அல்லாஹுகாலிகுனாபைத்து பொருள்

அல்லாஹுகாலிகுனா
பைத்து பொருள்

الله خا لقنا. الله رازقنا 
الله هادينا. سبحان مولانا
تمجيد ن القهار
1)அல்லாஹ் தான்
நம்மைப் படைத்தான்
அல்லாஹ் தான்
உணவளிப்பான்
அல்லாஹ்தான்
நேர்வழி காட்டுவான்
நமது எஜமானன்
தூய்மையானவன்
அடக்கியாளும் அல்லாஹ்
மேன்மையானவன்!

صلوا على المختار يامعشرالحضار
ذي الحسن والانوار. واستغفروا الغفار
تنجوا مع الابرار
2)வருகைதந்திருப்போரே
அழகும்ஒளிவும்தேர்வும்
செய்யப்பட்ட அருள்நபிமீதுஸலவாத்
உரைப்பீராக!
பிழைபொருக்கும்
இறையிடத்தில்
பிழைபொறுக்கத்தேடி
நல்லோர்களுடன்
சேர்ந்து வெற்றி
பெறுவீராக!

يامولد الهادى. اذهبت انكادى
بشرى باسعادي للجارى والبادى
والوفد والز وار
3)நேரியவழிகாட்டும்
சீரிய நபி பிறப்பே!
என்துயரையெல்லாம்
துடைத்தெறிந்தாய்
அண்டை அயலார்
தரிசனம்பெறவருவோர்
அனைவரையும்நன்மை
பெறச்செய்து
நற்சேதியானாய்!

نور المفدى لاح. وافت به الافراح
طابت به الارواح بالسعد والافلاح
من رحمة الستار 
4)பேறிறைவன்பெருங்
கருணையால்
அர்ப்பனம்செய்யப்பட்ட
அன்புநபிஒளிவெளிப்பாட்டால்
சந்தோஷங்கள்
நிறைவானது
ஆன்மாக்கள்மணம் பெற்றன!வெற்றியும்நற்பேறும்
விளைந்தன!

هذا حبيب الله هذا رسول الله
هذا عظيم الجاه من خصه مولاه
برفعة المقدار 
அன்பு நபி இறைவன்
நேசர்
இறைவனின் ரசூல்
தலைமைத்தனமானவர்
உயர் பதவிக்கு இறைவன் தெரிவு செய்தான்

يا هادي الاكياس يامالي الاكياس
قدجءت بالافلاس إلى شفيع الناس
من فوح حرالنار
5)பேறரிவாளர்க்குநேர்வழி
காட்டும்நபியே
பெருநிதியே
வெந்நரகின்வெம்மையைவிட்டும்
பரிந்துரைத்து
பாதுகாக்கும்நபியிடம்
நன்மையற்ற வனாய்
வந்துநின்றேன்!
ضاقت بي الاسبا ب. فجءت هذا الباب
أقبل الاعتاب. ابغي رضاالاحباب
والسادة الاخيار.
6)கடுகியதுஎன்
காரணங்கள்
தங்கள் வாசலுக்கே
வந்துவிட்டேன்நாயகமே!நபிநேசப்பெருமக்கள்
உங்கள்வழிதோன்றிய
நல்லோர்கள்
பொருத்தம் நாடி
முத்தமிட்டேன்
தங்கள்வாசலை!

ضاءت لنا الافاق من طيب الاخلاق
با لنور والاشراق. قد خصك الخلاق
يا عالي المقدار
7)அருள் நபியின் உயர்
குணத்தால்
விண்ணகத்தின்ஒளி
உதிப்பால்
விதான கோணங்கள்
எல்லாம் நமக்குவெளியானது!
உயர்பதவிபெற்ற
நாயகமே!
படைப்பாளன் தங்களை
சொந்தமாக்கினான்!

في طيبة الاوقات طابت مع السا دات
احسانهم عادات من عفوهم ما فات
تمحى من الاوزار

8)மாமதினா நேரமெல்லாம்
அங்குள்ளதலைவர்
களுடன்மணம்பெற்றது
அத்தலைவர்களின்
வழக்கமெல்லாம்
உபகாரம் செய்வதுதான்
அவர்களின்மன்னிப்பைவிட்டும்எவரும்தப்பியதில்லை!
குற்றச்சுமைகள்
அங்கேஅழிக்கப்படும்!

தங்கள் துஆ நாடி

தமிழாக்கம்

அப்துல்ரஹ்மான்
இம்தாதி கோவை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?