இன்சூரன்ஸ் பற்றி இஸ்லாம் கூறுவதென்ன

கேள்வி :


*இன்சூரன்ஸ் பற்றி இஸ்லாம் கூறுவதென்ன?*

*எவ்வகையான இன்சூரன்ஸிற்கு அனுமதி உண்டு?*

*இன்சூரன்ஸ் கம்பெனிகளில் வேலை பார்ப்பதின் சட்டம் என்ன?*



*الجواب بعون الله الملك الوهاب 👇*


انشورنس /بیمہ کے جتنے مروجہ طریقے ہیں  وہ  سود  اور  قمار  (جوا)  کا  مرکب  ہیں  

اور  سود  اور  قمار کا لین دین  شریعتِ  مطہرہ  میں  بنصِ  قرآنی حرام ہے، 


لہٰذا کسی بھی شخص کے لیے کسی بھی انشورنس کمپنی کے ساتھ کسی بھی قسم  کی (چاہے جانی ہو یا مالی ) انشورنس/ بیمہ  کا کوئی معاہدہ کرنا جائز نہیں ہے


பொதுவாக இஸ்லாத்தின் பார்வையில் லைஃப் இன்சூரன்ஸ் (உயிர் காப்பீடு, வாகன காப்பீடு, சொத்து காப்பீடு, பொருள் காப்பீடு, மருத்துவ காப்பீடு) இவையல்லாம் கூடுமா? 

ஆயுள் காப்பீடு, பொருள் காப்பீடு, வாகனக் காப்பீடு, சொத்துக் காப்பீடு அல்லது மற்ற எந்தவகையான காப்பீடு முறையாக இருந்தாலும் 

அவை அனைத்தும் ஓர் ஒப்பந்தமாகும். 

காப்பீடு நிறுவனத்திற்கும் காப்பீடு செய்து கொள்ளும் நபருக்கும் மத்தியில் ஏற்படும் ஒப்பந்தம்தான் 'இன்சூரன்ஸ்' என்று அழைக்கப்படுகிறது,

காப்பீட்டு முறையானது 

காப்பீடு செய்யப்படும் பொருளுக்கு சேதமோ அல்லது அழிவோ ஏற்படும்போது அல்லது காப்பீடு செய்துள்ள நபருக்கு விபத்து போன்றவற்றின் காரணமாக மரணம் ஏற்படும்போது 

ஒருகுறிப்பிட்ட தொகையை அல்லது ஒரு குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகையை அல்லது பொருளின் சந்தை விலையை தனக்கோ அல்லது தான் குறிப்பிடும் நபருக்கோ அல்லது தனது வாரிசுகளுக்கோ காப்பீடு நிறுவனம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை காப்பீடு செய்யும் நபர் முன்வைக்கிறார்; 


அதற்காக காப்பீடு செய்யும் நபர் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் காப்பீடு நிறுவனம் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறது, 


ஆகவே ஒரு கோரிக்கையை காப்பீடு செய்பவர் முன்வைக்கிறார், 

அதை ஒரு நிபந்தனையின் அடிப்படையில் காப்பீடு நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது.

இஸ்லாத்தில் காப்பீட்டுத் திட்டம் கூடுமா? கூடாதா? என்று நேரடியாக பதில் கூறப்படவில்லை. 


ஆனாலும் சில வழிமுறைகளைக்கொண்டு கூடுமா? கூடாதா? என்பதை அறிஞர்கள் தெளிவாக கூறியுள்ளார்கள். 


காப்பீடு திட்டம் (இன்சூரன்ஸ்) என்பது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காலத்தில் இல்லை. 


ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் எந்த ஒரு வியாபாரமாக இருந்தாலும், கொடுக்கல் வாங்கலாக இருந்தாலும் 

அதில் எது கூடும்? எது கூடாது? என்பதை மிகத் தெளிவாக விளக்கி விட்டுச் சென்றிருக்கிறார்கள்.


​​இன்றைக்கு நடைமுறையில் உள்ள காப்பீட்டுத் திட்டங்களில் மார்கத்திற்கு மாற்றமான வட்டி கலந்த காப்பீட்டுத் திட்டங்களும் உள்ளன. 


வட்டியில்லாத காப்பீட்டுத் திட்டங்களும் உள்ளன. 


நம்முடைய பணத்திற்கு வட்டி கணக்கிட்டு தரக்கூடிய காப்பீட்டுத் திட்டங்களில் நாம் ஒரு போதும் சேர்ந்து விடக்கூடாது. 


இது மார்க்கத்திற்கு மாற்றமானதும் மறுமையில் நிரந்தர நரகத்தில் கொண்டு போய் சேர்க்கின்ற பாவமான காரியமாகும்


ஆக இன்சூரன்ஸ் குறித்து முடிவு எடுக்கத் தேவையான அடிப்படைகள் இஸ்லாத்தில் வகுக்கப்பட்டுள்ளன.

இஸ்லாம் தடுத்துள்ள வட்டி, மோசடி, ஏமாற்றுதல் போன்றவை இருந்தால் அது எந்த நவீன பிரச்சனையாக இருந்தாலும் அது தடுக்கப்பட்டதாகும். 


அவ்வாறு இல்லாவிட்டால் அது அனுமதிக்கப்பட்டதாகும்.



کار انشورنس بھی جوئے کی ایک صورت  ہے اور اپنے اختیار سے کار انشورنس کراناشرعاً جائز نہیں، 


لیکن جبری اور قانونی طور پر اگر کار کی انشورنس کرانا لازمی ہو تو (دل سے ناجائز سمجھتے ہوئے انشورنس کرانے والے مجبور شخص کو)  اس کا گناہ نہیں ہوگا،  

البتہ ایکسیڈنٹ کی صورت میں صرف اپنی جمع کی ہوئی رقم کے بقدر ہی فائدہ اٹھاسکتے ہیں


அநேக இன்சூரன்ஸ் திட்டத்தில் பொதுவாக வட்டி,சூதாட்டம், இரண்டும் சேர்த்து காணப்படுவதால் அது நம்மார்க்கத்தில் அனுமதிக்கப்படவில்லை.

எனினும் நம்நாட்டில் கலவரங்கள், அசம்பாவிதங்கள் தொடர்கதையாகி விட்ட , மேலும் இந்துதுவ சக்திகள் எழுச்சியோடு இருக்கும் இந்த சமயங்களில் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்திருந்தால் வெளிப்படையிலாவது பாதுகாப்புக்கு உத்தரவாதம் இருப்பதால்  

ஆபத்தான கட்டங்களில் கடைகள்,வாகனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்காக மட்டும் இன்சூரன்ஸ் செய்து கொள்வது அனுமதிக்கப்படும்.


ஆனால் *எல்ஐசி* (Life Insurance
Corporation of India.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்) ஆயுள் காப்பீடு 
மற்றும் உடலுறுப்புகளுக்கு இன்சூரன்ஸ் செய்வது இவை அறவே கூடாதவையாகும்,


மேலும் ஆகுமாக்கப்பட்ட இன்சூரன்ஸிலும் சேமித்து வைத்த தொகையை விடக் கூடுதலான தொகையை நன்மையை எதிர்பாராமல் ஏழை எளியோருக்குக் கொடுத்துவிட வேண்டும்.”


இதனடிப்படையில் வாகன இன்சூரன்ஸில் வாகனத்திற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் 

அப்போது சேமித்த தொகையளவிற்கு மட்டும் 
அதிலிருந்து பயன் பெறுவதற்கு அனுமதி உண்டு


பார்க்க 👇

(فتاوی رحیمیہ جلد 6,صفحہ 135)


قال اللہ تعالی:
وأحل اللہ البیع وحرم الربا 

الآیة(سورہ بقرہ،آیت:۲۷۵)،

یٰأیھا الذین آمنوا إنما الخمر والمیسر والأنصاب والأزلام رجس من عمل الشیطن فاجتنبوہ لعلکم تفلحون

(سورہ مائدہ،آیت:۹۰)،

وقال رسول اللہ صلی اللہ علیہ وسلم:

إن اللہ حرم علی أمتي الخمر والمیسر

(مسند احمد ۲: ۳۵۱، حدیث نمبر: ۶۵۱۱)،

﴿وَلَا تَأْکُلُوْا أَمْوَالَکُمْ بَیْنَکُمْ بِالْبَاطِلِ﴾ أي بالحرام، 

یعني بالربا، والقمار، والغصب والسرقة

لأن القمار من القمر الذي یزداد تارةً وینقص أخریٰ۔ وسمی القمار قمارًا؛ 

لأن کل واحد من المقامرین ممن یجوز أن یذہب مالہ إلی صاحبہ، ویجوز أن یستفید مال صاحبہ، وہو حرام بالنص

الفضل المستحق لأحد المتعاقدین فی المعاوضة الخالی عن عوض شرط فیہ


کار انشورنس بھی جوئے کی ایک صورت  ہے اور اپنے اختیار سے کار انشورنس کراناشرعاً جائز نہیں، 

