சூஃபியிசத்தால்_தான்_இஸ்லாம்_வளர்ந்தது
#சூஃபியிசத்தால்_தான்_இஸ்லாம்_வளர்ந்தது*
உலகமெங்கும் இஸ்லாம் வளர்ந்தது இஸ்லாத்தின் இதயமாக விளங்கும் சூஃபியிச வழிவந்த நல்லோர்களால் தான்.
இஸ்லாமிய உலகத்தையே அழித்து விட வேண்டும் என குரலெழுப்பி ஆரம்பிக்கப்பட்ட சிலுவைப் போரில் பிரித்தானியா ரோம் படைகளை எதிர்த்து வெற்றி கண்ட மகத்தான புரட்சியாளர் மாவீரர்
#ஹழ்ரத்_சுல்தான்_சலாஹுத்தீன்_அய்யூபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் காதிரிய்யா தரீக்கா மரபைச் சார்ந்தவர்கள். கெளதுல் அஃளம் முஹிய்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களின் முரீதாவார்கள்.
ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தையும், விஞ்ஞானியும், மிகச்சிறந்த கல்வியிலாளருமான உலகப்புகழ் பெற்ற #மாவீரர்_திப்பு_சுல்தான் (1750-1799) அவர்கள் பிரிட்டிஷ் அரசையே தனி ஒருவராக நடுநடுங்க வைத்த இணையற்ற மாவீரர் ஆவார். தன் நீதமான ஆட்சியால் மக்களை கவர்ந்த நாயகனான திப்பு சுல்தான் அவர்கள் முழுக்க முழுக்க சூஃபி மரபில் வந்தவர்.
மாவீரர் ஃப்ரெஞ்ச் புரட்சியாளர் நெப்போலியன் போனபெர்டே அவர்கள் இஸ்லாத்தால் கவரப்பட்டு இஸ்லாத்தை தழுவியதும் சூஃபி வழிமுறையால் தான்.
#ரஷ்யாவின் ஜார் சாம்ராஜ்யத்தை எதிர்த்துச் சுமார் அரை நூற்றாண்டு காலம் வீரப்போர் தொடுத்த தாகிஸ்தானின்
#இமாம்_ஷாமில் (1797-1871) அவர்கள், நக்ஷ்பந்திய்யா மரபின் முரீது இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர்...
#முசோலினியின் ஃபாசிஸ இத்தாலிய இராணுவத்துக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த பாலைவனச் சிங்கம்
#உமர்_முக்தார் (1862-1931) அவர்கள் சனூசிய்யா சூஃபி மரபைச் சேர்ந்தவர்...
#அல்ஜீரியாவின் மீதான பிரெஞ்சு ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடிய
#அப்துல்_காதிர்_அல்ஜஸாயிரி (1808-1883) அவர்கள் காதரிய்யா சூஃபி ஒழுங்கை சேர்ந்தவர்...
#பிரெஞ்சுக் காலனியத்திற்கு எதிராகப் போராடிய செனிகலின்
#ஷெய்க்_அஹ்மது_பம்பா (1853-1927) அவர்கள் முரீதிய்யா சூஃபி ஒழுங்கின் நிறுவனர்...
#மொரோக்கோவில் காலனித்துவத்துக்கு எதிரான போராட்டங்களில் உயிர்த்தியாகம் செய்த சூஃபி ஷெய்குகளான
#சித்தி_முஹம்மது_இப்னு_அப்துல்_காதிர், #அல்கத்தானி மற்றும் #அஹ்மது_ஹிபா ஆகியோர் மாபெரும் சூஃபியாக்கள்,
#ஸ்பானிய மற்றும் பிரெஞ்சுக் காலனியத்திற்கு எதிராக
வட ஆப்பிரிக்காவில் வெடித்த
#ரிஃப்_கிளர்ச்சியை’ தலைமையேற்று நடத்திய #முஹம்மது_அப்துல்_கரீம் (1882-1963) அவர்கள் ஒரு சூஃபி...
#பிரிட்டிஷ், #இத்தாலிய மற்றும் #எத்தியோப்பிய படைகளுக்கு எதிராக இருபதாண்டுகள் போராடிய தெர்வீஷ் அரசை நிறுவிய
சூஃபி தலைவர்
#முஹம்மது_அப்துல்லாஹ்_ஹசன் (1856-1920) அவர்கள்...
#கினியா, #செனிகல் மற்றும் #மாலியில் காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்தை வழிநடத்திய திஜானிய்யா சூஃபி
ஒழுங்கின் தலைவர்
#அல்ஹாஜ்_உமர்_தல் (1797-1864) அவர்கள்...
#மலேசியாவில் சூஃபி ஷெய்குகளும் உலமாக்களும் மக்களை காலனியத்திற்கு எதிராக அணிதிரட்டினார்கள். இந்தோனேசியாவின் சுமத்ராவில் டச்சுக்காரர்களுக்கு எதிரான இயக்கத்தை முன்னின்று நடத்தியதும் சூஃபிகளே...
இன்னும் சூஃபிகளின் பங்களிப்புகள் இச்சமுதாயத்திற்கும், உலகிற்கும்
ஏராளமாய் உள்ளன...
ஆன்மீகம், இறை ஞானம், அரசியல், அறிவியல், கனிதம், தொழில்நுட்பம், ஆட்சிமுறை, மருத்துவம், தத்துவம், மனிதநேயம் ஆகிய எல்லா துறையிலும் உள்ள தலைசிறந்த இஸ்லாமிய கண்டுபிடிப்பாளர்கள், இஸ்லாமிய ஆளூமைகள், ஞானிகள் எல்லாம் சூஃபி வழியில் உள்ளவர்களே !
ஆனால் தவ்ஹீது (ஏகத்துவம்) என்ற பெயரில் உலகில் தீவிரவாதத்தையும் மதவெறியையும் பரப்பிய வஹ்ஹாபிகளின் பங்களிப்பு என்று இஸ்லாத்தில் ஒன்றையாவது கூற முடியுமா?
சிந்தித்து நேர்வழி அடைந்து கொள்வோம் !
கருத்துகள்
கருத்துரையிடுக