#இணையதளம் #இன்டர்நெட் #இஸ்லாமியப்பார்வையில் இணைய தளம்
﷽﷽﷽﷽﷽﷽﷽﷽
🌼 *ஜுமுஆ பயான் குறிப்பு TEXT 10/12/21*🌼
🌹الصــلوة والسلام عليك يارسول الله ﷺ🌹
*O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்
உலமா பெருமக்களுக்கான
பயான் குறிப்புத் தளம்
🌹🌹 *தலைப்பு:-*
*"இணையதள ஒழுக்கங்கள்"*
🌸🌸 *கட்டுரையாக்கம்:-*
*_ஜுமுஆ முபாரக் தகவல் மேடை. தலைசிறந்த ஜுமுஆ பயான் குறிப்புரைத்தளம்… موقع خطب الجمعة*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*
*For Youtube channel subscribe:-*
*நமது Youtube channelல் இணையுங்கள்*
https://www.youtube.com/channel/UC9_wwAcpCkhbFKxpAlGTkHA
ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ
*"இணையதள ஒழுக்கங்கள்"*
Skip to content
ஜுமுஆ முபாரக் தகவல் மேடை. தலைசிறந்த ஜுமுஆ பயான் குறிப்புரைத்தளம்… موقع خطب الجمعة
MENU AND WIDGETS
இணையதள ஒழுக்கங்கள்…
♣ ஜனவரி – 2020 – 31- ந் தேதி. ஹிஜ்ரி-1441 – [جمادى الآخرة] ஜுமாதல் ஆகிரா – 05 – ந் தேதி முதல் வார ஜுமுஆ பேருரையின் குறிப்புரை. வெளியீட்டு எண் : 099.♣
الحمد لله، نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا، وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هاد له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له،وأشهد أن محمداً عبده ورسوله. .اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ والصلاة والسلام على رسول الله سيدنا محمد الصادق الوعد الامين على آله وصحبه أجمعين. أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْم ﺑِﺴْﻢِ ﺍﻟﻠﻪِ ﺍﻟﺮَّﺣْﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣِﻴْﻢ السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه
📚أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ + بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 📚
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்).
🌹اَلصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَرَسُوۡلَ الله ﷺ🌹 🌹اَلصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَحَبِيۡبَ اللهﷺ🌹
✍🏻✍🏻 ஜுமுஆ குறிப்புரையின் தலைப்பின் விளக்கம் ✍🏻✍🏻:
‘‘இணையதள ஒழுக்கங்கள்…!”[இன்று சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரைக்கும் செல் போன், இண்டர் நெட் சேவைகளை பயன்படுத்துகின்றன. நம் இஸ்லாமிய மார்க்கம் எல்லா விஷயங்களுக்கும் ஒழுக்கம் சொல்லித்தருவது போல் இந்த இண்டர் நெட் சேவைகள் சம்பந்தமாக சில ஒழுக்கங்களையும் சொல்லித்தருகிறது.
அதனடிப்படையில் இணையதள சேவைகளை எப்படி பயன்படுத்த வேண்டும்? எப்படி பயன்படுத்த கூடாது? இணையதள சேவைகளில் – ஹலால் – ஹராம் – மக்ருஃக் – ஜாயிஸ் – போன்றவைகள் சம்பந்தமாக ஜுமுஆ குறிப்புரை] +++++
♣ முன்னுரை: المقد مة INTRODUCTION & துவக்கவுரை:-
அன்புள்ளவர்களே! [جمادى الآخرة] ஜுமாதல் ஆகிரா முதல் வார ஜுமுஆவில் உள்ளோம்.
இன்று பல வீடுகளில் குழந்தைகளை சமாதானப்படுத்தும் சாதனம் செல்போன்தான். அழும் குழந்தை கூட செல்போனை கையில் கொடுத்தால் அமைதியாகிவிடுகிறது. ஆனால் குழந்தைகளின் நச்சரிப்பில் இருந்து தப்பிக்க, நன்மை, தீமை அறியாத பருவத்தில் இருக்கும் அவர்களிடம் செல்போனை கொடுப்பது சரியா என்ற கேள்வி எழுகிறது.
செல்போன் போன்ற தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தைச் செலவிடுவது குழந்தைகளின் உடல்நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதே குழந்தை நல மருத்துவர்களின் கருத்து.
தங்களது குழந்தைகளின் உடல்நலத்தில் தொழில்நுட்பக் கருவிகளின் திரைகள் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்று சரிவரப் பரிசோதித்த பெற்றோர்கள் பெரிய அளவில் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகள் எப்போதெல்லாம் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தலாம் என்பதற்கு தக்க கட்டுப்பாடுகளை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு கண்டிப்பாக அதை அனுமதிக்கக்கூடாது என்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
நவீன தொழில்நுட்பக் கருவிகளுடன் குழந்தைகள் செலவிடும் நேரம், அவர்களது தூக்கம், உடற்பயிற்சி, குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தை எந்த வகையிலும் பாதிக்காமல் இருக்கவேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஒரு மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த முடிவுகள் குறித்த விவாதம் குழந்தைகள் நல மருத்துவர்கள், பெற்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் இடையே எழுந்திருக்கிறது.
இந்த ஆராய்ச்சிக்காக டி.வி., செல்போன், கணினி போன்ற பல்வேறு தொழில்நுட்பக் கருவிகளில் குழந்தைகள் செலவிடும் நேரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், 14 வயதுடைய ஆண், பெண் குழந்தைகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய மன உளைச்சல் சிறுவர்களைவிட சிறுமிகளுக்கு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, இங்கிலாந்தின் ராயல் குழந்தைகள் நல கல்லூரி, 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது.
அந்த அறிக்கையில், அடிக்கடி பல தளங்களில் கூறப்படுவதைப் போன்று தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் நேரத்தைச் செலவிடுவது உடல்நலனுக்கு மிக மோசமான விளைவை உண்டாக்கும் என்று கூற முடியாது.
ஆனால் அதேவேளையில், வரம்பை மீறி அதிகளவிலான நேரத்தை மின்னணு திரைகளில் செலவிடுவதற்கும், உடல் பருமன், மனஅழுத்தம் போன்றவற்றுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கண்ட முடிவு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராயல் கல்லூரி ஆய்வாளர்கள், உடல் பருமன், மனஅழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை கொண்டுள்ளவர்கள் அதிக நேரத்தை மின்னணு திரைகளில் செலவிடுகிறார்களா அல்லது அதிக நேரத்தை மின்னணு திரைகளில் செலவிட்டதால் அவர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதா என்பதில் தெளிவில்லை எனத் தெரிவித்துள்ளது.
குழந்தைகளின் உடல்நலனுக்கும் அவர்கள் மின்னணு திரைகளில் நேரத்தைச் செலவிடுவதற்கும் தொடர்புள்ளதாகக் கூறும் வகையிலான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்பதால் தங்களது பரிந்துரையில் அதற்கான வரம்புகள் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகை நன்றாகத் தெரிந்துகொள்வதற்கு குழந்தைகளுக்குப் பயன்படும் செல்போன்கள், கணினிகள் போன்றவை குறித்து பெற்றோர்களுக்கு கவலை உண்டாக்கும் வகையிலான தவறான செய்திகள் அடிக்கடி பரப்பப்படுகின்றன என்று ராயல் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் மாக்ஸ் டேவ் கூறுகிறார்.
அதேநேரம் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் அவசியம், குழந்தைகள் செல்போன்களை எந்த வகையில் பயன்படுத்துகிறார்கள் என்று பெற்றோர்கள் கண்காணித்து வருவது முக்கியம் என்பதே ஒட்டுமொத்த ஆய்வாளர்களின் கருத்து.
செல்போனை பயன் படுத்தும் முறைகளைப்பற்றி இன்றைய ஜுமுஆவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்……
♣ அல்லாஹ் [ﷻ] திருமறையில் கூறுகின்றான்:- قال الله تعالى Allah says in the Qur’an:
وَقَالَ تَعَالي: (يبُنَيَّ أَقِمِ الصَّلوةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلي مَآ أَصَابَكَ ط إِنَّ ذلِكَ مِنْ عَزْمِ اْلأُمُورِ۞). (لقمن:١٧)
என்னருமை மகனே, தொழுகையை நீ நிலைநிறுத்துவாயாக! நன்மையை ஏவுவாயாக! தீமையை விட்டும் (மக்களைத்) தடுப்பாயாக! (இதன் மூலம்) உனக்கு ஏற்படும் துன்பத்தின் மீது பொறுமை கொள்வாயாக! நிச்சயமாக இது உறுதிமிக்க காரியங்களில் உள்ளதாகும். (லுக்மான்:17)
وَقَالَ تَعَالي: (يَاأَيُّهَا الِّذيْنَ امَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلاَئِكَةٌ غِلاَظٌ شِدَادٌ لاَ يَعْصُونَ اللهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُون۞). (التحريم:٦)
நம்பிக்கையாளர்களே, உங்களையும் உங்களுடைய குடும்பத்தினரையும் (நரக) நெருப்பை விட்டும் நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; அதனுடைய எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும்; கடுமையான, பலமான மலக்குகள் அதன் மீது (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்; அல்லாஹ்வுக்கு – அவர்களை அவன் ஏவியதில் அவர்கள் மாறு செய்யமாட்டார்கள்; அவர்கள் (தமக்குக்) கட்டளையிடப்படுகின்றதையே செய்வார்கள். (அத்தஹ்ரீம்:6)
♣ நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:- كما قال النبي صلى الله عليه وسلم The Prophet ﷺ said:
عَنْ اَنَسِ بْنِ مَالِكٍؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: تَقَبَّلُوْا لِيْ سِتًّا، اَتَقَبَّلُ لَكُمْ بِالْجَنَّةِ قَالُوْا: مَا هِيَ؟ قَالَ: اِذَا حَدَّثَ اَحَدُكُمْ فَلاَ يَكْذِبْ، وَاِذَا وَعَدَ فَلاَ يُخْلِفْ، وَاِذَا ائْتُمِنَ فَلاَ يَخُنْ، وَغُضُّوْا اَبْصَارَكُمْ وَكُفُّوْا اَيْدِيَكُمْ، وَاحْفَظُوْا فُرُوْجَكُمْ. رواه ابو يعلي
எனக்காக ஆறு காரியங்களுக்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டால், நீங்கள் சொர்க்கம் செல்ல நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, அவை யாவை”? என ஸஹாபாக்கள் (ரலி) கேட்டனர்.
