப்பட்ட தலையணை இவற்றில் அதையும் நான் உனக்குக் குறைத்து வழங்க மாட்டேன் “ என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

படிப்பினை 

எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் இந்த துஆவை ஓதினால் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் பலன் கிடைக்கும் 


عن النبي ﷺ أنه قال: ما من عبد يصاب بمصيبة فيقول: إنا لله وإنا إليه راجعون، اللهم آجرني في مصيبتي، وأخلف لي خيرًا منها؛ إلا آجره الله في مصيبته، وأخلف له خيرًا منها.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?