புன்னகையே பொன் நகை
==================
விதண்டாவாதம் செய்வதற்காகவே சிலர் கேள்வி கேட்பார்கள். கிண்டலுக்காக சிலர் கேட்பார்கள். இன்னும் சிலரோ ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்பார்கள்.
இவ்வகை கேள்விகளுக்கு இமாம்கள் எப்படி பதில் கூறியுள்ளனர் பாருங்கள்.
😂😂😂
இமாம் ஷஅபி அவர்களிடம் ஒருவர் கேட்டார்:
“நான் திருமணம் செய்த பெண், கால் ஊனமுற்றவளாக இருக்கிறாள். அவளை விவாகரத்துச் செய்வதற்கு அனுமதி உண்டா?”
இமாம்: “அவளுடன் நீ ஓட்டப் பந்தயம் நடத்த நாடியிருந்தால் விவாகரத்து செய்யலாம்”.
😂😂😂
அதே இமாம் அவர்களிடம் ஒருவர்: "இஹ்ராம் ஆடை அணிந்தவர் உடம்பை சொறியலாமா?”
இமாம்: “ஆம்”
“எவ்வளவு தூரம் சொறியலாம்?”
இமாம்: "எலும்பு வெளியே தெரியும் அளவுக்கு”.
😂😂😂
ஒருவர் இமாம் அவர்களிடம், ‘உளு செய்யும்போது தாடி முடியை தண்ணீரால் தடவுவது (மஸஹ் செய்வது) எப்படி?’ என்பது குறித்து கேட்டார்.
இமாம்: "விரல்களால் கோதிக் கழுவுங்கள்”.
வந்தவர்: "அவ்வாறெனில் முடி முழுமையாக நனையாதோ என்று பயப்படுகிறேன்”.
இமாம்: "அவ்வாறெனில் தாடியை இரவே தண்ணீரில் ஊற வையுங்கள்”.
😂😂😂
இப்னு உஸைமீன் அவர்களிடம் ஒருவர்: "துஆ கேட்டு முடித்த பின்னர் ஒருவர் என்ன செய்ய வேண்டும்?”
இமாம்: "கரங்களை கீழே இறக்க வேண்டும்..!!”
😂😂😂
அபூஹனீஃபா (ரஹ்) அவர்களிடம் ஒருவர், "ஆற்றில் குளிக்கும்போது முகத்தை கிப்லா பக்கம் திருப்ப வேண்டுமா அல்லது வேறு திசையிலா?”
இமாம்: "ஆடை இருக்கும் திசையில். ஏனெனில், ஆடை திருட்டு போய்விட்டால் பெரும் பிரச்சினையாகிவிடும்”.
😂😂😂
இமாம் அம்ர் பின் கைஸ் அவர்களிடம் ஒருவர், "ஸுஜூத் செய்யும்போது ஆடையிலோ நெற்றியிலோ ஒட்டிக்கொண்டிருக்கும் பொடிக் கற்களை என்ன செய்வது?”என்று கேட்டார்.
இமாம்: "கையில் எடுத்து வெளியே வீசிவிடு”.
அவர்: "மீண்டும் பள்ளிவசலுக்குள் செல்லும் வரை அவை அழுதுகொண்டே இருக்கும் என்று சொல்கிறார்களே”.
இமாம்: "தொண்டை கிழியும் வரை அவை அங்கேயே கிடந்து அழட்டும்”.
அவர்: "கற்களுக்கு தொண்டை உண்டா?”
இமாம்: "தொண்டை இல்லாமல் அழுகை எப்படி வரும்?”
😂😂😂
ஒரு புத்திசாலி, அனுமதிக்கப்பட்ட நகைச்சுவைகள் மூலம் மனித உள்ளங்களை தன் பக்கம் திருப்ப வேண்டும் என்று இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) கூறியுள்ளார்.
எப்போது பார்த்தாலும் வேலைப் பளுவில் மூழ்கிக் கிடக்கும் இதயங்களுக்கு இதுபோன்ற சிலேடைகளும் சிலபோது தேவைப்படும்.
(ரவ்ளதுல் உகலாஃ)
கருத்துகள்
கருத்துரையிடுக