1. உங்களில் ஒருவர் பேசினால் பொய் சொல்ல வேண்டாம்,
2. வாக்குறுதி கொடுத்தால் வாக்குறுதியை மீற வேண்டாம்,
3. ஒருவரிடம் அமானிதம் வைக்கப்பட்டால் அதில் அவர் மோசடி செய்ய வேண்டாம்,
4. உங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள் (பார்க்கத்தகாதவற்றின் மேல் பார்வை செலுத்தக்கூடாது),
5. உங்களது கரங்களை (அநியாயமாகப் பிறரை அடிப்பது போன்றவைகளை விட்டு)த் தடுத்து வையுங்கள்,
6. உங்களது மர்மஸ்தானத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்”. (அபூயஃலா, மஜ்மஉஸ்ஸவாயித்)
【ஆன்ராய்டு மொபைல் யூஸ் பன்னும் முன் அதன் சட்டங்கள் தெரிவது நபிவழியாகும்】
அன்புள்ளவர்களே!! நாம் மொபைல் யூஸ்பன்னும் ஒவ்வொரு செயல்களும் இபாதத்துகளாக மாற்றி அமைத்துக் கொள்வதற்கு மார்க்க கல்வி மிக மிக அவசியமானதாகும்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ “ طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
‘கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். [இப்னுமாஜா, 229]
இந்த ஹதீஸிர்க்கு விளக்கமாக மாமேதை இமாம் கஜ்ஜாலி [ரஹ்] அலைஹி அவர்கள் கூறுவதாவது:
ஒருவர் புதிதாக கடை திறக்க போகிறார் என்றால், அவர் கடையின் வியாபாரம் சம்பந்தமாக ஹலால் – ஹராம் – கொடுக்கல் – வாங்கல் – கடன் – போன்ற இஸ்லாமிய சட்டங்களை முழுமையாக கற்ற பிறகுதான் கடையை திறக்க வேண்டும். அப்போதுதான் மிக நலவாக இருக்கும்.
அது போல ஒரு ஆணோ, பெண்னோ மொபைல் போன் யூஸ் பன்னுவதாக இருந்தால் – மொபைல் போன் யூஸ் பன்னுவதின் ஹராம்கள், மொபைல் போன் யூஸ் பன்னுவதின் மக்ரூஹ்கள், மொபைல் போன் யூஸ் பன்னுவதின் ஒழுக்கங்கள், மொபைல் போனில் ஓதப்படும் ஸூன்னத்தான துஆக்கள் & குர்ஆன் ஓதுவதின் சட்டங்கள் ஆகியவைகளை தெரிந்து கொள்ள கல்வி கடமையாகி விடுகிறது. .
இவைகலேல்லாம் கற்ற பிறகுதான் மொபைல் போன் யூஸ் பன்ன வேண்டும்.
【அல்லாஹ்விடம் பேச வேண்டும்..】
ஒரு அறிஞர் சொன்னார் : இந்த உலகத்தில் ஒரு மனிதரை தொடர்பு கொள்ள வேண்டுமெனால் அவரை போன் மூலம் தொடர்பு கொள்ளலாம். அது போல அல்லாஹ்வை தொடர்பு கொள்ள வேண்டிய போன் நம்பர் 24434 ஆகும்.
அதென்ன? 24434
2 – ரக்அத்தான பஜ்ர் தொழுகை
4 – ரக்அத்தான ளுஹர் தொழுகை
4 – ரக்அத்தான அஸர் தொழுகை
3 – ரக்அத்தான மஃரிப் தொழுகை
4 – ரக்அத்தான இஷா தொழுகை .
ஆக தொழுகையின் மூலம் ரப்பிடம் பேசலாம்..
【அலி ரலி அன்ஹு கூறுகிறார்கள்】நான் அல்லாஹ்விடம் பேச நினைத்தால் தொழுகுவேன். அல்லாஹ் என்னிடம் பேச நினைத்தால் குர்ஆன் ஓதுவேன்..
ஆக நல்லடியார்கள் அல்லாஹ் என்னிடம் பேச வேண்டும். நான் அல்லாஹ்விடம் பேச வேண்டும் என்ற ஆவலோடு இருந்தார்கள்.
இன்று நாம் மனிதர்களோடு நிறைய நேரம் போன் பேச நேரம் இருக்கிறது. ரப்பிடம் கொஞ்ச நேரம் அமல்களின் மூலம் பேச நேரமில்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது..
【சான்றிதழ் தரும் சமூக வலைதளங்கள்】
நாம் சமூக வலைதளங்களை பயன் படுத்தும் போது மிகவும் கவனமாக / பாதுகாப்பாக கையாள வேண்டும். எனென்றால் நம் பேசக்கூடிய பேச்சு, வீடியோ, எழுத்து எல்லாம் நம் கணக்கு ஐடி மூலமாக வெளியிடப்படுவதால் எதேனும் குற்றம் கண்டுபிடிக்க ஆதார சான்றிதழாக விளங்குகிறது..
【நேரத்தை வீண்விரயமாக்கும் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்】
இன்றைய இளைஞர்களின் முக்கிய பொழுது போக்கே இந்த சமூக வலைதளங்கள்தான்.
ஒரு முஃமினின் நேரமும், அமலும் முக்கியமானவை இவ்விரண்டையும் விட்டு தூரமாக்கும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் மூழ்கி விடக்கூடாது. கவனமாக இருக்க வேண்டும்.
وَقَالَ تَعَالي: (وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَ۞). (المؤمنون:٣)
இன்னும் அவர்கள் வீணானவற்றைப் புறக்கணித்து இருக்கிறவர்கள் (அல்முஃமினூன்:3)
وَقَالَ تَعَالي: (وَالَّذِيْنَ لاَ يَشْهَدُوْنَ الزُّوْرَ لا وَاِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّواْ كِرَامًا۞). (الفرقان:٧٢)
இன்னும் அவர்கள் எத்தகையோறென்றால் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; வீணானதின் பக்கம் அவர்கள் நடந்து சென்றால் கண்ணியமானவர்களாக (அதை விட்டும் ஒதுங்கிச்) செல்வார்கள். (அல்ஃபுர்கான்:72)
وَقَالَ تَعَالي: (وَاِذَا سَمِعُوا اللَّغْوَ اَعْرَضُوْا عَنْهُ۞). (القصص:٥٥)
வீணானதை அவர்கள் செவியுற்றால் அதைப் புறக்கணித்துவிடுவார்கள் (அல்கஸஸ்:55)
عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مِنْ حُسْنِ اِسْلاَمِ الْمَرْءِ تَرْكُهُ مَا لاَ يَعْنِيْهِ. رواه الترمذي
ஒரு மனிதனின் இஸ்லாம் சிறப்பானது, நிறைவானது என்பது அவன் தனக்குத் தேவையற்றவைகளை விட்டுவிடுவதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ)
தெளிவுரை:- இந்த ஹதீஸின் கருத்து, தேவையற்ற விஷயங்களைப் பேசாமல் இருப்பதும் மற்றும் வீணான செயல்களைவிட்டு விலகியிருப்பதும், ஈமான் முழுமையானது என்பதற்கு அடையாளம். மேலும், மேற்கண்ட செயல்களை விட்டும் தவிர்ந்திருப்பது ஒருவரிடமுள்ள இஸ்லாத்திற்கு அழகும், பொலிவுமாகும் என்பதாம்.
【தீமைகளை அள்ளித்தரும் ரிங்டோன், ஸ்டேட்ஸ் 】
இசை ஹராம்:
حدثنا زكريا أخبرنا عُبيد الله عن عبد الكريم عن قيس بن حَبْتَر عن ابن عباس قال: قال رسول الله – صلى الله عليه وسلم -: “إن الله حرم عليكم الخمر والميسر والكُوبة”، وقال: “كل مسكر حرام“.
அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும், மத்தளத்தையும் தடை செய்துள்ளான். போதையூட்டக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும். அஹ்மத்
وقال صلى الله عليه وسلم: «صوتان ملعونان، صوت مزمار عند نعمة، وصوت ويل عند مصيبة» (إسناده حسن، السلسلة الصحيحة 427)
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் ” இரண்டு ஓசைகள் சபிக்கப்பட்டவை ‘மகிழ்ச்சியான நேரங்களில் இசைக்கப்படும் இசையின் ஓசை, இன்னும் துன்பத்தில் வெளிப்படும் (ஒப்பாரியின்) ஓசை”
இன்று இன்ப நேரங்களிலும் துன்ப நேரங்களிலும் இந்த சமுதாயம் கேடு கெட்ட இசைக் கருவிகளின் மயக்கத்தில் மூழ்கித் தவித்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.