لیکن جبری اور قانونی طور پر اگر کار کی انشورنس کرانا لازمی ہو تو (دل سے ناجائز سمجھتے ہوئے انشورنس کرانے والے مجبور شخص کو)  اس کا گناہ نہیں ہوگا،  

البتہ ایکسیڈنٹ کی صورت میں صرف اپنی جمع کی ہوئی رقم کے بقدر ہی فائدہ اٹھاسکتے ہیں۔



பொதுவாக இன்சூரன்ஸுடைய அநேக வழிகள் வட்டி யுடைய தொடர்போடு இருப்பதினால் 

அவை மார்க்கத்தில் தடை செய்யப்படும் 

ஆனால் வாகனத்தின் இன்சூரன்ஸை பொறுத்தமட்டில் 

நமது தேசத்தின் அரசியலமைப்புச் சட்டத்தின் நிர்ப்பந்தத்தின் காரணமாக அதற்கு அனுமதி வழங்கப்படும் 

ஆயினும் மனமுவந்து அதில் இணைய லாகாது 

எனவே மனதில் வெறுத்த வண்ணமாக வாகனத்திற்கு இன்சூரன்ஸ் செய்து கொள்ளலாம் 

என்றாலும் விபத்து போன்ற நிலைகளில் கொடுத்த பணத்தை விட அதிகமாக பெறலாகாது


தரவு செய்க 👇


فتوی نمبر : 143811200018

دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن



انشورنس جان کا ہو یا گاڑی کا ،اس میں سود اور قمار(جوا ) دونوں پائے جاتے ہیں، 

اور یہ دونوں چیزیں مذہب اسلام میں قطعی طور پر حرام وناجائز ہیں ؛ 

اس لیے اگر کسی ملک میں گاڑی سڑک پر لانے کے لیے گاڑی کا انشورنس کرانا قانونی طور پر لازم وضروری نہ ہو تو لائف انشورنس کی طرح گاڑی کا انشورنس بھی حرام وناجائز ہوگا 


எந்த நாட்டில் வாகனத்திற்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டுமென குடிமக்கள் வற்புறுத்தப்பட மாட்டார்களோ

அங்கு வாகனத்திற்கு இன்சூரன்ஸ் செய்வதும் குற்றமாகும் 

எவ்வாறு லைஃப் இன்சூரன்ஸ் கூடாதோ 

அது போலவே அதுவும் கூடாது


தரவு செய்க 👇


ماخذ :دار الافتاء دار العلوم دیوبند

فتوی نمبر :64361

تاریخ اجراء :Apr 25, 2016



பார்க்க 👇

مستفاد : (معالم التنزیل ۲: ۵۰)،

(شامی،کتاب الحظر والإباحة،باب الاستبراء،فصل في البیع ۹:۵۷۷ ، مطبوعہ: مکتبہ زکریا دیوبند)

( ھدایہ آخرین، ج 2  ، ص82،مطبوعہ لاھور )

(درمختار،کتاب البیوع،باب المرابحةوالتولیة،ج7،ص395، دارالکتب العلمیہ ، بیروت)

(فتاوی رضویہ، جلد17صفحہ365،مطبوعہ رضا فاؤ نڈ یشن ، لاھور)

(احکام شریعت،ح 2،ص187، بُک کارنر، جہلم)

(فتاوی عالمگیری ، ج5 ، ص324 ، مطبوعہ کوئٹہ)

(وقارالفتاوی،ج اوّل،ص 240،مطبوعہ کراچی)


گاڑی وغیرہ کی انشورنس کروانا جائز نہیں ہے، 

کیونکہ اس میں خدشات اور خطرات ہیں نیز اس میں لوگوں کا مال ناحق کھانے کا عنصر بھی شامل ہے، 

ہونا یہ چاہیے کہ انسان اللہ تعالی پر توکل رکھے، 

اور اللہ کے حکم سے کچھ ہو بھی جائے تو صبر کرے، 

اور جو کچھ بھی خرچہ آ رہا ہے اس برداشت کرے، 

چنانچہ تمام اخراجات اپنے ہی مال سے کرے، 

انشورنس کمپنی کی طرف توجہ نہ دے، 

اللہ تعالی ہر قسم کے امور میں مدد و اعانت کرنے والا ہے" 



சில அறிஞர்களின் கூற்றின்படி 

இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனத்திற்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டாலும் 

இன்ஷூரன்ஸ் கம்பெனியை நாடாமல் 

ஹலாலான தனது சம்பாத்தியத்தை வைத்து போதுமாக்கிக் கொள்ள வேண்டும் 

வாகன சேதத்தை கண்டு மனம் ததும்பி விடாமல் பொறுமையோடு இறைவனுடைய கழா கத்ரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது


