நபிகளாரின் புனிதக் கரம் வெளியே வந்தது

*⚘புனித முஹர்ரம் பிறை 17⚘*

🌸 *تذكير بحادثة عظيمة:* 🌸
في مثل عصر هذا اليوم الموافق لـ 17 محرم من عام 555 هـ و كان يوم خميس من ذلك العام مدت يد النبي الطاهر سيد الوجود صلى الله عليه وعلى وصحبه وسلم من القبر الشريف لولده قطب الأقطاب شيخ الطرائق أبي العلمين سيدنا وشيخ طريقتنا السيد أحمد الرفاعي الكبير رضي الله عنه وعنا به في محفل من 9‪0‪ ألفاً حضروا تلك الحادثة العظيمة في المسجد النبوي الشريف.
🌸 *الدليل على أن الحادثة حدثت في تاريخ 17 محرم:*🌸
يقول سيدنا العارف بالله هاشم الأحمدي العبدلي الرفاعي رضي الله عنه وعنا به: «إني قد تبركت وتشرفت وجمع الله عَلَيَّ شتاتي فأُتحِفتُ بالخرقة المباركة الأحمدية الرفاعية من شيخي وسيدي وابن عمي نائب النبي صلى الله عليه وسلم في الأمة المحمدية مجدد شريعته المصطفوية السيد أحمد الكبير الرفاعي رضي الله عنه في سنة خمس وخمسين وخمسمئة في حرم جده سيد المرسلين عليه صلوات وسلام رب العالمين ثالث يوم من اليوم الذي مدت له فيه يد المصطفى عليه الصلاة والسلام من قبره بين الألوف على رؤوس الأشهاد وشهد له بذلك الحاضر والبادي وذلك في اليوم *السابع عشر من شهر محرم الحرام* من السنة المذكورة»
*(من كتاب غنيمة الفريقين ص 141-142)*
طالب الدعاء : الفقير محمد سلطان الأنواري الباقوي غفر الله له وللمسلمين ، قاهر فطن ، جنوب الهند .
*⚘புனித முஹர்ரம் பிறை 17⚘*
இது போன்ற ஒரு நாளில் தான் புனித ரவ்ளா ஷரீஃபில் ஒரு பேரற்புதம் நிகழ்ந்தது.
ஹிஜ்ரீ 555 முஹர்ரம் பிறை 17 அன்று.... கண்மணி நாயகத்தின் ﷺ குலவழித்தோன்றல் *ஷெய்ஃகுனா ஸுல்தானுல் ஆரிஃபீன் ஸெய்யிது அஹ்மதுல் கபீரிர் ரிஃபாயீ ரழியல்லாஹு அன்ஹு,* தமது பாட்டனாரான பூமான் நபியின் ﷺ புனித ரவ்ளா ஷரீஃபுக்கு வருகை தந்து, தம் நீண்ட நாள் வேணவாவை ஒரு கவிதை வடிவில் எடுத்துரைக்கிறார்கள்.  
🌹في حالة البعد روحي كنت أرسلها 🌹
🌹تقبل الأرض عني وهي نائبتی🌹
🌹فهذه دولة الأشباح قد حضرت🌹
🌹فامدد يمينك کي تحظی بها شفتي🌹
(நபியே நாயகமே ﷺ ) அடியேன், தூரத்தில் இருந்த போது எப்பொழுதும் உங்கள் ரவ்ளா ஷரீஃபுக்கு எனது ரூஹை (ஆன்மா - உயிரை) தூது அனுப்பிக் கொண்டிருந்தேன்.
அப்பொழுதெல்லாம் என் ரூஹ், உங்கள் பாதமலர் பட்ட இந்த மண்ணை முத்திக் கொண்டு வந்தது.
இப்பொழுது என் உடலுடன் உங்கள் சமூகத்திற்கு வந்துள்ளேன்.
உங்கள் வளமான வலது கரத்தை எனக்கு நீட்டுங்களேன் என் உதடுகளால் உங்கள் பொற்கரத்தை முத்திக் கொள்கிறேன்.
என்று பாடியதும்... கண்மணி நாயகத்தின் ﷺ‏ அருள் நிறைந்த புனித கை, வெளியே வந்தது. ஷெய்ஃகுனா ரிஃபாயீ நாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், தம் உதடுகளால் உளமாற முத்திக்கொண்டார்கள் . 
அந்நேரம் ஆயிரக்கணக்கான ஆஷிகீன்கள் அங்கு ஒன்று கூடியிருந்தார்கள்.
(அறிவிப்பாளர்: ஷெய்ஃகுனா ரிஃபாயீ நாயகத்தின் சகோதரரும் (சிறிய தகப்பனாரின் மகன்), இந்த நிகழ்வு நடந்து மூன்றாம் நாள் ஷெய்ஃகுனா ரிஃபாயீ நாயகத்திடமிருந்து ஃகிலாஃபத் பெற்றவருமான ஸெய்யிதுனல் ஆரிஃப் பில்லாஹ் ஹாஷிமுல் அஹ்மதீ அல் அப்தலிய்யுர் ரிஃபாயீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல் : கனீமதுல் ஃபரீகைன், பக்கம்: 141, 142)  
மற்றும்
ஹஜ்ஜின் சிறப்புகள்(தமிழ்) பக்கம்216 (மௌலானா ஜகரிய்யா ரஹ்மத்துல்லாஹி அலைஹி)

பேரன்பாளன் அல்லாஹ் ﷻ, நம் அனைவரின் ஈருலக வாழ்வையும் செழிப்பாக்கி வைப்பானாக.
آمين بجاه سيدنا محمد صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?