وَقَالَ هِشَامُ بْنُ عَمَّارٍ: حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، حَدَّثَنَا عَطِيَّةُ بْنُ قَيْسٍ الكِلاَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ غَنْمٍ الأَشْعَرِيُّ، قَالَ: حَدَّثَنِي أَبُو عَامِرٍ أَوْ أَبُو مَالِكٍ الْأَشْعَرِيُّ، وَاللَّهِ مَا كَذَبَنِي: سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ، يَسْتَحِلُّونَ الحِرَ وَالحَرِيرَ، وَالخَمْرَ وَالمَعَازِفَ، وَلَيَنْزِلَنَّ أَقْوَامٌ إِلَى جَنْبِ عَلَمٍ، يَرُوحُ عَلَيْهِمْ بِسَارِحَةٍ لَهُمْ، يَأْتِيهِمْ – يَعْنِي الفَقِيرَ – لِحَاجَةٍ فَيَقُولُونَ: ارْجِعْ إِلَيْنَا غَدًا، فَيُبَيِّتُهُمُ اللَّهُ، وَيَضَعُ العَلَمَ، وَيَمْسَخُ آخَرِينَ قِرَدَةً وَخَنَازِيرَ إِلَى يَوْمِ القِيَامَةِ “
என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தினர் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தினர் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் நாளை எங்களிடம் வா என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களை குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான். [புகாரி 5590]
விபச்சாரம், மது, பட்டு போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களுடன் இசையையும் சேர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். மேலும் இவற்றை ஆகும் எனக் கருதுவார்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். இதிலிருந்து இசை ஆகுமானதல்ல என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
அன்புள்ளவர்களே! நம் எல்லோருக்கும் தெரியும் மார்க்கத்தில் இசை ஹராம் என்று. ஆனால் இன்று முஸ்லிம்களாகிய நாம் நம்முடைய சமூக இணையதள புரபைல் போட்டோ நடிகர் படத்தையையும், ஸ்டேடஸ் சினிமா பாடல்களையும், போன் ரிங்டோன் இசையாகவும், போன் போகும் போது கூட அதுவும் சினிமா பாடலையும் வைத்து நாம் மட்டும் தீமையை சம்பாதிக்காமல் அதனை கேட்பவருக்கும். பார்பவருக்கும் அத்தீமையை செய்ய கற்றுக் கொடுகிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக! ஆமீன்.
மேற்கூறப்பட்ட விஷயங்களை பித்அத் என இஸ்லாம் கூறி அதனை உடனடியாக தவிர்க்க வேண்டும் என கூறுகிறது.
إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَأَحْسَنَ الْهَدْىِ هَدْىُ مُحَمَّدٍ وَشَرَّ الأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلَّ بِدْعَةٍ ضَلاَلَةٌ وَكُلَّ ضَلاَلَةٍ فِي النَّارِ ”
செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நேர்வழியாகும். விஷயங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது (பித்அத்) ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.” [Sunan an-Nasa’i 1578]
عَنْ أُمِّ الْمُؤْمِنِينَ أُمِّ عَبْدِ اللَّهِ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ: رَسُولُ اللَّهِ صلى الله عليه و سلم “مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும். [ Sunan Abi Dawud 4606]
وَعَنِ اِبْنِ عُمَرَ -رَضِيَ اَللَّهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -{ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ, فَهُوَ مِنْهُمْ } أَخْرَجَهُ أَبُو دَاوُدَ,.
யார் பிற சமுதாயக்காலச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ; அவர்கள் அவர்களை சேர்ந்தவர்கள. அபூதாவூத் 1514
இப்ராஹிம் நபி போல் உறுதியான ஈமான் வேண்டும்
قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ
நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். [அல்குர்ஆன் 6:162]
【Facebook – முகநூலில் நடைபெரும் தீமைகள்】
இன்று அதிகமான ஓய்வு நேரங்கள் இந்த முகநூலில் வீணாக பயன்படுத்தப்ப்டுகிறது..
இன்றைய இளைஞர்களிடம் BANK பாஸ்புக் இருக்கா? என்று தெரிய வில்லை ஆனால் பேஸபுக் இருக்கிறது..
facebook
عَنْ أَبِيهِ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்கல் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்கன் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு. [புகாரி 6412]
முன்னொரு காலத்தில் இபாதத் செய்ய நேரம் பத்தவில்லை என்று கவலைப்பட்டார்கள். இன்றைய காலத்தில் செல் யூஸ் பண்ண நேரம் பத்தவில்லை என்று கூறுகிறார்கள்.
இன்று மனிதர்களின் ஓய்வு நேரம் முழுவது இபாதத்தில் கழிக்காமல் செல் போனில் கழிக்கிறார்கள்.
உனக்கு, ஐந்து விஷயங்கள் வருவதற்கு முன்னர், ஐந்து அருட்கொடைகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவைகளில் ஒன்று وَفَرَاغَكَ قَبْلَ شُغُلُكَ அதிக வேலை பழுக்கள் வருமுன் ஓய்வு நேரத்தை இபாதத்தில் பயன்படுத்திக் கொள்.
‘மறுமை நாளில் ஓர் அடியான் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கும் வரை அவனது கால்கள் இரண்டும் நகர முடியாது’. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவைகளில் ஒன்று وَعَنْ شَبَابِهِ فِيمَا أَبْلَاهُ؟ உனது வாலிபப் பருவத்தை எவ்வழிகளில் ஈடுபடுத்தினான்?
【முகநூல் ஒழுக்கங்கள்】
【முகநூலில் நாம் பதிவிடும் [post] போது】
நாட்டின் சீர்திருத்தம் சம்பந்தமாக சமூக இணையத்தில் பதியப்படும் ஒவ்வொரு செய்தியும் நம்மிடம் கொஞ்சம் கவனம் தேவை:-
சமூக இணையம் என்று சொல்லப்படும்:- வாட்சப், பேஸ்புக், டுவிட்டர், டிக்டாக், இமெயில், டெலிகிராம், போன்றவைகளில் பதிவிடும் போது கவனமாக பதிவிட வேண்டும்.
நம் ஈமானையும், அமலையும் பாழாக்கும் செய்திகளை ஒரு போதும் பதிவு செய்யக்கூடாது. உதாரணம் டிக்டாக்.
நாம் பதிவு செய்யும் ஒவ்வென்றையும் தோள் புஜத்தில் உள்ள இரு மலக்குகள் நன்மை, தீமையை பதிவு செய்கின்றன..
وَقَالَ تَعَالي: (مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلاَّ لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ۞). (ق:١٨)
(எழுதுவதற்கு) தயாராக இருக்கின்ற கண்காணிப்பாளர் ஒருவர் அவனிடத்தில் இருந்தே தவிர எந்தச் சொல்லையும் அவன் மொழிவதில்லை. (காஃப்:18)
இணையத்தில் பதிவிடுவதை விட, இறைவனிடத்தில் துஆவின் மூலம் பதிய முயற்சிப்போமாக!
பொதுவாக நாம் சமுக இணையங்களில் பதிவிடும் போது
நன்மையான
ஆதரபூர்வமான
அறிவுபூர்வமாக
பிறரின் மனம் புண்படாமல்
பிறரின் மானத்தை பங்கப்படுத்தாமல்
குழப்பத்தை ஏற்படுத்தாத
செய்திகளை பதிவிட வேண்டும்..
وَّذَكِّرْ فَاِنَّ الذِّكْرٰى تَنْفَعُ الْمُؤْمِنِيْنَ
நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும். 51:55
عَنْ أَبِي مَسْعُودِ نِ الْبَدْرِيِّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ دَلَّ عَلَي خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ.
எவர் நன்மையின் பால் வழிகாட்டுவாரோ, அவருக்கு அந்த நன்மையைச் செய்தவருக்குச் சமமான நன்மை கிடைக்கும்”[ திர்மிதீ 2671 )
وَقَالَ تَعَالي: (وَتَعَاوَنُوا عَلَي الْبِرِّ وَالتَّقْوَي ص وَلاَ تَعَاوَنُوا عَلَي اْلإِثْمِ وَالْعُدْوَانِ۞). (المائدة:٢)
நன்மைக்கும் இறையச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்துக்கும் அநியாயத்துக்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்து கொள்ளவேண்டாம். (அல்மாயிதா:2)
【தீயதை பதிவு செய்தால் இலவசமாக தீமைகளை சம்பாதிக்கலாம்.】
நாம் சமுக இணையங்களில் ஒரு தீமையான / பாவமான விஷயத்தை பதிவிடும் போது யாரெல்லாம் அதனை பார்கிறார்களோ? அதனை பின்பற்றுகிறார்களோ பதிவிட்டவருக்கு இலவசமாக பாவங்கள் அதிகப்படியாக கிடைக்கிறது.
عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ لاَ تُقْتَلُ نَفْسٌ ظُلْمًا إِلاَّ كَانَ عَلَى ابْنِ آدَمَ الأَوَّلِ كِفْلٌ مِنْ دَمِهَا، لأَنَّهُ أَوَّلُ مَنْ سَنَّ الْقَتْلَ ”.
(உலகில்) ஒரு மனிதன் அநியாயமாகக் கொல்லப்படும்போது அந்தக் கொலையின் பாவத்தில் ஆதம் (அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில், அவர்தான் முதன் முதலாக கொலை செய்து (ஒரு முன் மாதிரியை ஏற்படுத்தி) அதை வழக்கில் கொண்டு வந்தவர். [புகாரி 3335.]
(உலகில்) அநியாயமாக ஒரு கொலை நடைபெறும்போது அந்தக் கொலையின் பாவத்தில் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களுடைய முதலாவது மகனுக்கு ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில், அவர்தாம் கொலையை ஆரம்பித்துவைத்த முதல் மனிதர் ஆவார். முஸ்லிம் 3465.
உலகில் அநியாயமாக யாரெல்லாம் கொலை செய்கிறார்களோ அவர்களின் தீமையின் ஒரு பங்கு ஆதம் (அலை) அவர்களுடைய முதலாவது மகனுக்கு போய்விடுகிறது. ஏனென்றால் அவர் அத்தீமையை தொடங்க வைத்ததினால்தான்.
