👆🏾 *இமாம் ஷாபிஈ* ரஹிமஹுல்லாஹ் அவர்களின் *கவிதை:*
காலம்- தான் நாடியதைச் செய்யட்டும், விட்டுவிடு!
விதியின் தீர்ப்பினை சந்தோஷப்படு!
காலத்தின் சோதனை கண்டு பதறாதே!
காசினியின் சோதனைகள் நிரந்தரமற்றவை.
திகில்களில் உறுதி படைத்த மனிதனாயிரு!
உன் குணம் ஈகையும் நிறைவேற்றலுமாயிருக்கட்டும்.
உன் குறைகள்- படைப்புகள் மத்தியில் அதிகமாக-
அவற்றுக்கு உறையிருப்பது -உனக்கு ஆனந்தமான
கொடையால் மறைந்துகொள்!
கொடை- சகல குறைகளையும் மறைக்குமாகும்!
சத்துருக்களுக்கு ஒருபோதும் தலைக்குனிவைக் காட்டிவிடாதே!
சத்துருக்களின் அவலமகிழ்வு சோதனையாகும்!
கஞ்சனிடம் கொடையை நம்பாதே!
தாகித்தவனுக்கு நெருப்பில் தண்ணீர் கிடையாது!
தாமதம்- உன் ரிஸ்கை குறைப்பதுமில்லை.
களைப்பு -ரிஸ்கை கூட்டுவதுமில்லை.
கவலையும் நிலையற்றது, மகிழ்ச்சியும் நிலையற்றது,
வறுமையும் நிலையற்றது,
செழிப்பும் நிலையற்றது,
திருப்தியுறுகிற இதயம் கொண்டவனாக நீ
இருந்தால்-
நீயும் & உலகையே உரிமையாக வைத்திருப்பவனும் சமமே!
எவரது முற்றத்தில் மரணம் இறங்கிவிட்டதோ?-
அவரை பூமியும் காப்பாற்றாது, வானமும் காப்பாற்றாது!
அல்லாஹ்வின் பூமி விசாலமானதெனினும்,
விதி இறங்கிவிட்டால் வெளியும் நெருக்கடியாகிவிடும்!
காலம் ஒவ்வொரு பொழுதிலும் துரோகமிழைக்கட்டும், விட்டுவிடு!
மருந்து மரணத்தை விட்டும் (உன்னை) அப்புறப்படுத்தாது!...mkq
கருத்துகள்
கருத்துரையிடுக