நலம் விசாரித்தல்
நலம் விசாரித்தல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا مِنْ مُسْلِمٍ يَعُودُ مُسْلِمًا غُدْوَةً إِلاَّ صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُمْسِيَ وَإِنْ عَادَهُ عَشِيَّةً إِلاَّ صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُصْبِحَ وَكَانَ لَهُ خَرِيفٌ فِي الْجَنَّةِ ) முஸ்லிமான ஒருவர் மற்றொரு முஸ்லிமைக் காலையில் நலம் விசாரிக்கச் சென்றால் மாலை வரை எழுபதாயிரம் வானவர்கள், அவருக்காக பிரார்த்திக்கொண்டிருப்பார்கள். அவர் மாலையில் நலம் விசாரிக்கச் சென்றால் (மறுநாள்) காலை வரை எழுபதாயிரம் வானவர்கள் அவருக்காக பிரார்த்திக்கொண்டிருப்பார்கள். மேலும் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு தோட்டம் கிடைக்கும். அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-891
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا دَخَلْتَ عَلَى مَرِيضٍ فَمُرْهُ أَنْ يَدْعُوَ لَكَ فَإِنَّ دُعَاءَهُ كَدُعَاءِ الْمَلاَئِكَةِ ) நீங்கள் நோயாளியிடம் சென்றால், அவரிடம் உங்களுக்காக பிரார்த்திக்கக் கோருங்கள். ஏனெனில் அவரது பிரார்த்தனை வானவர்களின் பிரார்த்தனைப் போல் (ஒப்புக்கொள்ளப்படுகிறது.) அறிவிப்பாளர்:- உமர் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-1441
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் நோயாளிகளிடம் சென்றால், அவர்கள் நீண்ட நாள் வாழ்வார்கள் என்று கூறி அவர்களை உற்சாகப்படுத்துங்கள். அவ்வாறு நீங்கள் பேசுவதால் அவர்களின் மரணத்தைத் தடுத்து விட முடியாது. எனினும் நோயாளிகளின் இதயத்துக்கு அதனால் மகிழ்ச்சி ஏற்படும்.
நோய் நலம் விசாரிக்கச் செல்லும் போது அந்த நோயாளியிடம் "வந்திருப்பது பயங்கரமான வியாதி என்றும், அந்த வியாதியால் இறந்து போனவர்கள் பற்றியும், இதனால் பக்க விளைவுகள் பல ஏற்படக்கூடும் என்றும், காலம் முழுவதும் பத்தியம் இருந்து பை பையாக மாத்திரை சாப்பிட வேண்டும் என்றும் மனதை நிலைகுழைய செய்யும் வார்த்தைகளை பேசுவது மாபெரும் தவறாகும்.
ஒரு நோய் குணமாவது பாதி மனதையும், மீதி மருந்து மாத்திரைகளையும் கொண்டு தான் என்கிறனர் மனநல மருத்துவர்கள்.
ஆகவே ஒரு நோயாளியைப் பார்க்கும் போது நம்பிக்கை ஏற்படும் வகையில் ஆறுதலாகப் பேசி அவருக்கு தெம்பை உண்டாக்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக