தொழுகை

தொழுகையின் முக்கியத்துவம் 
இறைவனால் கடமையாக்கப்பட்ட வணக்கங்களில் முதன்மையானதும் முக்கியமானதும் தொகைதான்
ஏனைய எல்லா வணக்கங்களை விடவும் தொழுகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் மற்ற வணக்கங்களை அல்லாஹ் வஹியின் மூலம் கடமையாக்கினான், தொழுகையை மட்டும் தான் நேரடியாக நபியை அழைத்து எந்தத் திரையும் இல்லாமல் அல்லாஹ்வே வழங்கினான்.
ஒரு மனிதன்
لا اله الا الله محمد الرسول الله
என்ற கலிமாவை மனதால் உறுதி கொண்டு நாவால் மொழிந்த பின் முஸ்லிமாகிறான். அம்முஃமின் வெற்றியை அல்லாஹ் தன் திருமறையில்,
 قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ‏ 
நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டனர். (அல்குர்ஆன் : 23:1)
الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ‏ 
அவர்கள் எத்தகையவரென்றால் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள். (அல்குர்ஆன் : 23:2)என்று கூறுகிறான்.
அல்லாஹ் தன் அருள்மறையில் சுமார் 90 இடங்களில் தொழுகையைப் பற்றிக் கூறியுள்ளான்.
தொழுகையில் இறைவனோடு உரையாடுதல்!
தொழுகையில் ஓதுவதை எனக்கும் எனது அடியானுக்கும் மத்தியில் பங்கிட்டுள்ளேன். என் அடியான் கேட்டவை அவனுக்கு உண்டு. ‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்‘ என்று ஒருவன் கூறும் போது ‘என்னை என் அடியான் புகழ்ந்துவிட்டான்‘ என்று அல்லாஹ் கூறுகிறான். அவன் ‘அர்ரஹ்மானிர் ரஹீம்‘ என்று கூறும் போது ‘என் அடியான் என்னைப் பாராட்ட வேண்டிய விதத்தில் பாராட்டிவிட்டான்‘ என்று அல்லாஹ் கூறுகிறான். ‘மாலிக்கி யவ்மித்தீன்‘ என்று கூறும் போது என் அடியான் ‘என்னைக் கௌரவப்படுத்த வேண்டிய விதத்தில் கௌரவப்படுத்தி விட்டான்‘ என்று அல்லாஹ் கூறுகிறான். ‘இய்யாக நஃபுது வ இய்யாக நஸ்தயீன்‘ என்று கூறும் போது ‘இதுதான் எனக்கும் எனது அடியானுக்கும் இடையே உள்ள உறவாகும்‘ என்று அல்லாஹ் கூறுகிறான். ‘இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம்‘ என்று கூறும் போது ‘என் அடியானின் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும்‘ என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 655)
மறுமையில் முதல் விசாரணை 
عن أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ( إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عَمَلِهِ صَلَاتُهُ فَإِنْ صَلُحَتْ فَقَدْ أَفْلَحَ وَأَنْجَحَ وَإِنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسِرَ ، فَإِنْ انْتَقَصَ مِنْ فَرِيضَتِهِ شَيْءٌ قَالَ الرَّبُّ عَزَّ وَجَلَّ : انْظُرُوا هَلْ لِعَبْدِي مِنْ تَطَوُّعٍ فَيُكَمَّلَ بِهَا مَا انْتَقَصَ مِنْ الْفَرِيضَةِ ؟ ثُمَّ يَكُونُ سَائِرُ عَمَلِهِ عَلَى ذَلِكَ )
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –
மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்
பிரயாணத்தில் தொழுக வேண்டும் 
போர்க்களமாக இருந்தாலும் தொழ வேண்டும்
போர்களத்திலும் தொழுகையை நிலைநிறுத்த வேண்டும்: –
(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்; அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும். (அல்குர்ஆன் 4:102)
தொழுகை சுவர்க்கத்தின் திறவுகோல். 
எனது கண்களின் குளிர்ச்சி தொழுகையில் வைக்கப்பட்டுள்ளது என்று நபி (ஸல்)சொன்னதாக அனஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள் (நஸாயி)
தொழுகை தீனின் தூண் என்றும் நபிகளார் (ஸல்)அவர்கள் நவின்றுள்ளார்கள்.
சுவர்க்கத்தின் திறவுகோல் தொழுகையாகும். தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும்.(அஹ்மது).
எவர் இந்த ஐந்து நேர தொழுககளை பேணுதலாக தொழுதுவருகிறாரோ.அவர் அல்லாஹுதாஆலாவை வணங்குவதை விட்டும் மறந்தவர்களில் கணிக்கப்படமாட்டார் என்று அருமை நபி (ஸல்)அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அபூ ஹுரைரா (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள் (இப்னு குஸைமா)
قال رسول الله صلى الله عليه وسلم: إن أمتي يدعون يوم القيامة غرًّا محجلين من أثر الوضوء. رواه البخاري، ومسلم. و(الغرة): بياض الوجه، و(التحجيل): بياض في اليدين والرجلين
தொழுகையை விடுவோர் நரகில் நுழைவார்: –
நாங்கள் வியாபாரத்திற்கு செல்கிறோம். அதனால் எங்களால் தொழுகையை நிறைவேற்ற முடிவதில்லை என்று கூறி தப்பித்து கொள்ள நினைக்கின்றார்கள்.
ஆனால் இவர்கள் அல்லாஹ்விடம் இருந்து தப்பிக்க முடியாது. நிச்சயம் இவர்கள் அல்லாஹ்விடம் மாட்டிக் கொள்வார்கள். இவர்கள் கூறும் காரணங்கள் ஒருபோதும் சரியாகாது. வியாபாரம் மற்றும் வேலை அனைத்துமே இவ்வுலக வாழ்க்கைக்காக, இவ்வுலகத்தில் உயிர் வாழ மட்டுமே உதவும். இதற்காக நாம் முக்கியத்துவம் கொடுப்பதோடு மறுஉலக வாழ்க்கைக்காக நாம் அன்றாடம் சிறிது நேரம் ஒதுக்கி தொழுவதை, கண்ட காரணங்களை கூறி தவிர்ப்பது எந்த முறையிலும் சரியாகாது. பல உண்மையற்ற காரணங்களைக் கூறி தொழுகையை விட்டுவிடும் இழிநிலை முஸ்லிம்களிடையே தற்போது அதிகமாக காணப்படுகிறது. இன்றைய முஸ்லிம்களில் பலர் பெயரளவிலேயே முஸ்லிம், அவர்களிடையே எந்த ஒரு இஸ்லாமிய பண்பாட்டையும் காணமுடிவதில்லை. இஸ்லாத்தின் அடிப்படை ஆணிவேரான தொழுகையே இவர்களிடம் காணப்படுவது இல்லை.
இவர்கள்தான் மாற்று மதத்தவர்களிடையே இஸ்லாத்தை பற்றி தவறான கருத்துக்கள் ஏற்பட வழிவகுக்கின்றனர் ஒரு முஸ்லிமின் ஐந்து முக்கிய கட்டாய கடமைகளில் முதன்மையானது தொழுகையே. தொழுகை இல்லாமல் எப்படி இவர்கள் முஸ்லிம்கள் என கூறிக் கொள்கின்றார்கள் என்பது தெரியவில்லை. கேட்டால் அதற்கு ஆயிரம் நொண்டிக் காரணங்கள் சொல்கிறார்கள். அவை ஏற்றுக் கொள் ளப்படமாட்டாது. தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்கள் பற்றி குர்ஆனில்,
فِىْ جَنّٰتٍ يَتَسَآءَلُوْنَۙ‏ 74:41 عَنِ الْمُجْرِمِيْنَۙ‏ 74:42 مَا سَلَـكَكُمْ فِىْ سَقَرَ‏ قَالُوْا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّيْنَۙ‏74:44 وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِيْنَۙ‏ 74:45 وَكُنَّا نَخُوْضُ مَعَ الْخَـآٮِٕضِيْنَۙ‏
"குற்றவாளிகளிடம் உங்களை ("ஸகர்" எனும்) நரகில் நுழைவித்தது எது? எனக் கேட்பார்கள்."
