அஹ்யாரபீஅல்கல்பிபைத்து பொருள்

அஹ்யாரபீஅல்கல்பி
பைத்து பொருள்

احي ربيع القلب شهر المولد
كل الانابذكر مولد احمد
1)மரித்த உள்ளங்கள் எல்லாம் நபி பிறந்த
மாதத்தின்பொருட்டால்
உயிர்பெற்று இலங்கின!
அஹ்மது நபியின்பிறப்பை
நினைவுகூறி
மக்கள்
பரவசமடைகின்றனர்!

جاءت لمولده الشريف بشاءر
وخوارق العادات ليلة مولد
2)நபி பெருமான் பிறந்த
இரவில் ஆச்சர்யங்களும்
அதிசயங்களும்
நற்ச்செய்தியும்உலகில்
நிகழ்ந்தன!

شرف الزمان واهله بوجوده
شرفا يروح على الزمان ويغتدي
3)பூமான்நபிபூஉலகில்
பிறந்ததால்
பூவுலகும்பூஉலகின்
காலமும்காலத்தின்
மனிதர்களும்
மகிழ்ந்தனர்!
சிறப்புற்றனர்!

وفى وليل الجهل قد حجب الهدى
فبدى الصباح بنوره المتوقد
4)அறியாமை இருள்
நேர்வழி ஒளியை மறைத்திருந்த போது!
பூமான்எனும்பூரண
ஒளியால்
இஸ்லாம்எனும்சூரியன்
தோன்றியது!

فهدى ضلال الحاءرين بنوره
حتى استبان عناد من لم يهتدي

5)பெருமான்நபியின்
வரவால் வழிகேடர்கள்
நேர்வழி பெற்றனர்
வம்பர்களின்
பிடிவாதம்வெளியாகும்
வரை!அவர்கள் நேர்வழி பெறவுமில்லை!

ابدى لنا سبل الرشاد ولم يدع
منها سبيلا فهو اكرم مرشد
6)நேர்வழிப்பாட்டைகள்
அனைத்தையும்நமக்கு
வெளியாக்கினார்கள்!
சங்கையும்மிக
 கண்ணியமும்நிறைந்த
பூமான்நபிஅவர்கள்!

فامد فينا بحر علم زاخر
عذبا لذيذ الورد سهل المورد
7)மிக எளிமையான
இனிமையான சுவைக்க
தகுதியான
மார்க்கஞானங்களை
அலைகடலெனநம்மில்
நிலைக்கச்செய்தார்கள்
அண்ணல் நபி அவர்கள்!

اياته والمعجزات كثيرة
شهدت بصحتها عقول الحسد
8)அண்ணல்நபியின்
அற்புதங்களும்அத்தாட்சி
களும்ஏராளம்ஏராளம்!
அவைகளைப்பொறாமைக்கார்களின்
அறிவும்ஏற்றுசான்று
கூறியது!

البدرشق بامره والشمس اذ
غربت له ردت بغير تردد
9)அருமை நபியின்
உத்தரவை ஏற்று
சந்திரன் பிளர்ந்ததும்
மறைந்தசூரியன்
திரும்பவந்ததும்
சந்தேகத்திற்கு
இடமில்லாத
செய்தியாகும்!

والوحش والاشجار قد سجدت له
وعليه قدسلمن بعد تشهد
10)மரங்களும் வன
விலங்குகளும்
மார்க்கத்தைஏற்று
மாநபிக்குஸஜ்தா
செய்தன!
ومن اليسير سقى واطعم جيشه
حتى اكتفوا ويسيره لم ينفد
11)குறந்த அளவேயுள்ள
தண்ணீரிலும்உணவிலிருந்தும் தனது
படையினருக்கு
நிறைவாக உணவும்
தண்ணீரும்புகட்டியும்கூட
சிறிதளவும்அவைகள்
குறையவில்லை!

12)وسرى وقد اسرى به سبحانه
يقضان ممتطاء اعالى الفرقد
12) விழித்திருக்கும்
நிலையில்நபிகளாரை
தூயநாயன்அல்லாஹ்
;ஃபர்கத்;என்ற
நட்சத்திரத்திற்கும்
மேல்நோக்கிஇரவில்
நடத்தாட்டினான்!

وعلا على الافلاك والاملاك في
مسرىه يشهد ثم مالم يشهد
13)வானங்களைத்
தாண்டி
உயர்ந்து போனார்கள்
அவ்வுயர்ந்தபயணத்தில்
வானோர்களைக்
கண்டார்கள்
அங்கேவானோர்கள்
காணாததையும்
கண்டார்கள்!

وله مدى انفاسه مع ربه
ما شءت من قرب ولذة مشهد
14)இறைவனைக் காண்பதில் உள்ளமகிழ்ச்சியும்
இறைவனுடனான
நெருக்கமும்
மாநபிஸல் அவர்களின்
மூச்சுவிடும்
தூரமேயாகும்!

