ஸலாத்துன் ஸலாமுன் ஹுமாஸர்மதா பைத்து.
பொருள்.

صلاة سلام هما سرمدا
على المصطفي ما يلوح النهار
1)முஸ்தஃபாநபிமீது
காலமெல்லாம்
 இறைவனின்
பேரருள் பெருங்கருணை
உண்டாவதாக

الكون قدضاء لنا واستنار
بمولد الهادي وطاب القرار
2)உத்தமத்திருநபி
உலகில் உதித்த போது
உலகமே மணம் பெற்றது!
பேரழகால் ஒளி பெற்றது!
அதுவே நித்தியமானது!

لما بدى لاح منار الهدى
لله ما ابهج ذلك المنار
3)பெருமானார் பூஉலகில் வெளியான போது
நேர்வழி எனும்
குவிமாடம் ஜொலித்தது
அதன்அழகை விண்டிட
எவரால் முடியும்?

يا نععة قد عمنا بشرها
في ليلة ضاءت كضوءالنهار

4)அண்ணலின் வருகையால்
அகிலத்தின்இரவு பகலானது!
அண்டமெல்லாம்
பேருபகாரம் என்ற
சுபச் செய்தியால்
மலர்ந்தது!

جماله لما بدى طالعا
اشرقت الانوار بين الديار

5)பெருமானின் பேரழகு
வெளியான நேரம்!
பாருலகின் வீடெல்லாம்
பெருஞ்சோதி வீசியதே!

نادى مناد السعد لما اتي
يا طالب الفوزالبدار البدار

6)பூமான்நபி பூமியில்
வெளியான போது
விரைந்துவா விரைந்துவா
வெற்றியின் பால்
விரைந்துவா வென
விண்ணவர் குரல்
உலகெலாம் ஒலித்தது!

مذ جاء صار الحق في عزة
وزخرف الباطل ولى وسار
7)அருமைநபி
வருகையின்பின்
உண்மைஉயர்வடைந்தது
பொய்மைபுறமுதுகிட்டது!

من هيبت المولد كسرى غدى 
كسير قلب في ذهول وحار

8)இறுதிநபிஉதித்தபோது
பாரசீகமாமன்னன்
உள்ளம் உடைந்து
மனம் தளர்ந்து
பீதியானான்!

وانشق للمولد ايوانه
وعقله من دهشة الامرطار 

9)மேலும் அவனது
கோட்டை
அதிர்ந்துபிளர்ந்தது!
அதன் திடுக்கத்தால்
மதிமாற்றமடைந்தான்!

ونوره اخمد ناراطغت
للفرس صاروا مالهم ضوءنار
10)பெருமானின்
பேரொளியால்
பாரசீகபெருநெருப்பு
அணைந்தது!
மக்கள் ஒளிஇழந்தனர்!

وخرت الاصنام من اجله 
كبارها ذلوا بقهر الصغار

11)அதுமட்டுமா?
பெரிய சிலைகள்
சின்னசிலைகளின்மேல்
வீழ்ந்து ஒன்றாய் சேர்ந்து நொறுங்கின!

وكم له من معجزات نمت
واستهرت في الكون اي اشتهار

12)அழகுநபி
தோற்றத்தால்
தோன்றிய 
அற்புதங்கள்
எத்தனை எத்தனை!
உலகோர் போற்றும்
உன்னதநபிஅற்புதங்கள்
அல்லவாஅவை!

صلى عليه الله رب العلى
ماجن ليل واضاء النهار
அண்ணலின் மீது
அல்லாஹ் வின்
பேரருள்
இரவு பகல் இருக்கும்
காலமெல்லாம்
உண்டாக!

தங்களின் துஆ நாடி

தமிழாக்கம்

அப்துல்ரஹ்மான்
இம்தாதிகோவை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?