"அதற்கவர்கள் நாம் தொழுகையாளிகளில் இருக்க வில்லை", "மேலும் "ஏழைகளுக்கு உணவளிப்பவர்களாகவும் இருக்க வில்லை, எனக் கூறுவார்கள்." "இன்னும் நாம் (வீணானவற்றில்) மூழ்கியிருந்தோருடன் மூழ்கி இருந்தோம்". (74: 41, 42, 43, 44,45)
தொழாதவர்கள் மறுமையில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபை இப்னு கலஃப் போன்றவர்களோடு எழுப்பப்படுவான்: –
وروى الإمام أحمد رحمه الله عن عبدالله بن عمرو بن العاص رضي الله عنهما قال: ذكر النبي ﷺ الصلاة يوما بين أصحابه فقال: من حافظ عليها كانت له نورًا وبرهانًا ونجاة يوم القيامة، ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاة، وحشر يوم القيامة مع فرعون وهامان وقارون وأبي بن خلف 
யார் தொழுகையைப் பேணித் (தொழுகின்றாரோ) அது அவருக்கு மறுமையில் ஒளியாகவும், அத்தாட்சியாகவும், பாதுகாக்கக் கூடியதாகவும் ஆகிவிடும். யார் அதை பாதுகாத்துத் தொழ வில்லையோ, அது அவருக்கு ஒளியாகவோ, அத்தாட்சியாகவோ, பாதுகாப்பாகவோ இருக்காது. இன்னும் அவன் மறுமையில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபை இப்னு கலஃப் போன்றவர்களோடு எழுப்பப்படுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், தப்ரானி)
ஏன் பிர்அவுன் ஹமான் கூட எழுப்ப படுவார்கள் 
وهذا وعيد عظيم لمن لم يحافظ على الصلاة.
قال بعض أهل العلم في شرح هذا الحديث: إنما يحشر مضيع الصلاة مع فرعون وهامان وقارون وأبي بن خلف؛ لأنه إن ضيعها من أجل الرئاسة والملك والإمارة شابه فرعون الذي طغى وبغى بأسباب وظيفته؛ فيحشر معه إلى النار يوم القيامة، 
وإن ضيعها بأسباب الوظيفة والوزارة شابه هامان وزير فرعون الذي طغى وبغى بسبب الرئاسة؛ فيحشر معه إلى النار يوم القيامة، ولا تنفعه الوظيفة ولا تجيره من النار،
 وإن ضيعها بأسباب المال والشهوات أشبه قارون -تاجر بني إسرائيل- الذي قال الله فيه: إِنَّ قَارُونَ كَانَ مِنْ قَوْمِ مُوسَى فَبَغَى عَلَيْهِمْ الآية [القصص: 76] فشغل بأمواله وشهواته، وعصى موسى واستكبر عن اتباعه فخسف الله به وبداره الأرض، فهو يتجلجل في الأرض إلى يوم القيامة عقوبة عاجلة مع عقوبة النار يوم القيامة،
 والرابع: الذي ضيعها بأسباب التجارة والبيع والشراء والأخذ والعطاء، فشغل بالمعاملات والنظر في الدفاتر، وماذا على فلان؟ وماذا على فلان؟ حتى ضيع الصلوات، فهذا قد شابه أبي ابن خلف -تاجر أهل مكة- من الكفرة؛ فيحشر معه إلى النار يوم القيامة، وقد قتل أبي بن خلف كافرًا يوم أحد، قتله النبي ﷺ بيده الشريفة، عليه الصلاة والسلام، وهذا الوعيد يدل بلا شك على كفر من ترك الصلاة وإن لم يجحد وجوبها، فنسأل الله لنا ولجميع المسلمين العافية من مشابهة أعدائه[1].
قال بعض أهل العلم:
(وإنما يُحشر تارك الصلاة مع هؤلاء الأربعة؛ لأنه إنما يشتغل عن الصلاة بماله، أو بملكه، أو بوزارته، أو بتجارته، فإن اشتغل بماله حُشر مع قارون، وإن اشتغل بملكه حُشر مع فرعون، وإن اشتغل بوزارته حشر مع هامان، وإن اشتغل بتجارته حُشر مع أبي بن خلف تاجر الكفار بمكة)[6].
தொழாத மக்களுக்கான எச்சரிக்கை இதோ.....
ورأى قومًا تَرْضَخُ1 رُءُوسُهُمْ ثم تَعُودُ كما كانتْ فقالَ جبريلُ: هؤلاءِ الذينَ تَتَثَاقَلُ رُءُوسُهُمْ عنْ تأديةِ الصلاةِ.