اوصافه ما ينتهي تعدادها
فا لمدح يقصر عن بلوغ المقصد
16) பெருமான் நபியின்
வர்ணணைஒருமட்டு
திட்டுக்குள்அடங்காதது!
அண்ணாரின் திருப்புகழ்
நாடியநாட்டங்களை
விரைவில்
அடைந்திடச்செய்யும்!

ياسيد السادات جءتك قاصدا
ارجوا حماك فلا تخيب مقصدي
17)தலைவர்களுக்
கெல்லாம் தலைவரே
எனது நாட்டங்கள்
வீணாகமல்இருக்க
தங்களின்ஆதரவை
நாடிவந்துவிட்டேன்!

مالي سوى حبي لديك وسيلة
فامنن علي بفضل جودك اسعدي
18)என்அன்பின்நாயகமே!
தங்கள்மீதுநான்
கொண்டுள்ள அன்பை
வஸீலா வாக்கி
தங்களின்கொடையால்
அடியேன் சீதேவித்தனம்
பெற உதவிடுவீர்!

آني نزيلك والنزيل لديك يا
خيرالانام بكل خير يغتدي
19)மனிதர்களில்
சிறந்தவரே!அடியேன்
விருந்தாளியாய்
தங்களிடம்
வந்திறங்கினேன்
தங்களிடம் வந்தவர்
எல்லாம் அனைத்து
நன்மைகளையும்
பெறுபவர்தான்!
فعليك منا كل وقت دائما
ازكى الصلاة مع السلام السرمدي

20)எந்நேரமும் எக்காலமும் தங்களின் மீது எங்கள் ஸலவாத்தும்
ஸலாமும்உண்டாவதாக!

وعلى صحابتك الكرام جميعهم
والتا بعين لهم بخير فاجهد 

21) அவ்வாறே தங்களின்
நல்லறத்தோழர்கள்
அவர்களைத்தொடர்ந்தோர்கள்மீதும்உண்டாக!
நன்மையால் எங்களை
பலம் பெறச் செய்வீராக!

قدحل بي ما قدعلمت من الاذى
والظلم والضعف الشديد فاسعد
22)கடும் பலஹீனம்
மனவேதனை நோவினை எனைத்தாக்கி
உருக்கிக்
கொண்டிருப்பதை
நாயகமேதாங்கள்அறிவீர்
அவை நீங்க அருள்புரிவீர்!

اشفع لربك ان يعافيني وان
لايشمث الاعداء بي يا سيدي
23)என்னுயிர் நாயகமே!
என்பிணிகள்நீங்கி
நற்சுகம்பெறவும்
என்னால் என் எதிரிகள்
வெற்றி
பெறாமலிருக்கவும்
ரப்பிடம்பரிந்துரைப்பீர்
நாயகமே!

يا رب يا الله هذا المصطفى
شفعه في وعاف سمعي واردد
24)என்இறைவா! யாஅல்லாஹ்!இந்த
முஸ்தபா நபி(ஸல்)
அவர்களை என்விஷயத்தில் பரிந்துரைக்கச் செயவாயாக!
என்செவிகளைசுகம்
பெறச்செய்துசக்தியை
மீளச் செய்வாயாக!

هذا سماع حديث مولد ه انتهى
والحمد لله المعين المسعد
25)பேருபகாரியும்
பெரும்
உதவியாளனுமாகிய
அல்லாஹ்வுக்கே
எல்லாப்புகழும்
பெருமானாரின் பிறந்த
செய்தியைகேட்க்கச்
செய்த இந்தமௌலிது
நிறைவுற்றது!

بركاته نرجوا بها في هذه 
الدنيا المصالح والشفاعة في غد
26)அந்தமௌலிதின்
பரக்கத்தால்இந்த உலகில்
ஸாலிஹான நல்ல அமலையும்
மறுமையில்நபிஸல்
அவர்களின் பரிந்துரையையும்
நாம்ஆதரவுதேடுகிறோம்

ياربنا اصلح سراءرنا وسي
رتنا باسرارالني محمد
27)எங்கள்இறைவா
பூமான்நபியின்
ரகசியங்களின்
பொருட்டால்!
எங்கள்இதயங்களையும்
எங்கள் வாழ்வையும்
நேர்படச்செய்வாயாக!

يارب واحمنا ووفقنا وجد 
والطف والهمنا الرشاد وسدد
28)இறைவா எங்களுக்கு
கருணை புரிவாயாக!நல்லுதவிசெய்வாயாக!
நேர்வழியைஉதிக்கச்
செய்து
அவ்வழி நடந்திட அருள்
புரிவாயாக!

واصفح ومن بجمع شمل واغفرن
لمحمدبن محمد بن محمد
29)இறைவா எங்களை
மன்னிப்பாயாக!
சிதறியவைகளை
சேகரம்
ஆக்கிவைப்பதால்
உபகாரம்செய்வாய்
இறைவா!
முஹம்மதின்மகன்
முஹம்மதுஅவரின்மகன்
முஹம்மதுக்குபிழை
பொறுப்பாயாக!

துஆவைநாடி

தமிழாக்கம்

அப்துல் ரஹ்மான் இம்தாதி கோவை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?