ஸல்லூபினா
பிஹ்த்திமாமி பைத்து
பொருள்
صلوا بنابا هتمام
على شفيع الانام
حبيب محيى العظام
عليه ازكى سلام
1)பரிந்துரைசெய்யும்
நபி மீது
எலும்புக்கு யிர்தரும்
நபி மீது
தூயஸலவாத்
ஓதிடுவோம்
உயர்வாய்ஸலாமும்
உரைத்திடுவோம்!
الله صلى عليه
ثم اصطفاه لديه
وحين اوحى اليه
على لاعلى مقام
2)இறைவன் ஸலவாத்
எடுத்தோத
தேர்ந்தான்இறைவன்
தன்னிடமே!
தூதுச்செய்தி
தரும்நேரம்
உயர்வேபெற்றார்
புவிமேலே!
طيبوا بطيبة طيبوا
فقد تجلى الحبيب
وفاح نشر وطيبوا
يفوح مسك الختام
3)தைபாமணமதை
பெற்றிடவே
மாநபிதரணியில்
தோன்றினரே!
கஸ்தூரிவாசம்வீசிடவே!
நறுமணம்உலகில்
பரவியதே!
يا من يروم النعيما
بحبه كن مقيما
ولوتكون سقيما
لديه برء السقام
4)நன்மையை நாடும்
நல்லவரே!
நபிநேசம்தனிலே
நிலைப்பீரே!
மனமோபிணியுடன்
இருந்தாலும்
நபியிடம் பிணிகள்
நீங்கிடுமே!
قد طاب هذا الربيع
مذ جاء فيه الشفيع
له جمال بديع
يفوق بدرالتمام
5)வசந்தம் பெற்றது
இம்மாதம்
பரிந்துரைபுரிந்திட அந்நாளில்
நூதன அழகாம்
தூதர் நபி
நிலவின் அழகை
விஞ்சிடுமாம்!
طابت بقاع البقيع
من قربها للشفيع
سكان ها في ربيع
من آنس تاج الكرام
6)மதினாமண்ணறை
தோட்டங்களும்
மணந்தது நபியின்
இணக்கத்தால்!
சங்கை நபியின்
பெரும் பொருட்டால்
அங்கே வாழும்
மாந்தரெல்லாம்
அழகிய வாழ்க்கை
பெற்றனரே!
هذا البشير النذير
هذا السراج المنير
أنا به نستجير
في دفع كل انتقام
7) துன்பங்கள் அனைத்தும் தூராக
தூய்மைநபியை
காவல்கொண்டோம்!
உலகின்ஒளிவாம்
ஒளிவிளக்காம்!
சுவனச்செய்தி
சொன்னவராம்!
நரகின்வெம்மை
காப்பவராம்!
هذا الذي قد ترقى
الى السماوات حقا
وخاطب الله صدقا
بوحي خير الكلام
8) வானங்கள்
ஏழையும்கடந்தநபி
வல்லோன்
இறைவனை
இணைந்தநபி
வசமாய் வார்த்தைகள்
பேசிவந்து!
நலமாய் உண்மை
உரைத்தநபி!
هذا النبي الكريم
له مقام عظيم
بكم رؤ وف رحيم
انتم به في اغتنام
9)கண்ணியம் நிறைந்த
கருணை நபி!
மாண்பார்புகழை
பெற்றநபி!
அன்பும்கருணையும்
கொண்டநபி!
அவர் பொருட்டால்
செல்வம்பெருவீரே!
به يطيب الزمان
وفي حماه الامان
وجاره لا يهان
في عزة واحترام
10) அவர்பொருட்டால்
காலம் மணமணக்க!
அவர் பொருட்டால்
அச்சம் தீர்ந்திடவே!
அண்டைஅயலார்
மேன்மைபெற!
அருமை நபியே
உலகின் பொருட்டு!
حوى جميل الصفات
وغا ية المكرمات
له جزيل الهبات
منها نعيم الدوام
11) குணமே நிறைந்த
அழகு நபி
உயர்வாம்சங்கை
நிறைந்தநபி
இரக்கம் நிறைந்த
அன்பு நபி
நிலலையாம்சொர்க்கம்
சேர்க்கும் நபி
به تباهى الجمال
ومنه تم الكمال
وبان فينا الحلال
به وحكم الحرام.
12) நபியால் அழகு
பெருமைகொள்ள!
நபியால் முழுமை
பூரணமாக!
அவரால் ஹலாலும்
நிலையானது!
அவரால்ஹராமும்
விதியானது!
يا خاتم الأنبياء
يا سيد الاصفياء
ياهادي الاولياء
يازين كل امام
13)நபிமார்களில்அவரே
நிறைவானவரே!
ஸூஃபிய்யாக்களின்
தலைமைத்துவமே!
வலிமார்க்கெல்லாம்
வழியானவரே
தலைமை க்கெல்லாம்
அழகானவரே!
آني عبيد ذليل
من عثرتي استقيل
وما يخيب النزيل
في حي راع الذمام
14)அடியேன் பணிவாய் வேண்டுகிறேன்
பாவங்கள் நீங்கிட
தேடுகின்றேன்
வாக்கை காக்கும்
மனிதனவன்
வாழ்வில் வீணாய்ப்
போவதில்லை!
يا رب أحسن خلاصي
وا غفر بغير قصاص
لما يشيب النواصي
من هول يوم الزحام
15)இறைவா எனது
விடுதலையை
அழகாய் தருவாய்
அருளாளா
ரோமம் நரைக்கும்
அந்நாளில்
குற்றம் குறைகள்
இல்லாமல்
பிழைகள்பொறுப்பாய்
பெருமானே!
بحق نور محمد
وبالكتا ب الممجد
اجعل لنا النار تخمد
يوم الكروب العظام
16) முஹம்மதுபேரொளி மீதாணை!
மேன்மை வேதத்தின்
மீதாணை!
துன்பங்கள் சூழும்
அந்நாளில்!
நரகத்தீயைஎங்கள்மேல்
நூற்பாய்இறைவா!
எம்மிறைவா!
بمن اتي بالكتاب
ومن هدى للصواب
جدلي بشرب شراب
يحي به كل ظامى
17)வேதத்திருநபி
யின்பொருட்டால்
நேர்வழி காட்டிய
நபி பொருட்டால்
தாகம் தீர்ந்து
உயிர் பெறவே
தயவாய் கவ்ஸர்
நீர் தருவாய்
صلى الإله السلام
على الذي ذا أمام
رسل عليهم سلام
والال اهل اهتمام
18) இறைவன்அருளும்
ஸலவாத்தும்
நபிமார்தலைவர்
நபி மீது
அவர்தம் குடும்பத்
தினர்மீதும்
நிறைவாய் என்றும்
உண்டாக!
துஆவைநாடி
அப்துல் ரஹ்மான்
இம்தாதி கோவை.
கருத்துகள்
கருத்துரையிடுக