நாம் செய்வதே ஒன்னு ரெண்டு அமல்கள் அதிலையும் இத்தீமைகள் செய்தால் நம்மிடம் இருக்கும் ஒன்னு ரெண்டு அமல்களும் நமக்கு பாதகமாக மாறி விடுகிற்து. அதைத்தான் நபி ﷺ அவர்கள் கூறினார்கள்
“திவாலாகிப் போனவர் யார் என்று நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட போது. “யாரிடத்தில் பணமும் பண்ட பாத்திரங்களும் இல்லாமல் இருக்கின்றதோ அவர் தான்” என்று நபித்தோழர்கள் பதிலளித்தனர்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “எனது சமுதாயத்திலிருந்து திவாலாகிப் போனவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவற்றைக் கொண்டு வருவார். மேலும் அவர் இன்னொருவரைத் திட்டியிருப்பார். அவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். அவரது பொருளைச் சாப்பிட்டிருப்பார். அவரது ரத்தத்தை ஓட்டியிருப்பார். அவரை அடித்திருப்பார். எனவே (பாதிக்கப்பட்ட) அவருக்கு இவரது நன்மைகளிலிருந்து அல்லாஹ் வழங்கி விடுவான். இன்னாருக்கு அவரது நன்மைகளை வழங்கி விடுவான். அவர் மீது உள்ள வழக்கு தீர்க்கப்படும் முன் அவரது நன்மைகள் தீர்ந்து போய் விட்டால் (பாதிக்கப்பட்ட) அவர்களின் பாவங்கள் எடுக்கப்பட்டு இவர் மீது எறியப்பட்டுப் பின்னர் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்” என்று சொன்னார்கள். முஸ்லிம் 5037, 4678
【முகநூலில் நாம் லைக் செய்யும் [like] போது】
தீமையான விஷயம் முகநூலில் பதிவு செய்யப்பட்டால் உடனே அதனை தட்டிக்கேட்க வேண்டும். அதற்க்கு like கொடுக்க கூடாது..
சிறியவர், பெரியவர், உயர் அதிகாரி, மாற்றார் சகோ, என பாகுபாடில்லாமல் அன்பாக சொல்லி திருத்த முயற்சிக்க வேண்டும்.
நல்ல விஷயங்களுக்கு ஊக்கம் தர வேண்டும். தீய விஷயங்களுக்கு தாக்கம் தர வேண்டும்.
مَنْ رَأَي مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذلِكَ أَضْعَفُ اْلإِيمَانِ
உங்களில் ஒருவர் தீமையைக் கண்டால் அதை அவர் தமது கையால் மாற்றிவிடவும் (கையால் மாற்றும்) சக்தி இல்லையெனில், நாவால் அதை மாற்றிவிடவும். அதற்கும் சக்தியில்லையென்றால், உள்ளத்தால் அது தீயதென அறிந்துகொள்ளவும். (உள்ளத்தில் அத்தீமையைப் பற்றி கவலை கொள்ளவும்) இது ஈமானுடைய மிகப் பலவீனமான தரமாகும்”. என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாகத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)
【முகநூலில் பிறரின் கருத்துக்களை [forwarded / share] பகிரும் போது கவனிக்க வேண்டும்】
நான் இந்த குருப்புல நாந்தான் பஸ்டு மெசெஜ் அனுப்பனும் என்பதற்க்காக தேவையில்லாத விஷயங்களை போடுவது.
وَقَالَ تَعَالي: (يآيُّهَا الَّذِيْنَ آمَنُوْا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ م بِنَبَاٍ فَتَبَيَّنُوْآ اَنْ تُصِيْبُوْا قَوْمًا م بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلي مَا فَعَلْتُمْ نَادِمِيْنَ۞ (الحجرات:٦)
நம்பிக்கையாளர்களே, தீயவன் ஒருவன் ஏதேனும் ஒரு செய்தியை உங்களிடம் கொண்டுவந்தால், (அதனை நன்கு விசாரித்து) தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்; (ஏனேனில்-அவ்வாறு தெளிவுபடுத்திக் கொள்ளவில்லையானால்) அறியாமையினால் ஒரு கூட்டத்திற்கு நீங்கள் தீங்கிழைத்துவிடுவீர்கள் – அப்போது நீங்கள் செய்தவற்றின் மீது வருத்தப்படுவோராய்விடுவீர்கள் (அல்ஹுஜுராத்:6)
عَنْ سُفْيَانَ بْنِ اَسِيْدِ نِ الْحَضْرَمِيِّؓ قَالَ:سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ:كَبُرَتْ خِيَانَةً اَنْ تُحَدِّثَ اَخَاكَ حَدِيْثًا هُوَ لَكَ بِهِ مُصَدِّقٌ وَاَنْتَ لَهُ بِهِ كَاذِبٌ. رواه ابو داؤد
நீங்கள் உங்கள் சகோதரனிடம் ஏதேனுமொரு பொய்யான செய்தியைச் சொல்ல, அதை அவர் உண்மை என்று நம்புகிறார், இது மிகப்பெரும் மோசடியாகும்” (அபூதாவூத்)
தெளிவுரை:- பொய் சொல்வது பெரும்பாவம், சில சமயங்களில் இன்னும் அதனுடைய கடுமை அதிகரித்துவிடுகிறது. ஒருவர் உங்களை முழுமையாக நம்ப, நீங்கள் அவருடைய நம்பிக்கையை தவறான முறையில் பயன்படுத்தி பலன் பெறப் பொய் சொல்லி, அவரை ஏமாற்றுவது அவற்றில் ஒருவகை.
இரத்ததான செய்தி, விபத்து செய்தி. காணவில்லை செய்தி, மரண செய்தி, வேலை வாய்ப்பு செய்தி இது போன்ற முக்கிய செய்திகளை பதிவிடும் போதும் & பகிரும் போதும் தேதி அவசியம் பதிவிட வேண்டும், இல்லையெனில் குழப்பத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தும்.
மார்கத்தில் சொல்லப்படாத விஷயங்களை ஷேர் செய்தல். உதாரணமாக கீழுள்ள படத்தை பாருங்கள்.
IMG-20200102-WA0018
【இரவிலும், பயணத்திலும் வீணாகும் நேரங்கள்】
downloadபயணம் மேற்கொள்ளும் போது நமக்கு அதிகளவில் ஓய்வு நேரங்கள் கிடைக்கின்றன. ஏனெனில் அந்நேரங்களில் நாம் எந்த ஒரு வேலையும் செய்வதில்லை. எனவே நமக்கு கிடைக்கும் அந்நேரங்களை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். பயனில்லாத சினிமா பத்திரிக்கை படிப்பது, செல்போனில் பாட்டு கேட்பது போன்ற வீணான காரியங்களில் ஈடுபட்டு நேரங்களை பாழ்ப்படுத்தி விடக்கூடாது. இறைவன் நமக்கு வழங்கியிருக்கும் அருட்கொடைகளில் ஓய்வு நேரங்களும் ஒன்று. நம்மால் முடியும்பட்சத்தில் நன்மையான காரியங் களில் அவைகளை செலவிட வேண்டும். ஏனெனில் அதைப்பற்றியும் நாம் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும்.
عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغ.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்கல் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்கன் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு. [புகாரி 6412]
திக்ர் செய்வது.
குர்ஆன் ஓதுவது,
நலவான விஷயங்களை பேசுவது & கேட்பது.
சூரா & சுன்னத்தான துஆக்களை மனனம் செய்வது..Etc..
இது போன்ற நல்ல விஷயங்களுக்கு நம் பொன்னான நேரங்களை நல்ல விதத்தில் பயன் படுத்தினால் மிக நலவாக இருக்கும்.
【சாட்சி சொல்லும் சமூக வலைதளங்கள்】
இன்று சந்தோஷமாக கேளிக்கூத்தாக, பிறரின் மனதை புண்படுத்தி யூஸ் பண்ணும் சமூக வலைதளங்கள் நாளை மறுமை நாளில் சாட்சி சொல்கிறது.
நாம் செய்யும் செயல்கள் யாருக்கும் தெரியாது என்று பலரும் பல்வேறு காரியங்களில் ஈடுபடுகிறார்கள். திரை மறைவில் தைரியமாக தப்பும் தவறுமான காரியங்களில் இறங்குகிறார்கள். இத்தகையவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எந்தக் கை, கால்களை வைத்து தீயகாரியங்களைச் செய்கிறார்களோ அவை மறுமையில் தாங்கள் செய்த காரியங்களைப் பற்றி பேசும்.
உலகில் நாம் நினைப்பது போன்று பேசுவதற்கு நாவைப் பயன்படுத்துகிறோம். மறுமையிலோ நாக்கு உலகில் தான் பேசியவற்றை எல்லாம் வெளிப்படுத்தும். நாம் நல்ல காரியங்களைச் செய்தவர்களாக இருப்பின் நமது உடல்களும் நல்ல வகையில் சாட்சியமளிக்கும். கெட்ட காரியங்களை செய்திருப்பின் கெட்ட விதத்தில் சாட்சியமளிக்கும்.
நமது உடல் உறுப்புகள், இவர் குர்ஆன் படித்தார், பள்ளிவாசலுக்குச் சென்றார் என்று நல்ல செய்திகளைக் கூறவேண்டுமா? அல்லது இவர் புறம் பேசினார்? செல் போனை அதிகமாக நோண்டினார்? புகை பிடித்தார்? என்று தீய தகவல்களைத் தெரிவிக்க வேண்டுமா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
اَلْيَوْمَ نَخْتِمُ عَلٰٓى اَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَاۤ اَيْدِيْهِمْ وَتَشْهَدُ اَرْجُلُهُمْ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ
அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும். (அல்குர்ஆன் 36:63,65)
يَّوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ اَلْسِنَـتُهُمْ وَاَيْدِيْهِمْ وَاَرْجُلُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ
அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும். (அல்குர்ஆன் 24:24, 25)
حَتّٰٓى اِذَا مَا جَآءُوْهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَاَبْصَارُهُمْ وَجُلُوْدُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ
இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். [41:20.]
وَقَالُوْا لِجُلُوْدِهِمْ لِمَ شَهِدْتُّمْ عَلَيْنَا ؕ قَالُوْۤا اَنْطَقَنَا اللّٰهُ الَّذِىْۤ اَنْطَقَ كُلَّ شَىْءٍ وَّهُوَ خَلَقَكُمْ اَوَّلَ مَرَّةٍ وَّاِلَيْهِ تُرْجَعُوْنَ
அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று கேட்பார்கள்; அதற்கு அவை: “எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறும். [41:21.]
