*இஷ்கேஅவ்லியா*
*தொடர்=247*
🖲🖱🖱🖱🖱🖱🖱🖱🖱🖱
*நாய்களிடம்*
*10-நற்குணங்*
*களைகற்றுக்*
*கொள்ளுங்கள்*
*என்று சொன்ன*
*இறைநேசர்..!*
🖲🖱🖱🖱🖱🖱🖱🖱🖱🖱
ஒருநாள் மாபெரும்
இறைநேசர்
ஹஸன்பஸரி (ரஹ்)
அவர்களிடம்
"நாயைப் போய்
பாராட்டுகிறீர்களே..
ஏன்..?" என
ஒருமனிதர் கேட்டார்.
அதற்கு
இறைநேசர்அவர்கள்
அழகாக பதில்
சொன்னார்கள்.
"நாயிடம்
பத்து குணங்கள்
இருக்கின்றன.
அதனால் அதை
புகழ்கிறேன்..!"
என்றார்கள்.
*ஒன்று:-*
அது
பசித்திருக்கும்...
"இது
நல்லோர்களின்
செயல்..!"
*இரண்டு:-*
அதற்கு எந்த
இடமும் நிரந்தரம்
கிடையாது...
"இது
இறைநம்பிக்கையாளர்களின்
நிலை..!"
*மூன்று:-*
அது இரவில் சிறிதுநேரம் மட்டுமே
தூங்கும்...
"இது
இறை காதலர்களின்
நிலை..!"
*நான்கு:-*
அது
எஜமான்அடித்தாலும்
விரட்டினாலும்
போகாது...
"இது
ஆன்மீகமாணவர் (முரீதீன்களின்)
நற்குணம்..!"
*ஐந்து:-*
அது
சாதாரண இடத்தில்
தான் படுத்து
கிடக்கும்...
"இது பணிவானவர்களின்
குணம்..!"
*ஆறு:-*
அது
தன்னுடையஇடத்தை
யாரும் அபகரித்தால்
வேறு இடத்திற்கு சென்றுவிடும்...
"இது இறைவனின் நாட்டத்தை பொருந்திக் கொண்டோரின்
சிறந்தகுணம்..!"
*ஏழு:-*
அதை அடித்து
விரட்டிய பின்
ரொட்டியைக் காட்டினால்
ஓடோடிவரும்...
"இது இறை
பக்தியாளர்களின்
உயர்ந்த குணம்..!"
*எட்டு:-*
அது
உணவைப்பார்த்தால்
கொடுக்கும் வரை
காத்திருக்கும்...
"இது
மிஸ்கீன்களின்
நல்லகுணம்..!"
*ஒன்பது:-*
அது
இறந்து விட்டால்
அதற்கு
எந்தப் பொருளும்
கிடையாது.!
"இது
துறவு மனப்பான்மை
உள்ளவர்களின்
நிலை.!"
*பத்து:-*
அது
ஓரிடத்தை விட்டு
சென்றுவிட்டால்
மீண்டும் அந்த இடத்திற்கு வராது...
"இது
விசாலமான
எண்ணம் கொண்ட நல்லோர்களின்
நற்குணம்..!"
எனவே
இனி நாயைப்
கேவலமாகப்
பார்க்காதே...
அதன் உயர்ந்த நற்குணத்தைப்
பார்..!" என
ஆன்மீகமேதை
இறைநேசர் இமாம் *ஹஸன்பஸரி*
(ரஹ்) அவர்கள் சொன்னார்கள்.
by
மவ்லவி
U.அபூதாஹிர் ஃபைஜி பாகவி
அல் மதீனா பள்ளிவாசல் கும்பகோணம்
9443061063
Abuthahir faizee baqavi.com
கருத்துகள்
கருத்துரையிடுக