ஸல்லூ அலா கைரில்
இபாத்.பைத்து பொருள்

صلوا على خيرالعباد
المصطفى كنز الرشاد
شفيعنا يوم المعاد
لتبلغوا نيل المراد
1)நாட்டம்என்றும்
நிறைவேற
மறுமைநாளில்
ஈடேற
அறவழிப் பொக்கிஷமானநபி
முஸ்தஃபா மீதுசொல்வீரே
ஸலவாத்என்றும்
சொல்வீரே!

من رحمة الله الودود
ابدى لنا نور الوجود
و عمنا بشر السعود
والفوز في طيب المهاد
2)அன்புஎன்னும்கருனையினால்
அருட்சுடரானமாநபியை
ஏகன் அல்லாஹ்
வெளியாக்க!
  வெற்றியும்
நம்மை சூழ்ந்ததுவே!தைபாஎன்னும்மாமதினா
மண்ணில்வதியும்
மாநபியே!


جمال نور المصطفي 
وفى ووفي بالوفى
وعيشنا منه صفا 
باللطف من حسن الوداد
3)பூமான்நபியின்
பொலிவின்அழகு
பூரணமானது!
பூரணமானது!
அன்புநபியின்
வாஞ்சையின்
பொருட்டால் நம்மின்
வாழ்வு தெளிவானது!
அழகானது!
 
من طيبة الطيب انتشر
من طيب ساد البشر
من نوره ضاء القمر
ازكى البرايا خيرهاد
4)மாமணநபியின்
பூமணத்தால்
மாமதினாமணம்
பரப்பியதே
பெருமான் நபியின்
பேரொளியால்
வெண்ணிலவில்
ஒளிதுலங்கியதே
பூதலமீதினில்
நேர்வழி யால்
தூய்மைபெற்றுச்
சிறந்தவரே!

ياصاحب الحسن البديع
يا خير هاد يا شفيع
عسى نوارى في البقيع
تغيثنا يوم التناد
5)தன்னிகரில்லா
அழகின் ஒளியே
மறுமை நாளில்
பரிந்துரைப்பீரே!
தோட்டந்தனிலே
புதையுண்டாலும்
தீர்ப்பு நாளில்
உதவிடுவீரே!

جماله لما بدى
اهدى الى الخلق الهدى
وذكره يجلوا الصدى
نداه يروي كل صاد
6)நபியே தங்களை
நினைத்தால்போதும்
துருகொண்ட உள்ளம்
கறைநீங்குமே!
உங்கள்தயவின் பெருங்கொடையால்
எங்கள்தாகம்தீர்ந்திடுமே!
நபியே தங்கள் அழகின்
வரவால்
உலகோர் நேர்வழி
பெற்றனரே!



بجاه طه مانخيب
لانه الها دى الحبيب
نرجوا رضى الله القريب
وما مضى ان لا يعاد
7)நேசம்நிறைந்த
நேர்வழித்தென்றல்
தாஹா நபியின்
தலைமைஏற்றோர்
என்றும்தறுதலை
ஆகமாட்டார்!
கடந்தபாவம்
மீளாதிருக்க
இறைவா உந்தன்
பொருத்தம் தனை
நாடுகின்றோம்
ஏற்ப்பாயாக!
يا من تمادى واجترم
تب واعترف وارجوا الكرم
ولذبمن حل الحرم
ونوره عم البلاد
8)பாவக்கடலில்
நிலைப்பவனே
தவ்பாச்செய்திடவாவா
இறையின்அருளை
ஏற்றுநீயும்
பற்றிப்பிடிக்கவாவா
மக்காநகரில்
வெளியான
மாபெருஞ்சோதி
உலகெலாம்
ஒளியுடன்ஜொலித்திட
நீயும்அதில்
இணைந்தேவென்றிட
இன்றே வா!

துஆ நாடி

தமிழாக்கம்

அப்துல் ரஹ்மான் இம்தாதி கோவை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?