இடைவெளி
#இடைவெளி
------
கடிதத்திலோ கட்டுரையிலோ இரண்டு சொற்களை அடுத்தடுத்துப் பயன்படுத்தும் பொழுது இரண்டிற்குமிடையே இடைவெளி விடுவதில் கவனம் செலுத்த வேண்டும் இல்லாவிட்டால் நீங்கள் சொல்ல வரும் கருத்து மாறிவிடும்
உதாரணமாக அரபியில் #லா' என்ற வார்த்தைக்கும்
#உரீதுக்க என்ற வார்த்தைக்கும் இடையே இடைவெளி விடாமல் '#லாஉரீதுக்க' என எழுதினால் #உன்னை நான் விரும்பவில்லை என்று பொருள் தரும்.
இடைவெளி விட்டு '#லா,உரீதுக்க' என இடைவெளி விட்டு எழுதினால் #அவ்வாறல்ல, நான் உன்னை விரும்புகிறேன்' என பொருள் தரும்.
இதைப் படித்த போது, பல ஆண்டுகளுக்கு முன் படித்த ஒரு செய்தி நினைவிற்கு வந்தது.
ஒரு திருமண ஏற்பாட்டாளர் பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளயைப் பற்றி 'தந்தி'யின் மூலம் தகவல் தரும்போது #மாப்பிள்ளை கருப்பு பணம் நிறைய இருக்கிறது என எழுதினாராம்.
அவர் மாப்பிள்ளை கருப்பாக இருந்தாலும் பணம் நிறைய இருக்கிறது' எனச் சொல்ல வந்தவர் கருப்பு என்ற சொல்லிற்கும் பணம் என்ற சொல்லிற்கும் இடையே இடைவெளி விடாததால் 'கருப்புப்பணம் நிறைய வைத்திருப்பவர் நமக்கு வேண்டாம் என நிராகரித்து விட்டார்களாம்
-----கணியூர் இஸ்மாயில் நாஜி பாஜில் மன்பயி, காசிமி
கருத்துகள்
கருத்துரையிடுக