புத்தக கிராமம்

புத்தகங்களை பரிமாறிக் கொள்..!!

"உலக வரைபடத்தில் உள்ள மூலை முடுக்குகளுக்கு செல்ல விரும்புகிறாயா..? ஒரு நூலகத்திற்குச் செல்.." என்ற டெஸ்கார்டஸின் வரிகள் நமக்குப் பரிச்சயமானவை..

ஆனால் அப்படி மூலை முடுக்குகளுக்குப் பயணிக்கும்போதும் நூலகங்கள் நமதருகே இருந்தால்..?
..கேட்கவே சுவாரசியமாக இருக்கிறதல்லவா..?

சில வருடங்களுக்கு முன், புத்தகங்களைப் பற்றி முகநூலில் இயல்பாக பேசிக் கொண்டிருக்கும் போது, அமெரிக்காவில் வசிக்கும் தோழி புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, "Reading on the Highways" என தலைப்பிட்டிருந்தார்..
..பயணங்களுக்கிடையே சிறிது நேரம் இளைப்பாரும் போது, பயணிகளை, முக்கியமாக இளைஞர்களைப் படிக்கத் தூண்டுவதற்காக அமெரிக்காவின் பல மாகாணங்களில், பார்க் அல்லது சோலைகளுக்கிடையே சிறிய நூலகங்கள் அமைப்பட்டிருந்ததைக் அதில் குறிப்பிட்டிருந்தார்..

இதைத் தெரிந்தவுடன், நண்பர் மீன்ஸ், "நம்ம ஊர்ல இதெல்லாம் சாத்தியமாகுமா..? 
சந்தேகம் தான்.." என்ற தவிப்புடன் கூற, அன்றைய உரையாடல் அப்போது முடிவடைந்தது..

ஆனால் அதை இப்போது சாத்தியப் படுத்தியுள்ளனர், கேரள மாநிலத்தின் பெருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்..

ஆம்..
பெருங்குளம் கிராமத்தை, புத்தக கிராமம் என்று பெயரிட்டு, அதில் பல சிறிய நூலகங்களை இவர்கள் உருவாக்கியுள்ளனர்..

 "புத்தகக் கூடுகள்" என்று அழைக்கப்படும் இந்த அழகிய நூலகக் கூடுகளில் புத்தகங்களையும், நாளிதழ்களையும் வைத்து, அனைவரும் படிக்கவும், பகிரவும் உதவுகின்றனர்..!

Sharing is a way of immortality..
Be it knowledge or books.. 
என்பது அழகாக நிரூபணம் ஆகியுள்ளது..

நாடெங்கும், உலகெங்கும் விரித்துப் பரவட்டும் இந்த நல் முயற்சிகளும் புத்தகங்களும்..!

💖💖💖
#bookvillage

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?