وَمَا كُنْتُمْ تَسْتَتِرُوْنَ اَنْ يَّشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلَاۤ اَبْصَارُكُمْ وَلَا جُلُوْدُكُمْ وَلٰكِنْ ظَنَنْتُمْ اَنَّ اللّٰهَ لَا يَعْلَمُ كَثِيْرًا مِّمَّا تَعْمَلُوْنَ
உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை; அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டீர்கள். [41:22. ]
இறையில்லம் (கஅபாவிற்கு) அருகில் ‘குறைஷியரில் இருவரும் ஸகீஃபியரில் ஒருவரும்’ அல்லது ‘ஸகீஃபியரில் இருவரும் குறைஷியரில் ஒருவரும்’ (ஆக மூவர் ஓரிடத்தில்) ஒன்று கூடினர். அவர்களின் வயிறுகளில் கொழுப்பு நிறைய இருந்தது. இதயங்களில் சிந்தனை குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர், ‘நாம் பேசுவதை அல்லாஹ் கேட்கிறான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?’ என்று கேட்டார். மற்றொருவர், ‘நாம் சப்தமாகப் பேசினால் அவன் கேட்கிறான். நாம் இரகசியமாகப் பேசினால் அவன் கேட்பதில்லை’ என்று பதிலளித்தார். (அவர்களில்) இன்னும் ஒருவர், ‘நாம் சப்தமிட்டுப் பேசும்போது அவன் கேட்பானெனில் நாம் இரகசியமாகப் பேசும் போதும் அவன் கேட்கத்தான் செய்வான்’ என்று கூறினார். அப்போது அல்லாஹ், ‘(உலகில் நீங்கள் குற்றங்கள் புரிந்தபோது) உங்கள் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக் கூட (குற்றங்களிலிருந்து) தவிர்த்து கொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை’ எனும் வசனங்களை (திருக்குர்ஆன் 41:22-24) அருளினான். புகாரி (4817)
【இபாதத் செய்யும் போது மொபைல் போன் சட்டங்கள் அரபியில்】
إذا رن الهاتف وأنت في الصلاة أو في المسجد أو في مجلس علم .. الشيخ محمد حاج عيسى
ـ[سمير زمال]ــــــــ[١٠ – ٠٤ – ٠٩، ١١:٤٩ م]ـ
١ – إذا رن الهاتف وأنت في الصلاة
وإذا نسيت ولم تغلق الهاتف فاتصل بك وأنت في المسجد أو في الصلاة، فلتبادر إلى إسكاته ثم إغلاقه حتى لا يعاود المتصل مرة أخرى، ولا حرج في حركة غلق الهاتف في الصلاة، لأنها من مصلحة الصلاة ومن مصلحة المصلين.
٣ – موقفنا ممن نسي الجوال مفتوحا؟
ينبغي علينا أن نعذره إذا نسي جواله مفتوحا، أو جهل كيف يتصرف إذا اتصل به وهو في الصلاة، لكن لا يجوز لنا تأخير النصيحة له وتعليمه وجوب المسارعة إلى إغلاقه، وإن كانت النغمة فيها موسيقى أخبرناه بتحريم ذلك، كل ذلك بأسلوب لين لا إحراج فيه ولا تعنيف، وذلك اقتداء بالنبي ﷺ الذي أحسن معاملة الأعرابي الذي بال في المسجد، وقال: «فإنما بعثتم ميسرين ولم تبعثوا معسرين» (البخاري).
٤ – في مجالس العلم
لا ينبغي استعمال الهاتف في مجالس العلم لأن تكليم الناس والرد عليهم ينافي أدب المجلس ويذهب بهيبته، ويشغل المدرس ويؤذيه ويقطع المتعلمين عن متابعة الدرس ويشوش عليهم، ومن كان له اتصال مهم يجريه أو يستقبله، فليستأذن وليبتعد عن المجلس حتى إذا فرغ من الكلام عاد، وهكذا يقال في كل مجلس يسوده الجد والوقار.
من رسالة بعنوان: آداب الهاتف الجوال
أرشيف ملتقى أهل الحديث – 1 ١١٠/٨
【பிறரின் மனம் புண்படும் படி நடக்க கூடாது】
நாம் சமுக இணையங்களில் பதிவிடும் போது பிறரின் மனம் புண்படும் படி நடக்க கூடாது.
ஏன்னா அவர் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிக்கமாட்டான்.
அநீதி இழைக்கப்பட்டவ்ரின் துஆவுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்.
அழைப்பு எத்தனை தடவை:
ஒருவரிடம் ஒரு செய்தி பேசுவதற்காக நாம் செல்போனில் அழைக்கும் போது அவர் அந்த அழைப்புக்கு பதிலளிக்கவில்லை என்றால் சின்ன இடைவெளி விட்டு இரண்டாவது, மூன்றாவது தடவை அழைக்கலாம். மூன்றாவது அழைப்புக்கும் அவர் பதிலளிக்காவிட்டால் தொடர்ந்து அழைக்க கூடாது. ஏனென்றால் அவர் உறங்கிக் கொண்டோ அல்லது வேறு அவசிய வேளையில் ஈடுபட்டுக்கொண்டோ இருக்கலாம்.
ஒருவரை சந்திப்பதற்காக அவருடைய வீட்டு வாசலில் நின்று மூன்று தடவை ஸலாம் சொன்ன பிறகும் உள்ளே இருந்து பதில் வராவிட்டால் திரும்பிச் சென்று விட வேண்டும் என்பதுதான் நமக்கு நபியவர்கள் கற்றுத்தந்த வழிமுறை. (புகாரி 6245) அது இதற்கும் பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாம் பல தடவை அழைத்தும் ஒருவர் பதிலளிக்காமல் இருப்பதற்கும் திரும்ப அழைக்காமல் இருப்பதற்கும் பல நியாயமான காரணங்கள் அவரிடம் இருக்கலாம். ஆகையினால் அவர் மேல் கோபப்படாமல் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
நேரம் & காலம்:
ஒருவரை நாம் செல்போனில் அழைக்கும் அந்த நேரத்தில் அவர் நிச்சயம் தூங்கியிருப்பார் அல்லது முக்கியமான ஒரு வேளையில் இருப்பார் என்பதை நாம் அறிந்திருந்தால் – நாம் பேசப்போகும் விஷயத்தை தாமதமாகக் கூட சொல்லிக்கொள்ள முடியும் எனும் பட்சத்தில் – பின்னர் ஒரு நேரத்தில் அழைத்துப் பேசுவதுதான் முறை. ஒருவருக்கு சிரமத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்துவதை இயன்ற அளவு தவிர்க்க வேண்டும்.
ஸலாம் சொல்க:
ஒருவரை செல்போனில் அழைத்து பேச ஆரம்பிக்கும்போது முதலில் ஸலாம் சொல்ல வேண்டும். இதுவும் சந்திப்புக்கு நிகரானதுதான். வீடியோ கால் முறையில் பேசும்போது ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவும் முடிகிறது. ஆகவே பேச ஆரம்பிக்கும்போதும் முடிக்கும் போதும் ஸலாம் சொல்ல வேண்டும்.
பேச்சின் அளவு:
நம்முடைய அழைப்புக்கள் வரையறுக்கப்படாததாக (அன்லிமிடெட் காலாக ) இருந்தாலும் செல்போனில் நமது பேச்சுக்களை தேவையான அளவுக்குள் வரையறுத்து நிறுத்திக்கொள்ள வேண்டும். நேரில் பார்த்து பேசும்போது எதிராளியின் சூழ்நிலை நமக்கு தெரியும். ஆனால் செல்போனில் பேசும்போது அது தெரிவதில்லை. “பேசினால் நல்லதை பேசட்டும். இல்லாவிட்டால் வாய் மூடியிருக்கட்டும்” என்பது நபி (ஸல்) அவர்கள் இறைநம்பிக்கையாளருக்கு சொன்ன உபதேசம்.நல்லதையும் கூட சூழ்நிலை அறிந்துதான் பேச வேண்டும்.
இதே போல் செல்போனை பயன்படுத்துவதில் நாம் தவிர்க்க வேண்டிய சில விசயங்களும் உள்ளன.
நம்மை பிறர் அழைக்கும் போது நாம் கேட்கும் செல்போனின் ஓசையும்(ரிங் டோன் ) பிறர் நம்மை அழைக்கும்போது அவர்கள் கேட்பதற்காக நாம் வைத்துள்ள ஓசையும்(காலர் டோன் ) இசையாகவோ இசை கலந்த பாடலாகவோ இருக்கக்கூடாது.ஏனெனில் மார்க்கத்தில் இசை வெறுக்கப்பட்டுள்ளது (புகாரி 5590) இந்த விசயத்தில் பலரும் அலட்சியமாக இருப்பதை காண முடிகிறது.
சிலரிடம் உள்ள இன்னொரு தவறு, முக்கியமான விசயங்கள் பேசுவதற்காக கூட்டப்பட்டிருக்கும் சபைகளில் இருந்துகொண்டு செல்போன் பேசிக்கொண்டும், அதில் வரும் செய்திகளை படித்துக் கொண்டுமிருப்பது. அந்த சபை கல்வி கற்கும் சபையாகவோ பிரசங்கம் நடக்கும் சபையாகவோ முக்கிய பிரச்னையில் ஆலோசனை செய்யும் சபையாகவோ இருந்தால் இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் அந்த சபைக்கான மதிப்பே இல்லாமல் போய் விடுகிறது.
செல்போன் பயன்படுத்துவதில் நடக்கும் தவறுகளில் இன்னொன்று, சிலர் மறுமுனையில் பேசுபவரின் பேச்சை அவர் அறியாமல் பதிவு செய்வது. அவ்வாறு பதிவு செய்ததை வைத்து பின்னர் பிரச்னைகளை உருவாக்குவது. மறுமுனையில் பேசியவர் இவ்வாறு பதிவுசெய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் பேசியிருப்பார். அவ்வாறு நம்பியவருக்கு இடையூறு செய்யும் விதத்தில் பதிவு செய்தது நம்பிக்கை துரோகம் செய்த குற்றமாகும்.
