*பள்ளிவாசல்களில் பணி புரியும் இமாம்கள் எப்படி இருக்கவேண்டும்.?*
*பள்ளிவாசல்களில் பணி புரியும் இமாம்கள் எப்படி இருக்கவேண்டும்.?*
*அய்யம் பேட்டை*
*மௌலானா மௌலவி அல்ஹாஜ்*
*B.M.ஜியாவுத்தீன் பாகவி ஹழ்ரத்*
*ஒரு இமாம் கவனத்தில் எடுக்க வேண்டிய முக்கியமான ஷர்த்துகள்..!*
*1. ஆரம்பத்தில் இருந்தே நாம் நம்மை கட்டுப்பாடுகள் நிறைந்தவராக ஆக்கி கொள்ள வேண்டும்.*
*2. தொழுகைக்கு பள்ளிக்குள் வரும் முதல் நபராக இமாம் இருக்க வேண்டும்*.
*3. தொழுகைக்கு பின் பள்ளிக்குள்லிருந்து வெளியாகும் கடைசி நபராக இமாம் இருக்க வேண்டும். (முன் பின் சுன்னத் தொழுகையை நிறைவேற்றுதல்)*
*4. பள்ளிக்குள் உலக விஷயங்களை பேசிக்கொண்டிருக்கும் பழக்கம் அறவே ஒழிக்க வேண்டும். குறிப்பாக பாங்கு சொன்ன பிறகு!*
*5. நிறைவாக தாடிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது நமக்கு وقارة த்தை தரும்.*
*6. இமாமத் செய்யும் போதாவது தூய வெண்மை ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். சஜ்தா செய்யும்போது உள்ளாடையின் அளவு தெரியாத விதத்தில் ஆடைகள் அமைய வேண்டும். ஜுப்பா, அபா போன்ற ஆடைகள் அணிந்து கொண்டு தொழ வைப்பது இறையச்சத்தை அதிகப்படுத்தும்*.
*7. எவ்வளவு பழகினாலும் அவர்களின் வாழ்க்கை, குடும்ப விஷயங்களில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு யோசனைகள் சொல்லாமல் விலகி இருக்க வேண்டும்.*
*8. நம் வயது ஒத்தவர்கள், மற்றும் யாராக இருந்தாலும் பேச்சுவார்த்தை, பழக்க வழக்கங்கள் கண்ணியமாகவும், கண்டிப்பாகவும் இருப்பது மிக நல்லது.*
*9. முடிந்த வரை நம் குடும்ப விஷயங்கள் பற்றி யாரிடமும் தேவையில்லாமல் பேசாதீர்கள்.*
*10. ஆரம்ப காலங்களில் இருந்தே ஹக்கை சொல்வதில் தயக்கமின்றி சொல்வது*.
*11. மக்தப் மதரஸாக்களை மிக மிக மிகச் சீராக சிறப்பாக நடத்துவது. மக்தப் மதரஸா பிள்ளைகளை மிக ஒழுக்கம் நிறைந்தவர்களாக, மார்க்கம் தெரிந்தவர்களாக ஆக்கிட முழு முயற்சி எடுக்க வேண்டும்.*
*12. மாதந்தோறும் குறித்த ஒரு நாளில் பெண்கள் பயான் நடத்துவது.*
*13. ஜும்ஆ பயான்கள் மிக அருமையான தகவல்களுடன் குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு குறித்த நேரத்திற்குள் முடித்துக் கொள்வது.*
*14.சேவைகளை முன் வைத்து அல்லாஹ்க்காக பணிகள் செய்வது.*
*15.ஹாபிழ் அல்லாத இமாம்கள் கிராஅத், مخرج களை சரியானதாக ஆக்கிக் கொள்ளல் மிகவும் அவசியமாகும்.*
*16..மேலும் இடம், பொருள், ஏவல்களை அனுசரித்து, நேரம், கால, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.*
*17.நம் தேவைகளுக்காக அல்லாஹ்விடம் அழுது மன்றாடி துஆ செய்வது.'*
*புதிதாக சேரும் இமாம் கட்டாயம்..*
*இதற்கு முன்பு இருந்த இமாமை சந்தித்து அந்த முஹல்லாவின் சாதக பாதக நிலவரங்களை தெரிந்து கொள்வது அவசியம்.*
*புதிதாக சேரும் இமாம் கட்டாயம் தங்களின் மனதில் பட்ட (நியாயமான)* *சம்பளத்தை கேளுங்கள்.*
*குறைந்த சம்பளம் என்றால் ஏதாவது சொந்த தொழில்* *செய்வதற்கான அனுமதியை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.*
*லீவு விஷயத்தையும் பேசிவிடுங்கள். நீக்கம் செய்யப்பட்டாலும் நீங்களாக நீங்கினாலும் 3 மாத காலம் சம்பளத்துடன் அவகாசம் கேளுங்கள்.*
*இதனை எழுத்து பூர்வமாக ஆக்கிக் கொண்டாலும் பிரச்சினை இல்லை.*
*நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா* *அரபுக் கல்லூரியில்*,* *ஸனது வழங்கும் நிகழ்ச்சியின்போது அய்யம் பேட்டை*
*மௌலானா மௌலவி* *அல்ஹாஜ்*
*B M.ஜியாவுத்தீன் பாகவி ஹழ்ரத் வழங்கிய அறிவுரை.*
கருத்துகள்
கருத்துரையிடுக