சர்தார் நபியின்-சிரமங்களை நீக்கும் துஆ*

*சர்தார் நபியின்-சிரமங்களை நீக்கும் துஆ*
*اللهمَّ إِلَيكَ أشْكُو ضَعْفَ قُوّتِي وقِلّةَ حِيلَتِي وَهَوانِي عَلىٰ النّاسِ، اَنْتَ اَرْحَمَُ الرّاحِمِين، أنت ربُّ المُستَضْعَفِين، وأنت ربّي، إلىٰ مَنْ تَكِلُنِي؟ إلى بعيدٍ يَتَجهَّمُنِي؟ أم إلىٰ عَدُوٍّ مَلَّكْتَهُ أمْرِي؟ إنْ لمْ يَكنْ بِكَ غَضَبٌ عَلَيَّ فَلاَ أُبالِيْ غَيْرَ اَنَّ عافِيَتَك هي أَوسَعُ لي، أعوذُ بِنُورِ وَجهِك الّذي أَشْرقتْ له الظّلماتُ، وصَلَحَ عليه أمرُ الدّنيا والآخِرةِ أَن يَحِلَّ عليّ غَضَبُكَ اوْان يَنْزِلَ بِي سَخْطُك، لكَ العُتْبىٰ حتّى تَرضىٰ، وَلَا حَولَ ولَا قُوّةَ إلّا بِكَ.* 
*அல்லாஹும்ம.....! இலய்க அஷ்கூ ளஃfப குவ்வதி, வஃகில்லத ஹீய்லதி, வ ஹவானீ அலன்னாஸ், அன்த அர்ஹமுர் ராஹிமீன்..! அன்த ரப்புல் முஸ்தள்அஃபீன், வ‌அன்த ரப்பி, இலா மன் தகிலுனி? இலா பயீதின் யதஜஹ்ஹமுனி? அம் இலா அதுவ்வின் மல்லக்தஹு அம்ரீ? இன் லம் யகுன் பிக களபுன் அலய்ய, ஃபலா உபாலி, ஃகைர அன்ன ஆஃபியதக ஹிய அவ்ச‌உ லி, அஊது பினூரி வஜ்ஹிகல்லதி, அஷ்ரகத் லஹு ளுலுமாது, வ ஸலஹ அலைய்ஹி அம்ருத் துன்யா வல் ஆகிறதி, அன் யஹில்ல அலைய்ய களபுக, அவ் அன் யன்ஸில ஃபிய் ஸக்துக, லகல் உத்பா ஹத்தா தர்ளா, வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பிக.*
இறைவா....! எனது பலவீனத்தையும், (அறிவாற்றலின் குறைவால் ஏற்படும்) இயலாமையையும், மக்கள் என்னை சிறுமைப்படுத்துவதையும் -உன்னிடமே முறையிடுகிறேன்.
கருணையாளர்களுக்கெல்லாம் பெரும் கருணையாளனே....!
நீயே பலவீனர்களின் இறைவன், நீயே என்னை (படைத்து) பரிபாலிப்பவன்.
நீ யாரிடத்திலே என் காரியங்களை ஒப்படைக்க போகிறாய்..?
கடிந்த முகத்துடன் என்னை எதிர்கொள்ளும் நபரிடமா...? 
அல்லது (எனக்கு தீங்கிழைத்து) என்மீது ஆதிக்கம் செலுத்தும் எதிரியிடமா...?
என்மீது உனக்கு கோபம் இல்லையென்றால், 
( உன் பொருத்தத்தை தேடியவனாக என் விஷயத்திலே எதிரிகள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளை) நான் பொருட்படுத்தமாட்டேன்.
மாறாக, உன்புறத்திலிருந்துள்ள (நிம்மதியான) ஆஃபியத்தே எனக்கு மிகவும் நிரப்பமானது.
இருள்களெல்லாம் பிரகாசிக்க, இன்னும் ஈருலக காரியங்கள் (அனைத்தும்) சீராய் செயல்படக் காரணமான-(முஹம்மதெனும்) உனது ஜோதியின் பொருட்டால் (உன்னிடம்) உதவி தேடுகிறேன்!
உன்னுடைய கோபத்தை என் மீது சாட்டிவிடாதே. உன் (புறத்திலிருந்து) வேதனையை என் மீது இறக்கிவிடாதே.
நீ ஏற்றுக்கொள்ளும் வரை ,உனது திருப்தியை தேடுகிறேன்.
எந்தவொரு பாவத்தை விட்டு தவிர்ந்திருப்பதும், நன்மை செய்வதற்கான ஆற்றல் பிறப்பதும், உன் உதவியை கொண்டே.( தப்ரானி)...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?