எதிர் முனையில் பேசிக்கொண்டிருப்பவர் விரும்பமாட்டார் எனும் நிலையில் அவர் பேசுவதை மற்றவர்கள் கேட்கும் விதத்தில் செல்போனில் சப்தத்தை உயர்த்தி (லோட் ஸ்பீக்கரில்) வைப்பதும் இது போன்ற தவறுதான்.
இன்னொரு பெரிய தவறு, செல்போன் மூலம் தவறான, ஆபாசமான விசயங்களை அந்நிய ஆண்கள் பெண்கள் பேசிக்கொள்வது. ஆபாசம் வெறும் பேச்சில் மட்டும்தான் என்றாலும் அதுவும் பாவம்தான் (புகாரி 6243) இப்படிப்பட்ட பேச்சுத் தொடர்புதான் இறுதியில் விபச்சாரம் என்ற பெரும் பாவத்தில் தள்ளுகிறது. இதை சாதாரணமாக நினைத்து ஈடுபட்ட பல இளம்பெண்கள்தான் பொள்ளாச்சியில் கயவர்களிடம் சிக்கி விபச்சாரிகளாக ஆக்கப்பட்டார்கள்.
ஒரு அன்னிய ஆணும் பெண்ணும் அவசிய தேவைக்காக மட்டுமே பேச வேண்டும். திருமணம் செய்து கொள்வதற்காக பெசிவைக்கப்பட்ட பெண்ணாக இருந்தாலும் அவளுடனும் அவசியமில்லாத கூடுதல் பேச்சுக்கள் பேசக்கூடாது. திருமணம் நடைபெறாத வரை இருவரும் அன்னியர்தான். இருவருக்கும் திருமணம் நடக்காமலும் போகலாம்.
இப்போது முன்னேற்றம் அடைந்துள்ள செல்போன்களில் நெட் வசதியை பயன்படுத்தி சினிமா உள்ளிட்ட பொழுது போக்கு விசயங்களை பார்க்க முடியும். ஆபாசங்களையும் பார்க்க முடியும். ஆபாசம் இல்லாவிட்டாலும் இவ்வுலக வாழ்வுக்கும் மறுவுலக வாழ்வுக்கும் பலனளிக்காத விசயங்களை விட்டு மனிதன் விலகியே இருக்க வேண்டும். அதிலும் இறைநம்பிக்கையாளன் என்றால் இவற்றை விட்டு தூரமாகவே இருக்க வேண்டும். மனிதக் கண்களுக்கு மறைவாக இருக்கும் போதும் இறைவனை அஞ்சுபவர்களுக்கே மன்னிப்பும், மதிப்பான கூலியும் கிடைக்கும் என்று அல்லாஹ் திருகுர்ஆனில் கூறியுள்ளான். (67:12)
இதன் தீமை குறித்து இளவயதுக்காரர்களை எச்சரிக்க வேண்டும். அவர்கள்த்தான் இந்த விசயங்களில் அதிகமாக வீழ்கிறார்கள். அல்லாஹ்வைக் குறித்தும் மறுமையைக் குறித்தும் நினைவூட்டி இவற்றிலிருந்து அவர்களை தடுக்க வேண்டும்.
செல்போனில் உள்ள விளையாட்டுக்களும் சில பெரியவர்களையும் பல சிறியவர்களையும் அடிமைப்படுத்தியுள்ளன. பொன்னான நேரத்தை வீணடிக்க காரணமாக உள்ளன. உடலுக்கும் குறிப்பாக கண்களுக்கும் தீங்கு விளைவிக்கின்றன. இவற்றிலிருந்தும் எல்லோரும் தூரமாக இருக்க வேண்டும்.
செல்போன் பயன்பாட்டினால் நமக்கு கிடைத்திருக்கும் பெரும் பலன், வாட்ஸ் அப் மூலம் பலவித செய்திகளையும் காணொளி உள்ளிட்டவற்றையும் மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்வதாகும். பெரும் பலன் இருப்பது போலவே பெரும் இடையூறுகளும் உள்ளன. இதில் வருபவற்றை படிப்பது, பார்ப்பது,கேட்பது ஆகிய செயல்களில் மூழ்கி விடுவதால் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் குறை வைப்பது, தனக்கும் பிறருக்கும் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்வது ஆகிய பாதகங்கள் இதன் மூலம் அதிகரித்து வருவதை கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
வாட்ஸ் அப்பை பயன்படுத்துவதில் எல்லோருக்கும் சுய கட்டுப்பாடு அவசியம். மிக குறுகிய நேரமே அதற்கு ஒதுக்க வேண்டும். நமக்கு படிக்க நேரம் ஒதுக்க முடியாத அளவுக்கு செய்திகள் வருகிறதென்றால் பல குழுக்களிலிருந்து வெளியேற வேண்டும். தேவையற்ற, தவறான தகவல்களை அனுப்புபவர்களை தடை (Block) செய்ய வேண்டும்.
வாட்ஸ் அப்பில் செய்திகளை பரிமாறுவதில் சரியான வழிமுறையை கடைப்பிடிக்க வேண்டும். ஒரு மோசமான தகவல் என்றால் அதற்கு நிவாரணம் காண்பவர்களுக்கு மட்டும்தான் அனுப்ப வேண்டும். எல்லோருக்கும் அனுப்புவதால் மோசமான சூழ்நிலை ஏற்பட்டு விடலாம். அதே போல் சிலருக்கு பயன்தரும் ஒரு தகவல் வேறு பலருக்கு பயன் தராது. இது போன்ற தகவல் யாருக்கு பயனாக அமையுமோ அவர்களுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்.
பொதுவாக நம் வாழ்வு முழுமைக்கும் வழிகாட்டுதலாக நபி (ஸல்) நமக்கு கூறியுள்ள ஒரு பொன்மொழி: ஒரு மனிதர் தனக்கு அவசியமில்லாததை விட்டுவிடுவது, அழகிய முறையில் அவர் இஸ்லாத்தை பின்பற்றுவதில் அடக்கமாகும்.(திர்மிதி)
இந்த நபிமொழி, செல்போனில் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கும் முக்கிய வழிகாட்டுதலாக உள்ளது.
செல்போன் பயன்பாட்டில் இன்னொரு பெருந்தவறு சிறுபிள்ளைகளை அமைதியாக இருக்க வைப்பதற்காக அவர்களுக்கு செல்போனை கொடுத்து பழக்குவது. அவர்களின் சிறு இடையூறுகளிலிருந்து விடுபடுவதற்காக அவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் காரியம் இது. சிறுபிள்ளைகள் செல்போனை அருகில் வைத்துப் பார்ப்பதால் பார்வை குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மட்டுமின்றி அவர்களின் அறிவு வளர்ச்சியில் மந்த நிலை ஏற்படுவதற்கும் குணங்கள் சீர்கெட்டுப் போவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அதனால் சிறுபிள்ளைகளிடம் செல்போன் கொடுத்து அமைதிப் படுத்துகிற பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
“இறைநம்பிக்கை கொண்டவர்களே, அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.மேலும் ஒவ்வொருவரும் (மறுமை எனும்) நாளைய தினத்திற்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும். இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன். (அல் குர்ஆன் 59:18)”
【தொழுகையிலும் தொழுகைக்கு முன்னும் சுவிட்ச் ஆப் செய்யுங்க..】
இன்று பாத்ரூமிலும், சப்பிடும் போதும், தூக்கத்திலும், பாங்கு சொல்லும் போதும், தொழுகைக்கு இகாமத் சொல்லிய பிறகும், இமாம் ஜுமுஆ பயான் செய்யும் போதும் , செல் போன் யூஸ் பன்னி அதே சிந்தனையில் ஒவ்வெரு சுன்னத்தான துஆக்களை மறந்து விடுகிறோம்..
தொழுக்கைக்கு முன் அனுப்பிய மெசெஜ் பொயிருச்சா?
ரிபிளே வந்துருச்சா? என ஒரே இந்த செல் சிந்தனைதான்.
وَقَالَ تَعَالي: (قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ ۞ الَّذِينَ هُمْ فِي صَلاَتِهِمْ خشِعُونَ۞).المؤمنون:٢،١
(ஓரிறை) நம்பிக்கையாளர்கள் திட்டமாக வெற்றியடைந்துவிட்டனர் – அவர்கள் எத்தகையோரென்றால் தங்களுடைய தொழுகையில் அவர்கள் உள்ளச்சம் உடையவர்களாக இருப்பர்.(அல்முஃமினூன்:1,2)
عَنْ عُثْمَانَ بْنِ أَبِي دَهْرِشَ مُرْسَلاً قَالَ: لاَ يَقْبَلُ اللهُ مِنْ عَبْدٍ عَمَلاً حَتَّي يُحْضِرَ قَلْبَهُ مَعَ بَدَنِهِ.
அடியான் தன் உடலுடன் தன் உள்ளத்தையும் ஈடுபடுத்திச் செய்யும் செயலையே அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்” (இத்ஹாப்)
عَنِ ابْنِ عُمَرَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ صَلِّ صَلاَةَ مُوَدِّعٍ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ كُنْتَ لاَ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ.
அனைவரிடமும் இறுதி விடை பெற்றுச் செல்லும் மனிதரைப் போன்று தொழுவீராக, (இது என் வாழ் நாளின் கடைசித் தொழுகை என்று நினைத்துத் தொழவும்). மேலும், நீர் அல்லாஹ்வைப் பார்ப்பது போன்று தொழுவீராக! இந்நிலை ஏற்படாவிட்டால் குறைந்தபட்சம் அல்லாஹ் உம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற சிந்தனையாவது மனதில் அவசியம் இருக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஜாமிஃஸஃஙீர்)
عَنْ أَبِي ذَرٍّ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: لاَ يَزَالُ اللهُ مُقْبِلاً عَلَي الْعَبْدِ فِي صَلاَتِهِ مَالَمْ يَلْتَفِتْ، فَإِذَا صَرَفَ وَجْهَهُ انْصَرَفَ عَنْهُ.
