குல்லுஸ்ஸுரூரிபைத்து. பொருள்
குல்லுஸ்ஸுரூரி
பைத்து. பொருள்
كل السرور بدا بشهر المولد
شهر بدا فيه جمال محمد
1)எல்லா சந்தோஷங்களும்
பெருமான்(ஸல்)
பிறந்தமாதத்தின்
பொருட்டால் ஏற்ப்பட்டது!
பெருமானாரின் பேரழகு
வெளியானதுஇம்மாதமே
في ليلة منه اضاء على الورى
نور المؤيد با الفخا رالاو حد
2)படைப்பினங்கள் மீது
ஓரிறவுபெருமானாரின்
தனிப்பெருஞ்சோதியின்
சுடர் வெளியானது!
وضعته امنة ولم يشعربها
احد ليخفى عن عيون الحسد
3)பொறாமைக்
கார்களான
(யூதக்கண்களைவிட்டும்)
மறைத்திடவேஅவரில்
எவரும்அறியாதிருக்க
அண்ணலைஈன்றெடுத்தார்அன்னைஆமினா!
واتت ملاءكة السماء تزوره
وتنال من رؤياه اشرف مقصدي
4)நபி ஸல் பிறந்தபின்
வானவரெல்லாம்வந்து
தரிசித்தனர்அதனால்
அவர்கள் சிறப்பான
சிறப்புகளை பெற்றனர்!
جاؤا بابريق وطشت رصعت
جنباته من لؤ لؤووزبرجدي
5) முத்துக்களால் பச்சை
மரகதத்தால்ஆன
தண்ணீர்பாத்திரமும்
அவ்வானவர்
கொண்டுவந்தனர்!
غسلوا جلاه وختموه بخاتم
انت برؤيته نبوةاحمد
6)பெருமானாரின்
இதயத்தைக்கழுவி
நுபுவ்வத் என்ற நபித்துவ
முத்திரை பதித்தார்கள் வானவர்கள்.
அதனால் அஹ்மது
நபியின் நபித்துவ பதவி
பூரணமானது!
من ماء زم زم كان غسل صدوره
ولزمزم الشرف الجسيم بمسند
7) பெரும் சிறப்பு வாய்ந்த
ஜம் ஜம் நீரால்
நபி பெருமான்(ஸல்)அவர்களின் இதயம்
கழுவப்பட்டது!
ناداهم الرحمان ان طوفوا به
با العرش مع دار النعيم الارغد
8)வல்லோன் இறைவன்
வானவரைஅழைத்தான்!
பிறந்த அப்பிள்ளையை
எடுத்துச்சென்று
அர்ஷு குர்ஸீ சொர்க்கம்
ஆகிய இடங்களையெல்லாம்
சுற்றிவாருங்கள்!
என்றான்!
ثم اعرضوه على الخلاءق كلها
من كل روحان وكل مجسد
9)மேலும் உயிரினம்
உடலினம்ஆகிய
படைப்பினங்கள்
எல்லாவற்றையும்
அவருக்கு காட்டுங்கள்!
என்றான் இறைவன்!
فهو الذي من كان في الدنيا له
طوعا يهناء بالسلامة في غد
10) உலகில்அண்ணல்நபி (ஸல்)அவர்களுக்கு
வழிப்பட்ட எவருக்கும்
மறுமையில்வெற்றிச்
செய்திஉண்டு !
صلى الإله ومن يحف بعرشه
والطيبون على النبي محمد
11) அல்லாஹ்வும்அவனது
அர்ஷை சுமக்கும்
வானவர்களும்
மேலும்நல்லோர்களும்
நபியின் மீது ஸலவாத்து
சொல்வார்களாக!
துஆ நாடி
தமிழாக்கம்
அப்துல் ரஹ்மான் இம்தாதி கோவை
கருத்துகள்
கருத்துரையிடுக