இன்னபைத்தன்அன்த்த ஸாகினுஹூ
இன்னபைத்தன்
அன்த்த ஸாகினுஹூ
பைத்து. பொருள்
ان بيتا انت ساكنه
ليس محتا جا الى السرج
1)உறுதியாக நாயகமே!
தாங்கள் குடியிருக்கும்
வீட்டிற்கு விளக்குதேவையில்லை!
وجهك الوضاح حجتنا
يوم يأتي الناس با لحجج
2)மனிதர் ஆதாரங்களைக்
கொண்டுவரும்
அந்நாளில்! ஒளிபொருந்திய
தங்கள் முகமே
எங்கள் ஆதாரம்!
ومريضا انت عاءده
قد اتاه الله بالفرج
3) தாங்கள் நோய்விசாரித்தவருக்கு
இறைவன்மகிழச்சியை
தருகிறான்!
فازمن قد كنت بغيته
وسما في ارفع الدرج
4)தங்களைத் தேடியவர்
ஜெயம்பெற்றார்!
மேம்பதவியும்
அடைந்தார்!
وندى في الحب مهجته
سامحا في الروح والمهج
5)தங்களைநேசிப்பதில்
உயிரையும் உடலையும்
பொருட்படுத்தாதவர்
வெற்றிபெற்றார்!
يا كريما جدراحته
فكفيت البحر واللجج
6)சங்கையானவாழ்வைப்
பெற்ற கண்ணியமானவரே!
ஆழியகடலைவிட
பெரும்பேறுபெற்றீர்
நாயகமே!
انت منجينا من الحرق
من لهيب النار وا لاجج
7)கூச்சல் நிறைந்த
நரகநெருப்பைவிட்டும்
எங்களை வெற்றிபெறச்
செய்வீர் நாயகமே!
ذنبنا ماحي ليمنعا
من ذروف الدمع والعجج
8) கண்ணீர் சிந்தவிடாமல்
எங்களைத்தடுக்கும்
எங்கள்பாவங்களை
அழிப்பீர் மாஹீ யான
எங்கள் நபியே!
حبكم في قلبنا محو
من رءين الذنب والحرج
9)எங்கள்பொல்லாத
பாவத்தின் கறைகளால்
தங்களின் மீதுள்ள
நேசத்தைஇதயத்தைவிட்டும்அழிக்கப்பார்க்கிறது!
صبكم و الله لم يخب
لكمال الحسن والبهج
10)இறைவன்மீதானையாக நாயகமே!
தங்களின்பூரணப்
பேரழகைநேசித்தவன்
பேர்கெட்டுப்
போகமாட்டான்!
اننا نرجوا بشافعنا
لصلاح الدين والنهج
11)சீரான சன்மார்க்க
நலம்யாவும்பெற்றிடவே!
மறுநாளில்
பரிந்துரைக்கும்
மாநபியைப்
பற்றிடுவோம்!
وهو نجانا من البلوى
طيبه في العالم الارج
12) உலகெலாம் நறுமணம் கமழும்
பெருமான் அவர்கள்
அநேக இடர்களை
விட்டும் நம்மைக்
காப்பவர்கள்!
رب وارزقنا زيارته
قبل قبض الروح والخرج
13) ரட்சகா!எங்கள் உயிர்
பிரியும் முன்
நபிகளாரின்
மண்ணறையை
தரிசனம் செய்திட
அருள்வாய்அருளாளா!
صل يارب على الهادي
لسبيل الحق والفرج
14)இறைவா!உண்மையான வழியை
உணரச்செய்து
உள்ளத்தில்மகிழ்வை
தந்த மாண்புநபியின்
மீதுஅருள்புரிவாய்
அன்பாளா!
துஆவைநாடி
தமிழாக்கம்
அப்துல் ரஹ்மான் இம்தாதி கோவை
கருத்துகள்
கருத்துரையிடுக