மரம் 🌲🌲🌲

தாவரங்களின் உலகம் 16 

( யூதர்களைக் காட்டிக் கொடுக்காத மரம் கர்காத் )

உலக மதங்களில் எல்லாம் மரங்கள் பற்றிய ஏதோ ஒரு குறிப்பு ஏதோ ஒரு இடத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும். அம்மரத்தை அம்மதம் சார்ந்த மக்கள் தெய்வமாக வழிபடுவதும் உண்டு. எல்லாக் கடவுள்களுக்கும் ஏதோ ஒரு மரம் உகப்பானதாகவும், ஒவ்வொரு கோயில்களிலும் அவை ஸ்தல விருட்சங்களாகவும் நிறுவி நிற்பதை வைத்து அந்த கடவுளுக்கு அந்த மரம் உகந்தது என அறிந்து கொள்ளலாம் .

சிவனுக்கு வில்வம், மாரியம்மனுக்கு வேம்பு ,புத்தருக்கு அரசமரம் கிறிஸ்தவருக்கு ஓக் , சிடார், ஈச்சம் எல்ம் உட்பட ஐந்து மரங்கள். முஸ்லீம்களுக்கு பேரீத்த மரம் என தகுதி தகுதியாக சிலர் தங்களது புனித மரங்களாக சிலவற்றை வரையறை செய்துள்ளனர்.

முஸ்லிம்களைப் பொருத்தவரை நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ஒட்டக இறைச்சி கூட சிறந்த உணவு என கூறவில்லை. ஆனால் பேரீத்தம் பழத்தைதான் ஆகச் சிறந்த உணவாக கூறியுள்ளார்கள். 

அது முஸ்லிம்களின் புனித மரம் ஒன்றும் அல்ல ; அவர்களது நாட்டில் மிதமிஞ்சிய வெப்பத்தை தாங்கி நின்று வளரும் மரம் வறட்சியிலும் பழுத்துக் குலுங்கும் மரம். வேறு எந்த உணவு கிடைக்காவிட்டாலும் பத்து பேரீத்தம்பழம் தின்றால் உடலுக்கு தேவையான அந்நாளைய சக்தியைப் பெற்றுக் கொள்ளலாம். 

அதுபோல பேரிச்ச மரத்தை பராமரித்து வளர்க்க வேண்டிய அவசியமே இல்லை எல்லாம் போக அது அவர்களது தேசிய மரம், தேசியக்கொடியில் இடம்பெறும் மரம் அவ்வளவே. 

தமிழர்களுக்கு பனைமரம் போல் யூதரின் புனித மரம் எது தெரியுமா ? அதுதான் கர்காத் (Ghargad) / அவ்ஸாஜ் எனப்படும் ஒரு வகை புதர் தாவரம். தாவர இயல் படி அதன் பெயர் Lycium Shawii என்றும், ஆங்கிலத்தில் Box thorn என்றும், அரபுகள் இந்த மரத்தை Awsaj என்றும் குறிப்பிடுகின்றனர் .

இந்த கர்காத் மரத்திற்கு 60க்கும் மேற்பட்ட துணை வகைகள் உண்டு. ஆனால் அரபுகள் படத்தில் காட்டப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட மரத்தை மட்டுமே அவ்ஸாஜ் மரம் என்கின்றனர் .

சரி, இந்த அவ்ஸாஜ் மரத்திற்கு இப்போது என்ன ?

இந்த மரத்தை சில காலமாக யூதர்கள் அதிகம் அதிகமாக வளர்ந்து வரும் காரணம் என்ன தெரியுமா ?  

ஆக்கிரமிப்பு பாலஸ்தீனிய பூமியில் அதிகமான மரங்களை 1999 முதல் இஸ்ரேல் அதிபர் நெதன்யாஹு முன்னின்று இந்த மரக்கன்றுகளை நட்டு அதனை யூத மக்களையும் செய்யுமாறு ஊக்கப்படுத்தும் நோக்கம் என்ன ? 