பார்க்க 👇

"المنتقى من فتاوى الفوزان" (76 /4-5)



اس لیے انشورنس اور بیمہ کی یہ قسم حرام ہوگی، 

اور میرے علم کے مطابق کوئی بھی انشورنس جو دھوکے پر مبنی ہو تو وہ حرام ہے، 

کیونکہ ابو ہریرہ رضی اللہ عنہ سے مروی ہے کہ : 

(نبی صلی اللہ علیہ وسلم  نے  دھوکے کی بیع سے منع فرمایا)"


அநேக இன்சூரன்ஸ் வழிமுறைகள் மக்களை ஏமாற்றும் வண்ணமாக இருக்கிறது 

ஏமாற்று வழி கொண்ட அனைத்து வியாபார முறைகளையும் நபி ஸல் அவர்கள் தடை செய்திருக்கிறார்கள் 

எனவே முடிந்தவரை இன்ஷூரன்ஸ் செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்


பார்க்க 👇


"فتاوى علماء البلد الحرام" (صفحہ: 652)



لیکن ہندوستان کے موجودہ حالات میں جب کہ مسلمانوں کی جان و مال، صنعت وتجارت وغیرہ کو فسادات کی وجہ سے ہر آن شدید خطرہ لاحق رہتا ہے، 

اس کے پیش نظر ’’ 
الضرورات تبیح المحظورات 
‘‘ رفع ضرر، دفع حرج اور تحفظ جان ومال کی شرعاََ اہمیت کی بناء پر ہندوستان کے موجودہ حالات میں جان ومال کا بیمہ کرانے کی شرعاََ اجازت ہے‘‘۔


جہاں تک انفرادی فتاویٰ کی بات ہے تو علماء بریلی اور جنوبی ہند کے بعض بڑے دارالافتاء چوں کہ ہندوستان کو دارالحرب مانتے ہیں 

اور وہ فقہ حنفی کے مشہور نقطۂ نظر کے مطابق ہندوستان میں سود کے تحقق ہی کو تسلیم نہیں کرتے اور دھوکہ اور جبر کے بغیر تمام عقود فاسدہ کو درست قرار دیتے ہیں؛ 

اس لئے ان کے نزدیک یوں بھی انشورنس کرانا اور اس سے حاصل ہونے والی آمدنی سے فائدہ اُٹھانا جائز ہے؛ 


நமது தேசத்தில் தற்போது நிலவி வரும் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைபாடுகள் 

குறிப்பாக முஸ்லிம்களுடைய உயிருக்கும் உடமைக்கும் வியாபாரத்திற்கும் தொழிலுக்கும் ஆபத்துள்ள நெருக்கடியான நிலையில் 

முஸ்லிம்களுக்கு எதிராக எல்லாவகையிலும் சதித்திட்டங்களை தீட்டி ஆதிக்கம் செலுத்திடும் ஆதிக்கவாதிகள் இருப்பதினால் 

நமது இந்திய தேசத்தை சில அறிஞர்கள் தாருல் ஹர்ப் வுடைய حكم தருகிறார்கள் 

அவர்களுடைய அனுமானத்தின் படி 

முஸ்லிம்கள் எல்லா வகையான இன்சூரன்ஸும் செய்து கொள்ளலாம் 

அதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தை கொண்டு பயனும் அடையலாம் என்று தீர்ப்பளிக்கிறார்கள்


لیکن جو حضرات ہندوستان میں سود اور قمار کو ناجائز کہتے ہیں، 

انھوں نے اپنے انفرادی فتاویٰ میں بھی ملک کے حالات کے پس منظر میں اس کو جائز قرار دیا ہے؛ 

چنانچہ ماضی قریب کے صاحب نظر مفتی حضرت مولانا مفتی عبدالرحیم لاجپوریؒ فرماتے ہیں:


அதேபோன்று எல்லாவகையான இன்சூரன்சும் கூடாது என்று தடை செய்யும் அறிஞர்கள் கூட உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்படுகின்ற பொழுது 

இன்சூரன்ஸ் செய்து கொள்வதினால் வெளிப்படையிலாவது பாதுகாப்பு கிடைக்கும் என்ற காரணத்தினால் 

கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் போன்றவைகளுக்கும் காப்பீடு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கிறார்கள்


