ஸுப்ஹானமவ்லிது

ஸுபுஹானமௌலிது
ஸலாம்பைத்து பொருள்.
السلام عليك زين الأنبياء
السلام عليك اتقي الاتقياء
1)நபிமார்களின்
அலங்காரமேஉங்கள்மீது
ஸலாம்உண்டாவதாக!
பக்திமான் களில்
மிகபக்திமிக்கநபியே
ஸலாம் உண்டாவதாக!
السلام عليك اصفي الاصفياء
السلام عليك ازكى الازكياء
2)தெளிவானவர்களில்
மிகதெளிவானநபியே
ஸலாம் உண்டாவதாக!
பரிசுத்தவான்களில்மிக
தூய்மையானவரே
ஸலாம் உண்டாவதாக!
السلام عليك من رب السماء
السلام عليك دا با بلا انقضاء
3)விண்ணகத்தின்
ரப்பிடமிருந்து
காலவரையற்ற நிரந்தர
ஸலாம் உண்டாவதாக!
السلام عليك ياحسنا تفرد
السلام عليك ياكهفا ومقصد
4) அழகின் பொலிவில்
தனித்தன்மைபெற்றவரே
அபயமளிக்கும்
மணிமண்டபமே ஸலாம்உண்டாவதாக!
السلام عليك احمد يامحمد
السلام عليك طه يا ممجد
5)அஹ்மதுமுஹம்மது
எனும் உயர்நாமம்பெற்றவரே
மேன்மைநிறைதாஹா
நபியே ஸலாம் உண்டாவதாக!
السلام عليك احمد ياحبيبي
السلام عليك طه يا طبيبي
6) அஹ்மது எனும்திருப்
பெயர்பெற்ற எனதுயிர்
நேசரேஎன்
உடலும்உள்ளமும்
சுகம்பெறும்
தாஹாநபியே
ஸலாம் உண்டாவதாக!
السلام عليك يا مسكا بطيبي
السلام عليك يا عون الغريبي
7) கஸ்தூரி வாசம்வீசுமே
ஏழைகளின் புகலிடமே
ஸலாம் உண்டாவதாக!
السلام عليك يا ما حي الذنوبي
السلام عليك ياجالي الكروب

8)பாவங்களைஅழித்து எங்கள்துன்பங்களை
நீக்கும் யாநபியே
ஸலாம் உண்டாவதாக!
السلام عليك يا هاد الهداة
السلام عليك يا ذخر العصاة

9)நெறியாளர்க் கெல்லாம் நெறியாளரே
பாவிகளின்புகலிடமே
ஸலாம் உண்டாவதாக!
السلام عليك يا حسن الصفات
السلام عليك ياذا المعجزات

இந்தக்கண்ணி
யிலிருந்து
அருளாளன் அன்புடையோன் மெட்டை பயன்படுத்தலாம்


10)நற்பண்பின்பேரழகே!
அற்புதத்தின்பெருந்
தொகுப்பே!
ஆண்டவனின்
அன்புஸலாம்அழகுடனே உண்டாக!
السلام عليك يا داعى الفلاح
السلام عليك ياركن الصلاح

11)வெற்றியின் பால்
அழைப்பவரே
நன்மைத்தூனாய்
நிற்ப்பவரே
இறையோனின்
இனியஸலாம்
மாண்புடனே உண்டாக.!
السلام عليك يا نورالصباح
السلام عليك يا زين الملاح
12)அதிகாலைப்
பேரொளியே
மகிழவைக்கும்
பேரழகே
இறையோனின்
அன்பு ஸலாம்
நிறைவுடனே
உண்டாக!
السلام عليك ياخيرالانام
السلام عليك يا بدر التمام
13)மானுடத்தின்
தனிச்சிறப்பே
வானுலகின்
பூரணமே
வல்லோனின்
வரிசைஸலாம்
காலமெல்லாம்
 உண்டாக!
السلام عليك يا نور الظلام
السلام عليك يا مبرى السقام

14)இருள் போக்கும்
அருட்சுடரே
இதயம் தனில்
ஒளிச்சுடரே
மறையோனின்
மாண்புஸலாம்
மகிழ்வுடனே
உண்டாக!
السلام علي المظلل بالغمامة
السلام على المشفع في القيامة
15)வான்மேகம்
நிழல்தருமாம்
மாநபியார்
நடந்துவர
தீர்ப்பு நாளில்
பரிந்துரைக்கும்
பண்புநபி
தங்களின் மேல்

السلام على المتوج بالكرامة
السلام على المبشر با السلامة
16)கண்ணியத்தின்
அணிகலனே
நற்செயலின்
பொற்பதமே
இறையோனின்
இனியஸலாம்
கனிவுடனேஉண்டாக!
السلام على الخليفة منك فينا
ابي بكر مبيد الجاحدينا
17)பகமைதனை
வென்றெடுக்க
தகமையுடன்
வீறுகொண்ட
அருமை அபூபக்கர் மீதும்
இறைவன் ஸலாம்
உண்டாக!
كذا عمر امير المؤمنينا 
و ذي النورين رأس الناسكينا

18) உலகில் நீதி
நிலைத்திடவே
தினம்உழைத்த
உமர்மீதும்
ஈரொளியின்
தீனொளியாம்
உஸ்மான் கனி
அவர்மீதும்!
كذلك علي ن السامي يقينا
السلام على صحابك اجمعينا

19)அறிவின் பெரு
நகரமெனும்
வீரர் அலீ
அவர் மீதும்.
அருமை த்தோழர்
அனைவர்மீதும்
இறைவன் ஸலாம்
உண்டாக!
والك كلهم والتابعينا
وتابعهم وتابع تابعينا
20)பாருலகின்
புகழ்பெற்றோர்
மாநபியின்
குடும்பத்தார்
தாபிஉஎனும்
தவம் செய்தோர்
அனைவர் மீதும்
இறைவன்ஸலாம்
எந்நாளும் உண்டாக!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?