முஹம்மது" இறைவன் எழுதிய முதல் கவிதை.
முகம்+ மது = முஹம்மது*
"முஹம்மது" இறைவன் எழுதிய முதல் கவிதை.
மொழியப்படும் எல்லா மொழிகளிலும் ஒலிக்கும் கவிதை.
"முஹம்மது" சுவனத்தின் கடவுச்சொல்.
இதழ்களின் முத்த ஸ்பரிஸத்தில் பூக்கும் புன்னகைச் சொல்.
சுவன வாசலில் இறைவனே எழுதி, பார்த்துப்பார்த்து ரசித்த பெயரது.
முகம் 'மது' அந்த முகத்தில்தான் எத்தனை மது?
அகம் மது
அகமதால் சுவைக்கப்பட வேண்டிய அகமது.
புவனத்தின் பூக்களையெல்லாம் பிழிந்து சாராக்கினாலும் பேரின்பம் தரவியலா சுவன மது.
மாது ஆமினா தந்த மது.
அப்துல்லாஹ் சேயமுது.
தத்தமது என எல்லோரும் கொண்டாடும் சொந்தமது.
ஹலிமா பாலமுது
கலிமா பொருள் சொன்ன பிள்ளைக் கனியமுது.
*முஹம்மது*
அன்புடன்
அபூதாஹிர் ஃபஹீமி மஹ்ழரி
கருத்துகள்
கருத்துரையிடுக