*நம் தொழுகை எந்த வகையைச் சேர்ந்தது?*

*நம் தொழுகை எந்த வகையைச் சேர்ந்தது?* 

‎ذكر ابن القيم - رحمه الله - في كتابه : ( الوابل الصيب ) 
‎أن الناس في الصلاة على خمسة أقسام :
இமாம் இப்னுல் கய்யிம் ரஹ்மத்துல்லாஹி அவர்கள் மனிதர்களின் தொழுகையை ஐந்து வகையாகப் பிரிக்கிறார்கள். 

‎* معاقب :
‎( يعاقبه الله على صلاته !! )
தண்டனைக்குரிய தொழுகை
அந்தத் தொழுகையின் காரணமாக அல்லாஹ் 
அவனைத் தண்டிப்பான். 

‎* محاسب:
‎( يحاسبه الله على صلاته !! )
விசாரணைக்குரிய தொழுகை
அந்தத் தொழுகையைப் பற்றி 
அல்லாஹ் விசாரிப்பான். 

‎* مكفرٌ عنه:
‎( يكفّر الله عنه بصلاته )
பாவங்களுக்குப் பரிகாரமாகும் தொழுகை
அந்தத் தொழுகையின் காரணமாக அல்லாஹ்
அவனின் பாவங்களை மன்னிப்பான். 

‎* مثاب:
‎( يكسب ثواب على صلاته )
நன்மைகளை அள்ளித் தரும் தொழுகை
அந்தத் தொழுகையின் காரணமாக 
அல்லாஹ் அவனுக்கு நன்மைகளை
வழங்குவான். 

‎* مقرَّب
‎( يقرِّبه الله إليه بصلاته )
அல்லாஹ்வின் பால்  நெருக்கமாக்கும் தொழுகை,
அந்தத் தொழுகையின் காரணமாக அல்லாஹ் w
தன் பால் அவனை நெருக்கமாக்குவான்.
*
முதல் வகைத் தொழுகை,
ஒருவன் தொழுகிறான்; ஆனால் ஒழுங்காக முழுமையாக ஒழுச் செய்வதிலோ, தொழுகையுடைய பர்லு, வாஜிபு, சுன்னத் போன்றவைகளை சரிவரச் செய்யவேண்டும் என்ற கவனமோ இன்றி ஏனோதானோ எனத் தொழுகின்றான்; இத்தகைய தொழுகையால் அவன் தண்டிக்கப்படுவான்
*
இரண்டாவது வகை.
ஒருவன் தொழுகை நிறைவேறுவதற்குத் தேவையான பர்லு, வாஜிபுகளை முறையாக நிறைவேற்றித் தொழுகிறான், 

ஆனால் தக்பீர் கட்டித் தொழுகையில் நுழைந்ததிலிருந்து  அஸ்ஸலாமு அலைக்கும் என ஸலாம் கூறித் தொழுகையிலிருந்து வெளியேறும் வரை என்ன ஓதினோம் எனத் தெரியாத அளவு இவ்வுலக சிந்தனையில் மூழ்கியவாறே தொழுது முடிக்கிறான். 

தன்னுடைய தேவைகளை நிறைவேற்றும் போது அவை நிறைவேறும் வரை அதே சிந்தனையில் இருக்கும் மனிதன் தொழுகையில் மட்டும் வேறு சிந்தனையில் சுழலுகிறான்.
இத்தகைய தொழுகையைப் பற்றி மறுமையில் அல்லாஹ் விசாரிப்பான். 

மூன்றாவது வகை:
தொழுகையின் அனைத்து ஷர்த்துக்களையும் முழுமையாக நிறைவேற்றுவதுடன் தொழுகையை ஆரம்பித்திலிருந்து தொழுது  முடிக்கும்வரை துன்யாவின் பால் சிந்தனை செல்ல விடாமல்  தன்னுள்ளே இருந்து வழிகெடுக்கும் ஷைத்தானுடனும், நப்ஸுடனும் போராடிக்கொண்டே தொழுது முடிக்கிறான்.
இந்தத் தொழுகையின் காரணமாக அல்லாஹ் அவனின் பாவங்களை மன்னிக்கின்றான்.

நான்காவது வகை:
தொழுகையின் அனைத்து பர்ழுகளையும், சுன்னத்துகளையும் பரிபூரணமாக நிறைவேற்றி உள்ளச்சத்துடன் முழுக் கவனத்துடன் தொழுகிறான்.
இத்தகைய தொழுகைக்காக அவனுக்கு அல்லாஹ் அளப்பரிய நன்மைகளை வழங்குகிறான்.

ஐந்தாவது வகை: 
மிக உயர்ந்த நிலை
தொழுகையின் அனைத்து பர்ழுகளையும், சுன்னத்துக்களையும் பரிபூரணமான நிறைவேற்றுவதுடன் தான் முன்னோக்கும் கிப்லாவின் முன் தொழுகையை அந்த றப்புல் ஆலமீன் பார்த்துக் கொண்டு இருக்கின்றான் என்னும் எண்ணத்தோடு தொழுகின்றான். 

இதுதான் நான்காவது வகை தொழுகைக்கும் இந்தத் தொழுகைக்குமுள்ள வித்தியாசம்.
அதில்  உள்ளச்சம் இருக்கும் ஆனால் தன் முன்னால் அல்லாஹ் இருப்பதைப் போன்ற உணர்வும் அவனுடன் உரையாடுகிறோம் எனும் உணர்வு ம் இருக்காது. 

ஆனால் ஐந்தாவது வகை தொழுகையில் சர்வ வல்லமைமிக்க ரப்புல் ஆலமீன் தன் முன்னால் இருப்பதை  உணர்ந்தவனாக நடுக்கத்துடன் முழுக் கவனமும் தொழுகையில் செலுத்தி தொழுது முடிப்பது;
இது உண்மையில் மிகவும் அற்புதமான தொழுகை. நிச்சயமாக
இந்தத் தொழுகை மனிதனை அல்லாஹ்வின் பால் அவனை நெருங்கச் செய்யும். 

சொல்லுங்கள் சகோதர, சகோதரிகளே!
இதில் எந்த வகையைச் சேர்ந்தது நம் தொழுகை? 

வாருங்கள்
நம்முடைய உள்ளத்தில் இறை அச்சத்தை ஏற்படுத்தவும்,
நம்மை அவனுக்கு நெருக்கமான நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்க்கவும் அல்லாஹ்விடம் அழுது மன்றாடுவோம்...!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?