ஹூப்புன்னபீபைத்து பொருள்

ஹூப்புன்னபீ
பைத்து பொருள்

مولاي صل وسلم دائما ابدا
على حبيبك ممدوحا بفرقان
1) என்எஜமானனே!மாமறையாம்அருள்மறையாம்குர்ஆனில்
புகழப்பட்ட
உனதுநேசர்நபி ஸல்அவர்கள்மீது
எக்காலமும் 
ஸலவாத்தும் ஸலாமும்
சொல்வாயாக!
حب النبي على الانسان مفترض
وحب أصحابه نور ببرهان
2) பெருமான் நபியின் மீதுநேசம்கொள்வது
மனித இனத்தின்மீது
கடமையாகும்
அன்புநபியின்அன்புத்தோழர்களைநேசிப்பது
மறுமையின் நல்ல
ஆதாரமாகும்!

من كان يعلم أن الله خالقه
لا ير مين ابابكر ببهتان
3)அல்லாஹ்தான்
தன்னைப்படைத்தவன்
என்பதை யார்அறிந்தாரோ!
அவர் அண்ணல்அபூபக்கர்ரழி
அவர்களை குறைகூறவேண்டாம்!

ولا ابا حفص ن الفاروق صاحبه
ولا الخليفة عثمان بن عفان
4)மேலும்அபாஹஃப்ஸ்
உமர்(ரழி)அவர்கள்மீதும்
அன்னவர்உஸ்மான்ரழி
அவர்கள்மீதும்
பொய்யான அவதூறுகள்
சொல்லவேண்டாம்!
ولاعليا ابا السبطين نعم فتي
اوصى به الله في سر واعلان
5)ஸையிதினாஹசன்
(ரழி)ஸையதினா
ஹுசைன்(ரழி)
அவர்களின்தந்தையும்
மிகச்சிறந்த கொடையாளியும்
ஆன அவர்களின்
கண்ணியத்தை
ரகசியத்திலும்
பரகசியத்திலும்
காத்திட இறைவன்
பணித்துள்ளவரான
அண்ணல் அலிரழியின்மீதும்
அவதூறு சொல்ல
வேண்டாம்!

ولاسعيدا وسعدا طلحةوزبي
را عامرا وابن عوف عبدرحمان
6)மேலும் ஸஃது ஸ ஈத்
தல்ஹா ஜுபைர் ஆமிர்
அவஃபின்செல்வர் அப்துல்ரஹ்மான்
ஆகியோர் மீதும் அவதூறு கூறாதீர்

ركن الشريعة بحر العلم منتخب
والبيت لا يستوي الا با ركان
7)இவர்கள்அனைவருமே
ஷரீஅத்எனும்
கோட்டைக்குத்தூண்
போன்றவர்கள்.
கல்வி க்கடலானவர்கள்
தேர்வுசெய்யப்
பட்டவர்கள்
கோட்டை
தூண்களின்றி
நிலைநிற்காது.

شاعت مناقبهم في الناس كلهم
مابين علم واحكام وتبيان
8) இவர்கள் கல்வி அறிவு மார்க்கத்தீரப்புகளில்
தெளிவுபெற்றமாமேதைகள் என்பதெல்லாம்
உலகோர்அறிந்த
செய்திகளாகும்!

لا يستطيع العدى منهم محاربة
ولوا اتوهم با بطال وشجعان

9)அதுமட்டுமா?பகைவர்களில்
எத்தனை சுத்த வீரர்கள்
வந்தாலும் இவர்களுடன்
போரிட்டுவெற்றி
பெற சக்தி
பெறமாட்டார்கள்!

فهم صحابة خير الخلق خصهم 
رب العباد بجنات ورضوان

10)அவர்கள்
படைப்புகளில்மிகச்
சிறந்தமாநபியின்
தோழர்கள்ஆவார்கள்!
வல்லோனாம்அல்லாஹ்
அவர்களைத்
தனது பொருத்தத்
திற்கும்சொர்க்கத்திற்கும்
சொந்தமாக்கிக்
கொண்டான்!

فمن احبهم قد نال منزلة
عند الإله وجا زاه با حسان 
11)யார் இவர்களை
மணமுவந்து
நேசிப்பார்களோ
அவர்கள்அல்லாஹ்
விடத்தில்உயர்வான
பதவிகளைபெற்றுக்
கொள்வதோடு
நற்கூலி களையும்
பெறுவார்கள்!

عليهم من سلا م الله اطيبه 
ما ناحت الورق في اوراق اغصان
12)மாடப்புறாக்கள் மரக்கொப்புகளிலிருந்து
கூவிக்கொண்டிருக்கும்
காலமெல்லாம்
மணம் நிறைந்த
அல்லாஹ்வின்ஸலாம்
அந்த மேன்மக்கள் மீது
உண்டாவதாக!

துஆவைநாடி

தமிழாக்கம்

அப்துல் ரஹ்மான் இம்தாதி கோவை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?