யாமுஸ்தஃபா பைத்து
யாமுஸ்தஃபா பைத்து
பொருள்
يا مصطفى يامرتضي ياسندي
يا سيدي يا شفعي خذبيدي
1)தேர்வுசெய்யப்பட்டவரே
இறைப்பொருத்தம்
பெற்றவரே!
எந்தன்ஆதாரமானவரே!
எந்தன்தலைவரே!
எந்தன்பரிந்துரையாளரே
என்கரம்பிடித்துகரைசேர்ப்பீரே!
ازكى صلاة وسلام سرمدي
عليك من رب العباد الصمد
2)உலகைகாக்கும்
ஏக வல்லோன் அல்லாஹ்வின்
ஸலாத்து ஸலாம்
காலமெல்லாம்
உண்டாக!
بسطت كف فاقتي والندم
ارجوا جزيل فضلكم والكرم
3) ஏழ்மைவறுமைகவலை
நீங்கபெருமானே!
என்கைகளைதங்கள்
உதவிநாடிஏந்திவிட்டேன்
مستشفعا نزيل هذا الحرم
فلاحظوني بدوام المدد
4)மலர்மதீனாவாசல்
தன்னில் அடியேனும்
நல்லாதரவைநாடி
நின்றேன்நாயகமே!
قدفقتم الخلق بحسن الخلق
فا نجدوا المسكين قبل الغرق
5)பார் போற்றும்
குணத்தால்
பாரில்சிறந்தீர்நாயகமே!
பாவக்கடலில்மூழ்கு
முன்என்னைகாப்பீரே!
واطفءؤ بالبسط وهج الحرق
وابردو باللطف حرالكبد
6)நரகநெருப்பைஉம்
கருணை கொண்டு
அனணப்பீரே!
உள்ளன்பு கொண்டெமை
சுவனபதியில்சேர்ப்பீரே!
من فتموه لايزال نادما
يا سعد من رضيتموه خادما
7)நீங்காத துயரில்
நபியைமறுத்தவர்
ஆனாரே!
நபீபொருந்திக்
கொண்டவர்
நல்லபேறுகள்
பெற்றவரே!
فحلمكم والستر عم العالما
نعماءكم منها نعيم الابد
8)நபிபொறுமையும்
தயவும்உலகைசூழ்ந்ததே
நிலையான சொர்க்கம்
அவரின்தயவால்ஆனதே!
احبكم لكن قليل الادب
ومن هوى نفسي توالت حجبي
9)தங்களை நான் நேசிக்கின்றேன்
ஆனாலும்!
தொடர்தீயமனத்
தடையால்ஒழுக்கம்
பாழாமே!
فروحواروحي بكشف الكرب
عنا ية من فضلكم معتمدي
10) துன்பம் அகற்றி
எந்தன்உயிரைகாப்பீரே!
உங்கள்அருளைநம்பி
வேண்டிநின்றேனே!
اقسمت في نصري بكم عليكم
وسيلتي احسانكم اليكم
11)உதவிசெய்வீர்
தங்கள் மீதே சத்தியம்!
உபகாரம் செய்வீர்
தேடினேன் வஸீலா!
مالي ما احظى به لديكم
سوى صريح الفقر والتودد
12)நெஞ்சம் தன்னில்
தூய அன்பும்கொண்டேனே!
அண்ணல்நபியால்
தேவையாவும்
தீர்ந்திடுமே!
في طيبةالفوز بمهد الرشد
وفي ضواحيها زوال النكد
13)மதீனமண்ணில்
நேர்வழிதொட்டிலில்
வெற்றியாம்
அதன் சூழ்பாகந்தன்னில்
துக்கம் நீங்கிபோனதாம்
ان كنتم ترجون فضل الاحد
فشاهدوا انواره في احد
14)ஒருவனான ஏக
நாயன் அல்லாஹ்வின்
ஒளிச்சுடர்கள்உஹது
மலையில் உண்டு
காண்பீரே!
ان تبتغوا وسيلة للمالك
صلوا على رسوله المبارك
15)இறைவன்பால்நீங்கள்
வஸீலாதேடினால்
பரகத்தானரசூலின்
மேல்ஸலவாத்கூறுங்கள்
الشافع المنقذ من مهالك
واله وصحبه ومن هدي
16)அழிவை விட்டும்
காப்பவரும்மறுமை
நாளின்பரிந்துரை
யாளருமான
ரசூலின்மீதும்
அவர்தம் குடும்பத்தார்
தேழர்மார்நேர்வழி
பெற்றோர்மீதும்
ஸலவாத்உரைப்பீராக!
தமிழாக்கம்
துஆவைநாடி
அப்துல் ரஹ்மான் இம்தாதி கோவை
கருத்துகள்
கருத்துரையிடுக