’’ … مگر سوال میں جن خطرات کی نشاندہی کی گئی ہے، وہ بھی واقعہ ہیں اور بیمہ کرالینے کی صورت میں فسادیوں کی نظرِ بد سے دوکان وغیرہ کی بہ ظن غالب حفاظت ہو جاتی ہے؛ 

اس لئے قانونِ فقہ ’’ الضرر یزال ‘‘ کے پیش نظر خطرے کی چیزوں کا بیمہ کرالینے کی گنجائش معلوم ہوتی ہے، 

اس شرط کے ساتھ کہ بیمہ کمپنی میں جو رقم جمع کرائی ہے، اس سے زیادہ جو رقم ملے، 

وہ غرباء اور محتاجوں میں بلا نیت ثواب تقسیم کر دی جائے، 

اپنے کام میں ہرگز نہ لی جائے، 

ہاں، اگر خدانخواستہ خود ہی محتاج ہو جائے تو علماء کرام سے فتویٰ حاصل کر کے بقدر ضرورت اپنے استعمال میں لینے کی گنجائش ہے ‘‘ 


ஆக உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து என்ற நிர்ப்பந்தமான நிலைகளில் 

தேவைக்கு தக்க சில இன்ஷூரன்ஸ் செய்து கொள்வதற்கு மார்க்கம் அனுமதி அளிக்கிறது 

அவ்வாறு செய்து கொள்ளும் காப்பீட்டிலும் தமது சேமிப்பு தொகையை விட கூடுதலாக கிடைக்கும் தொகையை நன்மையை நாடாமல் பிறருக்கு கொடுத்துவிட வேண்டும் 

பாதிக்கப்பட்டவரே மிகவும் தேவை உள்ளவராக இருந்தால் 

உலமா பெருமக்களிடத்தில் ஆலோசனை பெற்று அவரே அதனையும் பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதி உண்டு


பார்க்க 👇


(فتاویٰ رحیمیہ: ۶؍۱۳۲)


استاذ گرامی سابق صدر مفتی دارالعلوم دیوبند حضرت مولانا مفتی محمودالحسن گنگوہیؒ اپنے فتاویٰ میں فرماتے ہیں:

’’ بیمہ میں سود بھی ہے اور جوا بھی، یہ دونوں چیزیں شرعاََ ممنوع ہیں، 
بیمہ بھی ممنوع ہے؛ 

لیکن اگر کوئی شخص ایسے مقام پر اور ایسے ماحول میں ہو کہ بیمہ کرائے بغیر جان ومال کی حفاظت ہی نہ ہو سکتی ہو یا قانونی مجبوری ہو تو بیمہ کرانا درست ہے 


உடமைக்கும் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத பகுதியில் 

இன்சூரன்ஸ் செய்து தமது பாதுகாப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு மார்க்கம் அனுமதி அளிக்கிறது


பார்க்க 👇


‘‘ (فتاویٰ محمودیہ:ُ ۲۴؍۴۵۴)


دارالعلوم دیوبند کے ایک اور سابق مفتی حضرۃ الاستاذ مولانا مفتی نظام الدین صاحبؒ فرماتے ہیں:

’’ قانونی مجبوری یا ملکی فساد وغیرہ کے خطرہ سے بچنے کی نیت سے انشورنس کرانے کی گنجائش ہے، 

باقی اپنے جمع کئے ہوئے روپئے سے زائد جو روپیہ ملے، 

اس کا حکم یہ ہے کہ اگر گورنمنٹ کمپنی سے زائد رقم ملے تو اس کو ایسے ٹیکس میں دینا درست ہے، 

جو براہ راست گورنمنٹ خزانے میں پہنچتا ہو، 

اگر اس طرح کے ٹیکس میں نہ دینا ہو یا دینے سے بچ جائے تو پھر ایسی صورت میں اس کے وبال سے بچنے کی نیت سے ثواب کی نیت کے بغیر غرباء و مساکین کو جلد سے جلد دے کر یا ایسے مدارس دینیہ میں دے کر 

جس میں غیر مستطیع طلبہ کو کھانا کپڑا دیا جاتا ہو، 

اپنی مِلک سے نکال دیں، اور ان مدارس میں دیتے وقت ان کے مصارف میں صرف کرنے کی تاکید کر دیں؛ 

بلکہ اگر اپنے یہاں ایسے دینی مدارس موجود نہ ہوں اور ان مدارس کی ضرورت ہو تو ایسے مدارس قائم کر کے غریب بچوں کو اس میں کھانا کپڑا وغیرہ دینے کا نظم کر کے اس میں بغیر نیت ثواب دے ینا چاہئے کہ 

