அல்ஹம்துலில்லாஹில்லதீ பைத்துபொருள்

அல்ஹம்துலில்லா
ஹில்லதீ பைத்து
பொருள்

الحمد لله الذي أعطاني
هذا الغلام الطيب الارداني
1) மணமும் சிறப்பம்
வாய்ந்த இந்த குழந்தையைத்தந்த
அல்லாஹ்வுக்கே
எல்லா புகழும்!

قدساد في المهد على الغلمان
اعيذه با لله ذي السلطان
2)தொட்டில்
பிள்ளைகளிலேயே
மற்ற பிள்ளைகளை விட
தலைமைத்தனமும்
நாயகத்தனமும் கொண்ட
இப்பிள்ளைக்கு
சுல்தானாகிய
அல்லாஹ்விடம்பாது
காவல் தேடுகிறேன்!

حتى اراه بالغ البيان
اعيذه من شر ذي شنءان
3) விபரமறியும்பருவ
வயதை
இக்குழந்தை
அடைவதை நான் காணும்
வரை இறைவா
கோபக்காரர்களின்
தீங்கைவிட்டும்
பாதுகாவல் தேடுகிறேன்!

من حاسد مضطرم العينان

4)எரிந்து விழும் கண்களையுடைய பொறாமைக்காரரின் கண்திருஷ்டி
தீங்கைவிட்டும்
பாதுகாவல்தேடுகிறேன்
(இதுவரைபாட்டனார்
அப்துல்முத்தலிபுஅவர்களின்கவிதை)

(பினால்வருவது
பின்னோர்களான
நல்லோர்களால்
பாடப்பட்டது)

أنت الذي سميت في القران
احمد مكتوبا على الجنان

5)நபியே நாயகமே!
தங்களின் உயர்திருப்
 பெயரான அஹ்மது
சுவனங்களிலும்
அருள்மறையாம்
குர்ஆனிலும்
எழுதப்பட்டுள்ளது!

صلى عليك الله في الاحيان
احمده في السر والاعلان
6)எந்நேரமும்ஏகன்
அல்லாஹ்தங்கள்மீது
ஸலவாத்து
சொல்வானாக!
அந்த வல்லோன்
அல்லாஹ்வை
வெளிப்படையாகவும்
மறைவாகவும்
புகழ்கிறேன்!

حقا على الاسلام والايمان
இஸ்லாம் ஈமானில்
உண்மையாய்
நிலைத்தவனாய்
அல்லாஹ்வைப்
புகழ்கிறேன்

صلى عليك خالق الجنان
مادام أبد الرحمة الرحمان
7)சொர்க்கங்களைப்
படைத்த அருள்மிக்க
அல்லாஹ்வின் நல்லருள்நானிலம்
எங்கும்நிலவிடும்
காலமெல்லாம்
அல்லாஹ் தங்கள் மீது
ஸலவாத்சொல்வானாக!

துஆவைநாடி

அப்துல் ரஹ்மான் இம்தாதி கோவை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?