யாநபீ பைத்து.பொருள்.يا نبي سلام عليكم
யாநபீ பைத்து.பொருள்.
يا نبي سلام عليكم
يا رسول سلام عليكم
يا حبيب سلام عليكم
صلوات الله عليكم
1)நபியே ஸலாம்
ரசூலே ஸலாம்
ஹபீபே ஸலாம்
இறயருள்உங்கள்மீதே
உரித்தாகுக!
اشرق البدر علينا
فاختفت منه البدور
مثل حسنك ما راينا
قط يا وجه السر ور
2)தோன்றியதுமுழுமதி!
மறைந்தனசந்திரன்கள்!
தங்களைபோல்
ஓர்அழகை
தரணியிலே
கண்டதில்லை!
சந்தோஷத்திருமுகமே!
அருமை நபி நாயகமே!
انت شمس انت بدر
انت نور فوق نور
انت اكسير وغالي
انت مصباح الصدور
3)சூர்ய ஒளியும் நீரே!
சந்திர அழகும் நீரே!
பெருஞ்சோதியும்நீரே!
நெஞ்சத்திருவிளக்குநீரே
துயர் நீக்கும்தூய திரவமும்நீரே!
ياحبيبي يامحمد
ياعروس الخافقين
يا مؤيد يا ممجد
يا أمام القبلتين
4)எனதுஉயிரே
முஹம்மதுவே!
இருதுருவ
மணமகனே!
பேருதவிபெருங்கீர்த்தி
இருகிபுலாஇமாமென
ஒளிச்சுடர் நாயகமே!
من رىءا وجهك يسعد
يا كريم الوالدين
حوضك الصافي المبرد
وردنا يوم النشور
5)தங்களின் திருமுகம்
காண ஆவல்மீறுதே!
பெற்றோர் பெரும்
பாக்கியசாலிகள் தான்!
தெளிந்த குளிர்ந்த
தடாகம் தனில்!
எங்கள்தாகம்தீர
அருள் வீர் நாயகமே!
انت غفار الخطايا
والذنوب الموبقات
انت ستار المساوى
ومقيل العثرات
6)நபியே தாங்கள்
பிழைகளை மன்னிப்பவர்!
அழிவில்சேர்க்கும்
பாவங்களை
மன்னிப்பவர்!
குற்றங்களை
மறைப்பவர்!
குற்றப்பின்னணி
களைநீக்குபவர்!
يا ولي الحسنات
يا رفيع الدرجات
كفروا عني ذنوبي
واعف لي عن سيات
7)நன்மைகளின்
அதிகாரியே!
பதவிகளை
உயர்த்துவோரே!
எனதுகுற்றங்குறைகளை
பொறுத்தருள்வீரே!
عالم سر واخفى
مستجيب الدعوات
رب ارحمنا جميعا
بجميع الصالحات
இறைவா எம்பெரும!
ரகசியங்களை அறிந்தவன் நீ!
துஆக்களைஏற்பவன்நீ!
நன்மைகளின்
வஸீலாவில்
அனைவருக்கும்
நல்லருள் புரிவாய் நீ!
தமிழாக்கம்
அபதுல்ரஹ்மான்
இம்தாதிகோவை
கருத்துகள்
கருத்துரையிடுக