தஸவ்வுஃப்
இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தஸவ்வுஃப் எனும் சூஃபியிஸத்தைப் பற்றிக் கூறுகிறார்கள்:
أصول طريق التصوف خمسة:
தஸவ்வுஃப் எனும் தரீக்காக்களின் அடிப்படைகள் ஐந்து :
تقوى الله في السر والعلانية.
1. ரகசியத்திலும், வெளிரங்கத்திலும் அல்லாஹ்வை பயப்படுவது,
اتباع السنة في الأقوال والأفعال.
2. சொல்லிலும் செயலிலும் சுன்னாவைப் பின்பற்றுவதல்,
الإِعراض عن الخلق في الإِقبال والإِدبار.
3. மக்களை முன்னோக்கும் பொழுதும், தனித்து செல்லும்பொழுதும் படைப்பினங்களை (உள்ளத்தை விட்டும்) புறக்கணித்து விடுதல் (அல்லாஹ்வை மட்டும் முன்னோக்குதல்.)
الرضى عن الله في القليل والكثير.
4. அல்லாஹ்வின் புறத்திலிருந்து வரக்கூடிய (ரிஜ்கான)து குறைவாக இருந்தாலும், கூடுதலாக இருந்தாலும் அதை பொறுந்திக் கொள்ளுதல்,
الرجوع إِلى الله في السراء والضراء)
5. செழிப்பிலும், வறுமையிலும் அல்லாஹ்வின் பக்கமே திரும்பி இருத்தல்.
மகாஸிதுத் தஸவ்வுஃப்,
ஆசிரியர் : இமாம் நவவீ,
பக்கம் : 20.
கருத்துகள்
கருத்துரையிடுக