நபி(ஸல்)அவர்கள் மிஃராஜின் போது "ஒரு கூட்டத்தினரை கடந்து செல்கிறார்கள் அவர்களின் தலைகள் வெட்டப்பட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகின்றன.இவர்கள் யார்?" என ஜிப்ரயீல் (அலை)அவர்களிடம் கேட்க "இவர்கள் கடமையான தொழுகைகளை நிறை வேற்றாதவர்கள் "என பதில் கூறினார்கள் (நூல்: தப்ரானி)
وعن معاذ بن جبل – رضي الله عنه -، قال: قال رسول الله – صلى الله عليه و سلم -: ((من ترك صلاة مكتوبة متعمداً فقد برئت منه ذمة الله)) (
தொழுகையை விடுபவர் மூன்று பேர்
وما رخَّص النبي - صلَّى الله عليه وسلَّم - في ترْكها إلا لثلاثة: ((المجنون حتى يُفيق، والصبي حتى يبلُغ الحُلم، والنائِم حتى يستيقظ))، فتارك الصلاة واحدٌ من هؤلاء الثلاثة، وكل إنسان أدرى بحقيقة نفْسه.
1. பைத்தியம் 2. சிறுவர்கள் 3. தூங்குபவர்
அல்லாஹ் நம்மை இறுதி மூச்சு வரை தொழுகையாளிகளாக ஆக்குவனாக
ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவம்
கண் பார்வையற்ற ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னைப் பள்ளிக்கு அழைத்து வருபவர் யாருமில்லை, எனவே வீட்டிலேயே தொழுவதற்கு அனுமதிக்குமாறு வேண்டினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி வழங்கி அவர் சென்று கொண்டிருக்கும்போது அவரை அவர்கள் அழைத்து தொழுகைக்காக பாங்கு சொல்லப்படுவதை நீர் கேட்கிறீரா? என்றனர். அதற்கவர் 'ஆம்' என்றதும் அந்த அழைப்புக்கு நீ (ஜமாஅத்துக்கு வருவதன் மூலம்) பதிலளிப்பீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் - முஸ்லிம்.
ஜமாஅத் தொழுகையின் சிறப்பு
ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது தன்னுடைய வீட்டில் தொழுவதை விடவும், கடைவீதியில் தொழுவதை விடவும் 25 மடங்கு அல்லது அதைவிட அதிகம் சிறந்ததாகும். ஒருவர் அழகிய முறையில் உளூச் செய்து தொழுகைக்காகவே பள்ளியை நோக்கிச் செல்வாரானால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பதவி உயர்த்தப்பட்டு ஒரு பாவம் மன்னிக்கப்படுகின்றது.
அவர் தொழுது முடித்துவிட்டு அவ்விடத்திலேயே இருக்கும்வரை வானவர்கள், இறைவா! இவருக்கு நீ அருள் புரிவாயாக! என்று பிராத்தித்துக் கொண்டேயிருப்பார்கள். உங்களில் ஒருவர் (ஜமாஅத்) தொழுகையை எதிர்பார்த்து (தொழும் இடத்திலேயே இருந்து) கொண்டிருப்பவர் தொழுகையிலேயே இருப்பார் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் – அபூஹுரைரா (ரலி) நூல்:புகாரி 647, முஸ்லிம்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள். அப்போது அமைதியான முறையிலும் கண்ண்யமாகவும் செல்லுங்கள். அவசரமாகச் செல்லாதீர்கள். உங்களுக்கு கிடைத்த ரக்அத்துகளை (ஜமாஅத்துடன்) தொழுங்கள், உங்களுக்குத் தவறிப்போனதைப் பூர்த்தி செய்யுங்கள் – நூல் : புகாரி 636, முஸ்லிம், திர்மிதி 326.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம் அப்போது சிலர் வேகமாக வரும் சப்தத்தை அவர்கள் செவியுற்றனர், தொழுகையை முடித்ததும் உங்களுக்கு என்ன நேர்ந்தது, (இவ்வளவு வேகமாக வந்தீர்கள்) என்று கேட்டார்கள், அதற்குத்தோழர்கள், நாங்கள் தொழுகைக்காக விரைந்து வந்தோம் என்றனர். அவ்வாறு செய்யாதீர்கள், தொழுகைக்கு வரும்போது அமைதியாக வாருங்கள்! உங்களுக்குக் கிடைத்ததைத் தொழுது கொள்ளுங்கள், தவறியதை நிறைவு செய்து கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் – அபூகதாதா (ரலி) நூல் - புகாரி 635, முஸ்லிம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?