அடியான் தொழுகையில் வேறு பக்கம் கவனம் செலுத்தாமல் இருக்கும்வரை அல்லாஹ்வும் அடியானின் பக்கம் கவனம் செலுத்துகிறான். அடியான் தன் கவனத்தைத் தொழுகையை விட்டும் திருப்பிவிட்டால், அல்லாஹ்வும் தன் கவனத்தை அடியானை விட்டும் திருப்பிக் கொள்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நஸயீ)
【தீய அசிங்கமான படங்களை பார்க்க கூடாது.】
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍؓ عَنْ رَسُوْلِ اللهِ ﷺ قَالَ: مَنْ يَضْمَنْ لِيْ مَا بَيْنَ لَحْيَيْهِ وَماَ بَيْنَ رِجْلَيْهِ اَضْمَنْ لَهُ الْجَنَّةَ. رواه البخاري
எவர் தனது இரு தாடைகளுக்கும், இரு தொடைகளுக்கும் இடையே உள்ள உறுப்புகளுக்கு (நாவு, மர்மஸ்தானத்தைத் தவறாக உபயோகிக்காமலிருக்க) பொறுப்பேற்றுக் கொள்கின்றாரோ, அவருக்கு சொர்க்கம் கிடைக்க நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸஹ்லுப்னு ஸஃத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)
【இன்று நம் நாவு பேசவில்லை கை செல்போன் மூலம் பேசி அனுப்பபடுகிறது.】
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍؓ قَالَ: قُلْتُ: يَا رَسُوْلَ اللهِﷺ مَا النَّجَاةُ؟ قَالَ: اَمْلِكْ عَلَيْكَ لِسَانَكَ، وَلْيَسَعْكَ بَيْتُكَ، وَابْكِ عَلي خَطِيْئَتِكَ. رواه الترمذي
ஹஜ்ரத் உக்பதுப்னு ஆமிர் (ரலி) அவர்கள் யாரஸூலல்லாஹ்! ஈடேற்றம் பெற வழி என்ன?” என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் வினவினேன், உமது நாவைக் கட்டுப்படுத்திக் கொள்ளும். வீட்டில் தங்கியிரும் (வீணாக வெளியில் செல்ல வேண்டாம்). உமது பாவங்களை நினைத்து அழுது கொண்டிரும்!” என்று நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள். (திர்மிதீ)
தெளிவுரை:- நாவைக் கட்டுப்படுத்தி வைத்தல் என்பது, அதைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதாம். புறம் பேசுதல், கோள் சொல்லுதல், வீண் பேச்சுகள் பேசுதல், தேவையின்றிப் பேசுதல், ஒழுக்கமின்றி எல்லாவிதப் பேச்சும் பேசுதல், வெட்கக்கேடான பேச்சுக்களைப் பேசுதல், சண்டை சச்சரவு செய்தல், திட்டுதல், மனிதனையோ மிருகத்தையோ சபித்தல், பாட்டு மற்றும் கவிதையிலேயே எந்நேரமும் ஈடுபடுதல், கேலி செய்தல், இரகசியத்தை வெளிப்படுத்துதல், பொய் வாக்குறுதி அளித்தல், பொய்ச் சத்தியம் செய்தல், சிலேடையாகப் பேசுதல், காரணமின்றிப் பிறரைப் புகழ்தல், காரணமின்றிக் கேள்விகள் கேட்டல் போன்றவைகள். (இத்ஹாப்)
மேற்கூறப்பட்ட எல்லா தீமையான செயல்களும் வாட்சப் குருப்பில் குழுமி இருந்து யாருக்கும் தெரியாமல் / பகிரங்கமாக செயல்படுத்தப்படுகிறது..
【தீமையான செல் போன் வேண்டாம்.. மௌனம் நன்மை தரும்… 】
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍوؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ صَمَتَ نَجَا. رواه الترمذي
மௌனமாக இருந்தவர் ஈடேற்றம் பெற்றுவிட்டார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ)
தெளிவுரை:- வீணான, தீய பேச்சுக்களைவிட்டும் தனது நாவைத் தடுத்துவிட்டவருக்கு, இம்மை, மறுமையின் ஏராளமான ஆபத்துகள், சிரமங்கள், குறைகளிலிருந்து ஈடேற்றம் கிடைத்துவிட்டது. ஏனேனில், பொதுவாக மனிதன் சிக்கிக் கொள்கின்ற ஆபத்துகளில் பெரும்பாலானவை நாவின் மூலம் தான் ஏற்படுகின்றன. (மிர்காத்)
عَنْ عِمْرَانَ بْنِ حَطاَّنَؒ قَالَ: لَقِيْتُ اَبَا ذَرٍّؓ فَوَجَدْتُهُ فِي الْمَسْجِدِ مُخْتَبِئًا بِكَسَاءٍ اَسْوَدَ وَحْدَهُ فَقَالَ: يَا اَبَا ذَرٍّ مَا هذِهِ الْوَحْدَةُ؟ فَقَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اَلْوَحْدَةُ خَيْرٌ مِنْ جَلِيْسِ السُّوْءِ وَالْجَلِيْسُ الصَّالِحُ خَيْرٌ مِنَ الْوَحْدَةِ وَاِمْلاَءُ الْخَيْرِ خَيْرٌ مِنَ السُّكُوْتِ وَالسُّكُوْتُ خَيْرٌ مِنْ اِمْلاَءِ الشَّرِّ. رواه البيهقي
ஹஜ்ரத் இம்ரானிப்னுஹத்தான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்களைக் கறுப்பு நிறக் கம்பளியைத் தம் மீது போர்த்தியவர்களாகத் தன்னந்தனியாக பள்ளியில் உட்கார்ந்திருக்கக் கண்டேன். அபூதர்! இப்படி தனியே அமர்ந்திருப்பதேன்?” என்று நான் வினவினேன், கெட்ட நண்பனுடன் அமர்ந்திருப்பதைவிட தனிமை மேலானது, நல்ல நண்பனுடன் அமர்வது தனிமையைவிட மேலானது, யாருக்கேனும் நல்ல சொற்களைச் சொல்வது மௌனத்தைவிடச் சிறந்தது. தீய வார்த்தை கூறுவதைவிட மௌனமாக இருப்பது சிறந்தது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன் என்று பதிலளித்தார்கள். (பைஹகீ)
【உயிருக்கு உலை வைக்கும் செல்பி மோகம்.. 】
காலை முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை படம் எடுத்து செல்பி எனும் (தாமியாக) பதிவிட்டு ‘லைக்‘கிற்காக ஏங்கிக் காத்திருக்கிறது இன்றைய இளைஞர்கள் கூட்டம்.
நடை, உடை, பேச்சு அணிகலன்களில் நாகரிகம் வந்தது போல தற்போது ஆபத்தான செல்பி எடுத்துப் பதிவிடுவதும் நாகரிகப்போக்காய் வளர்ந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க ஒரு படத்தினை எடுத்து அதனை பதிவேற்றம் செய்து மற்றவரின் லைக்கைப் பெறுவது
【கேளி கூத்தாகும் இணையதளம்.. 】
عَنْ اَبِيْ سَعِيْدِ نِ الْخُدْرِيِّؓ يَرْفَعُهُ قَالَ: اِنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ لاَ يُرِيْدُ بِهَا بَاْسًا اِلاَّ لِيُضْحِكَ بِهَا الْقَوْمَ فَاِنَّهُ لَيَقَعُ مِنْهَا اَبْعَدَ مِنَ السَّمَاءِ. رواه احمد
ஒருவன் மக்களைச் சிரிக்கவைக்க வேண்டும் என்றே ஒரு வார்த்தையைப் பேசிவிடுகிறான், அதை ஒரு குற்றமாகவே கருதவில்லை. ஆயினும், அதன் காரணமாக அவன் வானம், பூமிக்கிடையே உள்ள தூரத்தைவிட அதிகமான ஆழத்திற்கு நரகத்தில் சென்றுவிடுகிறான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்னத் அஹ்மத்)
عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ اْلآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْلِيَصْمُتْ. (الحديث) رواه البخاري،
அல்லாஹுதஆலாவின் மீதும், மறுமை நாளின் மீதும் எவர் ஈமான் கொண்டாரோ அவர் நல்லதைப் பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)
عَنِ الْمُغِيْرَةِ بْنِ شُعْبَةَؓ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُوْلُ: اِنَّ اللهَ كَرِهَ لَكُمْ ثَلاَثًا: قِيْلَ وَقَالَ وَاِضَاعَةَ الْمَالِ وَكَثْرَةَ السُّؤَالِ.رواه البخاري،
உங்களிடம் மூன்று காரியங்களை அல்லாஹுதஆலா வெறுக்கிறான், (பயனற்ற) தேவையில்லாத பேச்சுக்களைப் பேசுவது, பொருளை வீண் விரயம் செய்வது, அதிகமாகக் கேள்விகள் கேட்பது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் முஙீரதுப்னு ஷுஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(புகாரி)
【கான்பிரன்ட்ஸ் கால் கூடாது 】
– عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ اَبِيْهِ عَنْ جَدِّهِ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: لاَ يُجْلَسْ بَيْنَ رَجُلَيْنِ اِلاَّ بِاِذْنِهِمَا. رواه ابوداؤد
இரு மனிதர்களுக்கிடையே அவ்விருவரின் அனுமதியின்றி அமர்வது கூடாது” (அபூதாவூத்)
இருவர் நேருக்கு நேராக இருக்கும் போதே அனுமதி கேட்க்க வேண்டுமென்றால் அவருக்கே தெரியாமல் ஒட்டு கேட்பது ஹராமாகும்.