குறிப்பிட்ட மரத்தை வளர்ப்பதற்கு அதன் உரிய உயரமான 12 அடியில் 4 அடிகளை அடைந்ததும் அதற்கு பாராட்டும் பரிசுகளும் வழங்கி உற்சாகப் படுத்துவது ஏன் ? 

இவற்றைப் பற்றி விரிவாக காணும் முன் ஹதீஸ்களிலிருந்து கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாம் . முஸ்லீம்களை விட மேலதிகமாக சில விளக்கங்களை அறிவுரைகளையும் படிப்போர் யூதர்கள்தான். நமது தூதுச் செய்தியை அதீத கவனம் பெற்று அவற்றை எப்போதும் உற்றுநோக்கி வருபவர்களும் யூதர்களே ! இதற்கான ஒரு ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு ஒன்று உள்ளது .

அதாவது இஸ்லாமிய - யூதர்களுக்கு இடையே போர் மூளும் போது , யூதர்கள் கற்குவியல்களுக்கும் , மரங்களுக்கும் பின்னால் ஓடி ஒளிவார்கள். அப்படி ஒளியும் சமயத்தில் மற்ற மரங்கள் முஸ்லிம்களுக்கு யூதர்கள் ஒளிந்திருப்பதை காட்டிக்கொடுக்கும்.ஆனால்...இந்த அவ்ஸாஜ் மரத்தைத் தவிர . இதனால் இது யூதர்மரம் என்படுகிறது. 

யூதர்கள் அவ்ஸாஜ் மரத்திற்குப் பின்னால் மட்டுமே ஒளிந்து இருப்பார்கள் என தெரிந்து முஸ்லிம்களால் தேடித்தேடி அடித்து யூதர் கொல்லப்படுவார்கள்.

இது பற்றிய ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :- 

"முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் இடையே ஒரு பெரிய போர் நிகழும் வரை மறுமை நாள் வராது. இப்போரில் நபி ஈசாவும், மன்னர் மஹ்தியும் இணைந்து யூதர்களோடு போர் புரிவார்கள் என வரும் வேறு வேறு ஹதீஸ்கள் உண்டு.

அவற்றின் உண்மைத் தன்மையை பற்றி சந்தேகம் இருப்பதால் கீழே உள்ள ஹதீஸ் மட்டும் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

"அப்போது முஸ்லீம்கள் யூதர்களை கொல்ல முயலும்போது யூதர்கள் மரத்தின் கற்களின் பின் சென்று ஒளிந்து கொள்வார்கள். அப்போது அந்த கற்களும், மரமும் அல்லாஹ்வின் அடியானே... என் பின்னால் ஒரு யூதன் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்று கூறும் .ஆனால் அந்த ஒரு மரத்தை தவிர ! காரணம் அது யூதர்களின் மரம் அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி ) முஸ்லிம் 6985 

ஆனால் இந்த மரத்தின் பெயர் நபி (ஸல்) அவர்களால் கர்காத் / அவ்ஸாஜ் " எனக் குறிப்பிட்டு கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 50 ஆண்டுகளாக இந்த மாதம் அதிகமாக நடப்பட்டு இஸ்ரேலின் ராணுவத்தால் நிதி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நாட்டு செய்தி சேனல்களில் அடிக்கடி 
நெயன்யாஹு தோன்றி, இந்தக் குறிப்பிட்ட மரத்தை அதிகம் வளர்க்க ஓர் அறிவிப்பு செய்வார் என்பது உண்மை.

 2020 ஆண்டுக்குள் 100 மில்லியன் மரங்களை நட்டு விட வேண்டுமென்பது அவர்களது முக்கிய பிரச்சாரமாகும். இந்த மரத்தினுடைய பூ, மற்றும் சிவப்பு நிறப் பழங்கள் இரண்டும் ரோம வளர்ச்சிக்கும் தோலில் ஏற்படும் சரும நோய்களுக்கும் நல்ல நாட்டு மருந்து என எனவும் இதனை மருந்தாக உண்பதினால் தங்களது ஆய்வில் கூறுவதாகவும் யூதர்கள் நம்புகிறார்கள் சீனாவிற்கு இதனை ஏற்றுமதியும் செய்கிறார்கள் .

ரஹ்மத் ராஜகுமாரன் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?