اس سے دین اور علم دین کو فروغ اور ترقی ہوگی، اور اس فروغ اور ترقی کا ثواب خود بخود ملے گا ‘‘۔ 

لیکن یہ حکم اس وقت ہے جب موت طبعی طور پر ہوئی ہو، یا کاروبار کسی آفت سماوی کا شکار ہوا ہو، 

اگر فسادات میں ہلاکت واقع ہوئی، یا کاروبار متأثر ہوا تو اب پوری رقم جائز ہوگی؛ 

اس لئے کہ انشورنس کمپنی نیم سرکاری کمپنی ہے، اور مسلمانوں کا تحفظ بھی سرکاری ذمہ داری ہے، 
حکومت کی طرف سے مسلمانوں کی حفاظت میں غفلت؛ 

بلکہ ان کو نقصان پہنچانے کی سعی میں شرکت شب وروز کا مشاہدہ ہے؛ 

اس لئے یہ حکومت کی ذمہ داری ہے کہ وہ اپنے تغافل کا ہرجانہ ادا کرے


ஆக இந்திய நாட்டினுடைய சட்டத்தின் கட்டாயத்தின் படி வாகன இன்சூரன்ஸ் செய்து கொள்வதற்கும் 

மேலும் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படுகின்ற பொழுது 

தனது உயிருக்கும் தனது உடமைக்கும் இன்சூரன்ஸ் செய்து கொள்வதற்கும் அனுமதி உள்ளது 

அவ்வாறு இன்சூரன்ஸ் செய்து கொண்ட தொகை தமது கைக்கு கிடைக்கும் பொழுது 
தான் கொடுத்த தொகையை விட அதிகமாக கிடைக்கும் பணத்தை நன்மையை நாடாமல் தர்மம் செய்துவிட வேண்டும் 

அல்லது ஏதேனும் மதரஸாவின் ஏழை மாணவர்களுக்கு கொடுத்து விடுவது இது மிகச் சிறப்பானதாகும் 

அதேபோன்று அந்த அதிகப்படியான தொகையை அரசாங்கத்திற்கு நேரடியாக செலுத்தும் வரி பணத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்

இதுவெல்லாம் இயற்கையாக மரணம் ஏற்படுகின்ற பொழுதும், 

இயற்கையாக தொழில்துறைகளில் சேதம் ஏற்படுகின்ற பொழுதும் தான் 

ஆனால் ஒருவருக்கு எதிர்பாராத வகையில் பிறரின் குழப்பத்தினால் மரணம் ஏற்பட்டாலோ 
தொழில்துறைக்கு சேதம் ஏற்பட்டாலோ 

அப்போது இன்ஷூரன்ஸ் கம்பெனி மூலமாக கிடைக்கும் முழு தொகையையும் பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதி உண்டு 

ஏனெனில் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் 

இன்ஷூரன்ஸ் அரசாங்கமே நடத்துகிறது 

எனவே இயற்கை அல்லாத எதிர்பாராத வகையில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பும் அரசாங்கத்தையே சாரும் 

எனவே அரசாங்கம் தரும் முழுப் பணமும் அவருக்கு உரிமையானதே


பார்க்க 👇


(منتخبات نظام الفتاویٰ:۳؍۹۹- ۱۰۰)


(مضمون نگار معروف اسلامی اسکالر اور آل انڈیا مسلم پرسنل لاء بورڈ کے سکریٹری و ترجمان ہیں)


دیگر انشورنسس کی طرح میڈیکل انشورنس میں بھی سود اور جوے کی حقیقت پائی جاتی ہے اور سود اور جوا دونوں اسلام میں قطعی طور پر حرام وناجائز ہیں؛ 

اس لیے جس طرح میڈیکل انشورنس کرنا اور کرانا حرام وناجائز ہے، 

اسی طرح کسی انشورنس کمپنی میں میڈیکل انشورنس سے متعلق کسی کام کی ملازمت بھی حرام وناجائز ہے، 

جیسے: بینک میں سودی حساب کتاب چیک کرنے یا اس کی نگرانی وسرپرستی کی ملازمت ناجائز ہے؛ 

اس لیے آپ کسی انشورنس کمپنی میں سوال میں مذکور جو ملازمت کررہے ہیں، 

یہ شرعاً جائز نہیں ہے، 

آپ جلد از جلد یہ ملازمت ترک کردیں اور کوئی دوسرا جائز ذریعہ معاش اختیار کریں۔ 

اور جب کوئی جائز ذریعہ معاش مل جائے تو ناجائز ملازمت سے حاصل کردہ ساری تنخواہ حسب سہولت تھوڑی تھوڑی کرکے چند سالوں میں بلا نیت ثواب غربا ومساکین کو دیدیں


