*ஐந்து விடயங்களின் மூலம் ஐந்து விடயங்களை அறிந்து கொள்ளலாம்.*
*தங்கத்தைவிட பெறுமதியான சில வரிகள்.*
*ஐந்து விடயங்களின் மூலம் ஐந்து விடயங்களை அறிந்து கொள்ளலாம்.*
● மரத்தை அதனுடைய பழங்களை வைத்து அறிந்து கொள்ளலாம்.
● ஒரு பெண்ணை அவளுடைய கணவன் ஏழ்மையாக இருக்கும் பொழுது அறிந்து கொள்ளலாம்.
● கஷ்டமான சிரமமான சந்தர்ப்பத்தில் நண்பனை அறிந்துகொள்ளலாம்.
● சோதனைகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் உண்மையான முஃமினை அறிந்து கொள்ளலாம்.
● கடுமையான தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில் உண்மையான கொடையாளியை அறிந்து கொள்ளலாம்.
*ஐந்து விடயங்கள் ஐந்து விடயங்களை உயர்த்துகின்றன.*
● பணிவுத் தன்மை ஆலிம்களை உயர்த்துகின்றது.
● பணம் இழிவானவர்களை உயர்த்துகின்றது.
● மௌனம் பேச்சில் ஏற்படும் சிக்கல்களை நீக்குகிறது.
● வெட்கம் நற்குணத்தை உயர்த்துகிறது.
● சர்வசாதாரணமாக பழகுவது நடிப்பதை நீக்குகிறது.
*ஐந்து விடயங்கள் ஐந்து விடயங்களின் மூலம் உண்டாகின்றன*
● இஸ்திக்ஃfபார் செய்வது ரிஸ்க்கை கொண்டு வருகின்றது.
●பார்வையைத் தாழ்த்திக் கொள்வது
முகத் தோற்றத்தில் இருந்து ஒருவரின் குணத்தை அறியும் கலையை அளிக்கின்றது.
●வெட்கம் நலவுகளை கொண்டுவருகின்றது.
● மென்மையாக பேசுவது கேள்விகளைக் கொண்டு வருகின்றது.
● கோபம் கைசேதத்தை கொண்டு வருகின்றது.
*ஐந்து விடயங்கள் ஐந்து விடயங்களை தடுக்கின்றன.*
● மென்மையாக பேசுவது கோபத்தை தடுக்கின்றது.
● அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவது ஷைத்தானை தடுக்கின்றது.
● நிதானம் கைசேதப்படுவதை தடுக்கின்றது.
● நாவை பேணிக் கொள்வது தவறிலிருந்து தடுக்கின்றது.
● துஆ கெடுதி களிலிருந்து தடுக்கின்றது.
*ஐந்து விடயங்கள் பாக்கியத்தை தருகின்றன.*
● உபகாரம் செய்யக்கூடிய மகன்.
● ஸாலிஹான
( பக்குவமான)
மனைவி.
● நேர்மையான நண்பன்.
● முஃமினான அண்டைவீட்டான்.
● மார்க்க ஞானமுள்ள ஆலிம்.
*ஐந்து விடயங்களை கொண்டு ஐந்து விடயங்கள் சிறந்ததாக மாறுகின்றன.*
● செழிப்பான வாழ்க்கையை கொண்டு ஆரோக்கியம் சிறப்பாகின்றது.
● நல்லதோழ்மையைக் கொண்டு பயணம் சிறப்பாகின்றது.
● நற்குணத்தை கொண்டு அழகு சிறப்பாகின்றது.
● மன ஓய்வைக் கொண்டு தூக்கம் சிறப்பாகின்றது.
● அல்லாஹ்வை ஞாபகம் செய்வது கொண்டு இரவு சிறப்பாகின்றது.
*....................*
*நோக்கத்தைப் பொறுத்து நடந்து செல்லும் விதம் வித்தியாசமாகும்.*
ரிஸ்க்கை தேடி செல்லும் பொழுது அல்லாஹ் கூறுகின்றான்
فامشوا
((நடந்து செல்லுங்கள்))
தொழுகைக்கு செல்லும் போது அல்லாஹ் கூறுகிறான் :
فاسعوا
((விரைந்து வேகமாக செல்லுங்கள்.))
சொர்க்கத்திற்கு செல்லும் போது அல்லாஹ் கூறுகிறான் : وسارعوا
((வேகமாக செல்லுங்கள்))
அல்லாஹ்வின் பக்கம் செல்லும்போது அல்லாஹ் கூறுகிறான் ففروا إلى الله ((அல்லாஹ்வின் பக்கம் விரண்டோடிச் செல்லுங்கள்)).
*பயனடைவோம் பிறர் பயனடையச்செய்வோம்.*
கருத்துகள்
கருத்துரையிடுக