【பிறரின் குறைகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்யக்கூடாது】
عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ اَقَالَ مُسْلِمًا عَثْرَتَهُ اَقَالَهُ اللهُ عَثْرَتَهُ يَوْمَ الْقِيَامَةِ. رواه ابن حبان
எவர், ஒரு முஸ்லிமுடைய குறைகளை மன்னித்துவிடுகிறாரோ, அவருடைய குறைகளை கியாமத் நாளன்று அல்லாஹுதஆலா மன்னித்து விடுவான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இப்னு ஹிப்பான்)
وَقَالَ تَعَالي: (يآاَيُّهَا الَّذِيْنَ امَنُوْا لاَ يَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسَي اَنْ يَكُوْنُوْا خَيْرًا مِّنْهُمْ وَلاَ نِسَاءٌ مِّنْ نِّسَاءٍ عَسَي اَنْ يَكُنَّ خَيْرًا مِّنْهُنَّ ج وَلاَ تَلْمِزُوْا اَنْفُسَكُمْ وَلاَ تَنَابَزُوْا بِالْاَلْقَابِ ط بِئْسَ الاِسْمُ الْفُسُوْقُ بَعْدَ اْلاِيْمَانِ ج وَمَنْ لَمْ يَتُبْ فَاُؤلئِكَ هُمُ الظَّالِمُوْنَ ۞ يآَيُّهَا الَّذِيْنَ آمَنُوْا اجْتَنِبُوْا كَثِيْرًا مِنَ الظَّنِّ ز اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ وَّلاَ تَجَسَّسُوْا وَلاَ يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا ط اَيُحِبُّ اَحَدُكُمْ اَنْ يَّاْكُلَ لَحْمَ اَخِيْهِ مَيْتًا فَكَرِهْتُمُوْهُ ط وَاتَّقُوا اللهَ ط اِنَّ اللهَ تَوَّابٌ رَّحِيْمٌ ۞ ياَ يُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثي وَجَعَلْنكُمْ شُعُوْبًا وَّقَبَائِلَ لِتَعَارَفُوْا ط اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللهِ اَتْقَاكُمْ ط اِنَّ اللهَ عَلِيْمٌ خَبِيْرٌ۞). (الحجرات: ١٣-١١)
.நம்பிக்கையாளர்களே, எந்த ஒரு கூட்டத்தினரும், மற்றோரு கூட்டத்தினரைப் பரிகாசம் செய்யவேண்டாம்; (ஏனேனில்) இவர்களைவிட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக்கூடும்; எந்தப் பெண்களும் மற்றப் பெண்களை பரிகாசம் செய்யவேண்டாம்; இவர்களைவிட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக்கூடும்; இன்னும் உங்களிடையே குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம்; (மேலும் கெட்ட) பட்டப் பெயர்களைக் கொண்டு (ஒருவருக்கொருவர்) அழைத்துக் கொள்ளாதீர்கள்; நம்பிக்கை கொண்ட பின்னால் தீய பெயரா(ல் அழைப்பதா)னது மிகக் கெட்டதாகும் – (இத்தகு தீமைகளைக் செய்கின்ற) எவரொருவர் (பாவ மன்னிப்புக் கோரி) மீளவில்லையோ, அத்தகையோர் தாம் அநியாயக்காரர்கள்.நம்பிக்கையாளர்களே, (சந்தேக) எண்ணங்களில் பெரும்பாலானவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக அவ்வெண்ணங்களில் சில பாவமாகும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவி ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டாம்; இன்னும் உங்களில் சிலர் சிலரைப் புறம்பேசிக் கொண்டிருக்க வேண்டாம்; உங்களில் ஒருவர் தம் சகோதரரின் மாமிசத்தை (அவன்) பிணமாயிருக்கும் நிலையில் உண்ணவிரும்புவாரா? அப்போது அதனை நீங்கள் வெறுப்பீர்களே; அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்புக் கோரலை ஏற்கிறவன்; மிகக் கிருபையுடையவன். மனிதர்களே, நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஓர் பெண்ணிலிருந்து படைத்தோம்; மேலும் நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்வதற்காக உங்களைப் பல கிளையினராகவும் பல கோத்திரங்களாகவும் நாம் ஆக்கினோம்; (யாராயிருப்பினும்) அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக உங்களில் மிக்க கண்ணியமானவர் உங்களில் (அவனை) மிக்க அஞ்சுவோர் தாம்; நிச்சயமாக அல்லாஹ் முற்றும் அறிந்தவன்; (அனைத்துச் செய்திகளையும்) நன்கு தெரிந்தவன்.
குறிப்பு:- புறம் பேசுவதை இறந்த சகோதரனின் இறைச்சியை உண்பதற்குச் சமமாக அல்லாஹுதஆலா குறிப்பிட்டுள்ளான். மனித இறைச்சியைப் பிய்த்துப் பிய்த்துத் தின்பதால் அவனுக்கு வேதனை ஏற்படுவதுபோல் முஸ்லிமைப் பற்றிப் புறம் பேசுவதால் அவருக்கு வேதனை ஏற்படுகிறது. இறந்த மனிதனுக்கு வேதனையின் தாக்கம் தெரியாததைப் போன்றே எவரைப் பற்றிப் புறம் பேசப்பட்டதோ அவருக்குப் புறம் பேசியதின் விபரம் தெரியாமல் இருக்கும்வரை வேதனையடையமாட்டா
【 இஸ்லாமிய பெண்களின் பெற்றோர்களின் கடமை:】
عَنِ ابْنِ عُمَرَؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، اَلْإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْرَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَمَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا، وَالْخَادِمُ رَاعٍ فِي مَالِ سَيِّدِهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ فِي مَالِ أَبِيهِ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَكُلُّكُمْ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ. رواه البخاري،
நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்கள், உங்களில் ஒவ்வொருவரிடமும் (அவருக்குக் கீழ் உள்ளவர்கள் பற்றி) விசாரிக்கப்படும், அரசன் பொறுப்பாளன், அவரிடம் அவரது குடிமக்களைப்பற்றி விசாரிக்கப்படும். குடும்பத் தலைவன் தனது வீட்டாருக்குப் பொறுப்பாளன், அவரிடம் அவரது வீட்டாரைப்பற்றி விசாரிக்கப்படும். பெண் தன் கணவனுடைய வீட்டிற்குப் பொறுப்பாளி அவளிடம் அவ்வீட்டில் வசிக்கின்ற குழந்தைகள் போன்றோரைப் பற்றி விசாரிக்கப்படும். வேலைக்காரர் அவரது முதலாளியுடைய பொருளுக்குப் பொறுப்பாளர், அவரிடம் அவருடைய முதலாளியின் உடமைகள், செல்வங்களைப் பற்றி விசாரிக்கப்படும், மகன் அவனுடைய தந்தையுடைய பொருளுக்குப் பொறுப்பாளன், அவனிடம் அவனது தந்தையுடைய பொருளைப்பற்றி விசாரிக்கப்படும். உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள், ஒவ்வொருவரிடமும் அவருக்குக் கீழ் இருப்பவர்கள் பற்றி விசாரிக்கப்படும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (புகாரி)
பெற்றோர்களகிய நாம் அவசியம் தம் பிள்ளைகளைகள் படிக்கின்ற இடம், விளையாடுகின்ற இடம், பழகுகின்ற இடம், பழகும்நண்பர்களையும், போன் பேசுவது யாரிடம் என கண்னும் கருத்துமாக கண்கானித்து வரவேண்டும். நம்புவதும் நம்பிக்கையை வளர்ப்பதும் பெற்றோர்களின் கடமைகளில் ஒன்றாகும்.
【 தீமைகளின் ஆரம்பம் செல்தான்:】
பெற்றோர்கள் தங்களின் பிள்ளையில் செல்லை அவ்வ போது கண்கானிக்க வேண்டும். பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரியதவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக்கொடுப்பதாகும். செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக்கொண்டிருக்கிறது.
பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன. செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்குசர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.
【 பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்பதில் கவனம் தேவை:】
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلٰٓٮِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். 66:6.
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவீர் . தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்கள்கள் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) , தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் , தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான். (நூல்: புகாரி 2409)
【 சபதம் எடுங்கள்】
அன்புள்ளவர்களே!! இன்ஷா அல்லாஹ் இன்றிலிருந்து. எனது மவ்த் வரைக்கும் செல்போனை தவறாக யூஸ் பண்ண மாட்டேன் என்று..
ஆக அல்லாஹ் இவ்வுலகில் வாழும் நம் முஸ்லிம் சமுதாயத்தினரின் தீய அவபெயர்களை விட்டும் நம் அனைவரையும் பாதுகாத்து அவனது பேரருளை ஈருலகிலும் நிரப்பமாக தந்தருள்வானாக!!! ஆமின் என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ குறிப்புரையை நிறைவு செய்கிறேன்
✍🏻✍🏻நன்றியுரை:- تقبل الله منا ومنكم صالح الأعمال نسأل الله أن ييسر لنا أمورنا ويشرح صدورنا
“ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً، என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். புகாரி 3461.
எல்லா வல்லமைகளும் நிறைந்த அல்லாஹ் இந்த ஜுமுஆ பயான் குறிப்புரை அங்கிகரித்து, இதன் மூலம் எல்லோரும் அறிவுரை பெற்று ஈருலகிலும் நற்பயனடைய நல்லருள் புரிவானாக!!!ஆமீன்.. அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இக்குறிப்புரையின் தலைமையாசிரியர் & இக்குழு கண்காணிப்பாளர்:-
எஸ்.எம்.ஹெளஸீ மவ்லானா.உங்களின் துஆக்களை பெற பேராசைப்படும்:-
உஸ்தாதுனா எஸ்.எம்.ஹெளஸீ மவ்லானா. வாசுதேவநல்லூரி. செல் 9487007358 & ٩٩٤٢٤٠٧٣٥٨ . நான் விவசாயி..
மெளலானா ஹாபிழ் களந்தை.B. அபு அஜ்மல் புகாரி யூசுபிஉதவியாசிரியர்:-
உஸ்தாதுனா மெளலானா ஹாபிழ் களந்தை B. அபு அஜ்மல் புகாரி யூசுபி. செல் 8754089943.
ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ
கருத்துகள்
கருத்துரையிடுக