மெடிக்கல் இன்சூரன்ஸ் உட்பட எல்லா வகையான இன்சூரன்சும் சாதாரணமான நிலைகளில் அனுமதிக்கப்படாத ஒன்றாகும் 

அதேபோன்று அனைத்து வகை இன்சூரன்ஸ் கம்பெனிகளில் வேலை செய்வதும் அனுமதிக்கப்படாத ஒன்றாகும் 

எவ்வாறு வங்கியில் பணிபுரிவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட காரியமோ 

அதே போன்றே இன்ஷூரன்ஸ் கம்பெனிகளில் வேலை செய்வதும் தடை செய்யப்பட்ட ஒன்றாகும் 

ஒருவர் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை செய்து வந்தால் முடிந்த வரை அவர் ஹலாலான சம்பாத்தியத்தை தந்திடும் ஏதேனும் வேலையில் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் 

அதுவரையிலும் மார்க்கம் தடை செய்த அந்த இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை செய்து கொள்ளலாம் 

ஹலாலான வருமானத்திற்கான வழி ஏற்பட்டவுடன் அந்த இன்சூரன்ஸ் கம்பெனியின் வேலையை விட்டுவிட வேண்டும் 

பின்னர் சிறுக சிறுக ஹராமான வருமானத்தில் வந்த அந்த வருவாயை நன்மையை நாடாமல் ஏழை எளியோர்களுக்கு தர்மம் செய்துவிட வேண்டும்


இன்ஷூரன்ஸை பற்றி இன்னும் சில அறிஞர்கள் இவ்வாறு வியாக்கியானம் செய்கிறார்கள்

அதாவது ஒருவர் வட்டியுடன் சேர்த்து திரும்பக் கிடைக்கும் இன்சூரன்ஸில் சேர்ந்து எனக்கு வட்டி வேண்டாம் என்னுடைய அஸல் தொகை மட்டும் போதும் என்று கூறினால் அது மார்க்கத்தில் ஹலாலாகும். 

ஆனால் இன்னும் சில காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. 

அவற்றில் வட்டியின் எந்த ஒரு அம்சமும் கிடையாது. 

இவற்றில் நாம் போடும் பணம் நமக்கு திரும்பக் கிடைக்காது. 

ஆனால் நமக்கு பாதிப்பு ஏற்படும் போது இன்சூரன்ஸ் நிறுவனம் நம்முடைய பாதிப்பிற்கு பொறுப்பேற்றுக் கொள்ளும். 

நமக்கு பாதிப்பு ஏற்படவில்லையில்லையென்றால் நம்முடைய பணம் நமக்கு திரும்பக் கிடைக்காது.

உதாரணமாக மருத்துவக் காப்பீடு (medical insurance), 

வாகனக் காப்பீடு (vechicle insurance) போன்றவற்றைக் கூறலாம். 

நம்முடைய மார்க்க அடிப்படையில் நாம் அனைவரும் பணம் போட்டு பைதுல் மால் ஒன்றை ஆரம்பிக்கின்றோம். 

நமக்கு நோய் ஏற்படும் போது அந்த பைதுல் மாலின் மூலம் நமக்கு உதவி செய்வார்கள்.

​​நாம் பைதுல் மாலிற்கு செலுத்திய பணம் குறைவாக இருந்தாலும் அனைவரின் பணமும் சேர்ந்து நமக்கு அதிகமாகக் கிடைக்கிறது. 

நமக்கு பாதிப்பு ஏற்படவில்லையென்றால் அந்தப் பணம் வேறு யாருக்காவது பயன்படும். 

இது போன்ற ஒரு ஒப்பந்தத்தில்தான் மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு செய்யப்படுகிறது. 

நாங்கள் இந்த மருத்துவக் காப்பீட்டில் பணம் செலுத்துகின்றோம். 
நமக்கு பாதிப்பு வரும்போது அந்த நிறுவனம் நம்முடைய பாதிப்பிற்கு உதவி செய்கிறது. நமக்கு பாதிப்பே வரவில்லையென்றால் நம்முடைய பணம் பாதிப்பு ஏற்பட்ட மற்றொரு சகோதரருக்கு உதவியாகச் செல்லும். 

இந்த அடிப்படையில்தான் அனைவரும் பணம் செலுத்துகின்றனர்.

​​இதில் பணத்திற்கு எந்த விதமான வட்டியும் கணக்கிடப்படுவதில்லை.

ஆகவே இது போன்றுதான் வாகன இன்சூரன்சும். 
நாம் நம்முடைய வாகனத்திற்காக குறிப்பிட்ட கால அளவில் குறிப்பிட்ட தொகையை காப்பீடாகச் செலுத்துகின்றோம். 
இந்த குறிப்பிட்ட கால அளவில் நமக்கு பாதிப்புகள் ஏற்படும் போது அந்த நிறுவனம் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறது. இதில் மூன்று விதமான பாதிப்புகள் ஏற்படும்.

*​ஒன்று :*
நாம் ஓட்டும் போது எதிரில் வருபவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

*இரண்டாவது :* 
நாம் ஓட்டுகின்ற வண்டிக்கு பாதிப்பு ஏற்படும்.

*மூன்றாவது :*
வண்டியின் ஓட்டுனருக்கு பாதிப்பு ஏற்படும்.


நாம் வாகனத்தை ஓட்டிச் சென்று ஒருவன் மீது மோதி அவன் இறந்து விட்டால் இஸ்லாத்தின் அடிப்படையிலேயே அவனுக்கு அவனுடைய குடும்ப நிலையை பார்த்து அவனுக்கு நஷ்டயீடு கொடுக்க வேண்டும் என்பது கட்டாய மார்க்க விதியாம்,

நாம் யாராவது ஒருவர் மீது மோதி அவர் மரணித்து விட்டாலோ 
அல்லது வண்டிக்கு ஏதாவது சேதமானாலோ 
அல்லது நமக்கு ஏதாவது ஆனாலோ எவ்வளவு செலவானாலும் அந்த நிறுவனம் பார்த்துக்கொள்ளும். 

அப்படி எதுவும் ஆகவில்லையென்றால் பணம் திரும்ப வராது.

​​இவ்வாறாக கூறித்தான் அனைவரிடமும் பணம் வாங்கப்படுகிறது. 
இதில் வட்டியில்லை. 
அதற்கான சாயலும் இல்லை. இது ஒரு கூட்டு உதவித் திட்டம் தான். 
இதற்கு மார்கத்தில் எந்தத் தடையுமில்லை. 

ஆகையால் இது நமக்கு அனுமதியாகும்.

குறிப்பு : உயிருக்கு பயந்து, தக்கவித்துக்கொள்ள செய்யப்படும் இன்சூரன்ஸ் காப்பீட்டுத் திட்டத்தை இஸ்லாம் மார்க்கம் அனுமதிக்கவில்லை

ஏனெனில் மரணம் என்பது எப்போதும் வரலாம் ,
அந்த மரணத்திலிருந்து தப்பிக்கொள்ள முன்கூட்டியே சேர்க்கப்படும் காப்பீட்டுத் திட்டம் கூடாது ,
அது இறைநம்பிக்கையை குறைக்கின்றது அதுமட்டுமல்லாமல் களா,கத்ர் நம்பிக்கையை இழக்கச்செய்கிறது.
என்றும் சில அறிஞர்கள் கருதுகிறார்கள்

 
தரவு செய்க 👇


فتوی نمبر : 144004200779

دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن


ماخذ :دار الافتاء جامعۃ العلوم الاسلامیۃ بنوری ٹاؤن

فتوی نمبر :144004201603

تاریخ اجراء :07-03-2019


جواب نمبر: 155690

دارالافتاء،
دارالعلوم دیوبند


ماخذ :دار الافتاء دار العلوم دیوبند

فتوی نمبر :159898

تاریخ اجراء :May 12, 2018



مستفاد : (معارف السنن، أبواب الطہارة، باب ما جاء: لا تقبل صلاة بغیر طہور، ۱: ۳۴، ط: المکتبة الأشرفیة دیوبند)

(رد المحتار، کتاب الحظر والإباحة، باب الاستبراء وغیرہ ، فصل فی البیع ،۹: ۵۵۳)،

(إکمال الإکمال (۴:۲۸۰،ط:دار الکتب العلمیة بیروت)

(فتاوی رحیمیہ 9/265)

(نفائس الفقہ: ۱ /۲۳۱)

(المبسوط: ۱۶ /۱۹۴)

(عمدۃ القاری: ۸ / ۴۳۵)

(ایضاح النوادر: ۱ / ۱۲۷؛ )

(آپ کے مسائل اوران کا حل: ۶ / ۲۵۸؛ )

(فتاوی قاسمیہ: ۲۰ / ۴۲۸)

(مجموع الفتاوى" (29/ 483)



*والله اعلم بالصواب ✍*



*الجواب: مولانا، عبد الرحیم انواری حضرت*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?