பெரியார்களின் பாதங்களை முத்தமிடல்


*கேள்வி:*
ஷைக்குமார்கள், ஆலிம்களின் கை கால்களை முத்தமிடுவது நம் மார்க்கத்தில் கூடுமா?
சரியான ஆதாரங்களுடன் தெளிவான பதிலை தரவும்.

*பதில்:*
ஷைக்குமார்கள், ஆலிம்கள், நீதமான அரசர் போன்ற மார்க்கத்தின் அடிப்படையில் உயர்வை பெற்றுள்ள பெரியோர்களுக்கு கண்ணியம் செய்வதற்காக அவர்களின் கைகால்களை முத்தமிடுவது நம் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்.அதற்கு சான்றாக பல ஹதீஸ்களும் வந்துள்ளது.

*கண்ணியத்தின் அடிப்படையில் முத்தமிடுவது பற்றி வந்துள்ள ஹதீஸ்கள்:*

1) ஜாரிஃ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், அவர்கள் அப்துல் கைஸ் கூட்டத்தினருடன் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்களை சந்திக்க மதினாவிற்கு வந்திருந்தார்கள். அவர்கள் கூறுகிறார்கள், "நாங்கள் எங்களுடைய வாகனங்களில் இருந்து விரைந்து சென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் முபாரக்கான கைகால்களை முத்தமிட்டோம்."
(நூல்: அபு தாவூத், அதபுல் முஃப்ரத் புகாரி)

2) அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், " நாங்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்களிடம் நெருங்கி சென்று அவர்களின் முபாரக்கான கையை முத்தமிட்டோம்."
(நூல்: அபு தாவூத்)

3) ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், 
" நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டிற்கு சென்றால், அவர்களை ஃபாத்திமா (ரலி) அவர்கள் எழுந்து நின்று வரவேற்ப்பவர்களாகவும், அவர்களின் கைகளை முத்தமிடுபவர்களாகவும் இருந்தார்கள்." (நூல்: திர்மிதீ)

4) கஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்,
"என்னுடைய தவ்பாவின் வசனம் இறங்கிய போது, நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்களிடம் சென்று, அவர்களின் கைகளை முத்தமிட்டேன்." ( நூல்: தப்ரானி)

5) ஸல்மா இப்னு அக்வஃ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் முபாரக்கான கரங்களில் பைஅத் செய்த பிறகு நான் அவர்களின் கரங்களை முத்தமிட்டேன், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் என்னை தடுக்கவில்லை." ( நூல்: தப்ரானி, முஃஜமுல் அவ்ஸத்)

6) பரீராஹ் (ரலி) அறிவிக்கின்றார்கள், ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடம் வந்து, அவர்களின் முபாரக்கான நெற்றியையும், கால்களையும் முத்தமிட்டார்." ( நூல்: ஹாகிம்)

7) சஃப்வான் (ரலி) அறிவிக்கின்றார்கள், "யூதர்களில் சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடம் வந்து சில விஷயங்களை பற்றி கேட்டதற்கு பிறகு அவர்களின் கைகால்களை முத்தமிட்டார்கள்." ( நூல்: அஹ்மத், திர்மிதி, நஸாயீ, இப்னு மாஜா) 

8) ஒரு கிராமவாசி நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடம், யாரசூலல்லாஹ்! எனக்கு தங்களின் நெற்றியையும், கால்களையும் முத்தமிட அனுமதி தாருங்கள் என்று கேட்டப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அந்த தோழருக்கு முத்தமிட அனுமதி தந்தார்கள். பிறகு அவர் தங்களுக்கு ஸஜ்தா செய்ய அனுமதி தாருங்கள் என்று கேட்டப்போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்கள், ஒருவர் மற்றொருவருக்கு ஸஜ்தா செய்யக் கூடாது. அவ்வாறு நான் ஒருவரை ஸஜ்தா செய்ய ஏவிருந்தால், கணவனுடைய கடமை மனைவியின் மீது அதிகமாக இருப்பதின் காரணமாக மனைவியை கணவனுக்கு ஸஜ்தா செய்ய ஏவிருப்பேன்." 
( நூல்: இப்னு ஹப்பான், தலாயிலுன் நுபுவ்வாஹ் பைஹகீ)

9) இஸ்மாயீல் இப்னு அப்துர் ரஹ்மான் அஸ்ஸதீ (ரலி) அறிவிக்கின்றார்கள், உமர் (ரலி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடம் எழுந்து நின்று அவர்களின் பாதகங்களை முத்தமிட்டார்கள்." 
(நூல்: ஃபத்ஹுல் பாரி, உம்ததுல் காரி, தஃப்ஸீர் இப்னு அபி ஹாதம், தஃப்ஸீர் திப்ரீ) 

மேற்கூறிய ஹதீஸ்களில் சங்கைமிகு சஹாபாக்கள் நாயகம் கண்மணி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் முபாரக்கான நெற்றியையும், கைகால்களையும் முத்தமிடுவது பற்றி இருந்தது. 
அதல்லாமல் சஹாபாக்களில் சிலர் சிலரின் கைகால்களை முத்தமிடுவது பற்றியும் ஹதீஸ்கள் வந்துள்ளன.

1) சுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்,  
" அலீ (ரலி) அப்பாஸ் (ரலி) அவர்களின் கைகால்களை முத்தமிடுவதை நான் பார்துள்ளேன்." (நூல்: அதபுல் முஃப்ரத் புகாரி) 

2) ஜைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தங்களின் கைகளை காட்டுங்கள் என கூறி, அவர்களின் கைகளை முத்தமிட்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் குடும்பத்தினருடன் இவ்வாறு நடந்து கொள்வதற்கே நாங்கள் ஏவப்பட்டுள்ளோம் என்று ஜைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
 ( நூல்: ஹாகிம், அல்- இசாபாஹ் இப்னு ஹஜர், பைஹகீ, தாரீகு இப்னு அஸாகீர்) 
   
3) யஹ்யா இப்னு ஹாரிஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள், "நான் வாஸிலா இப்னு அஸ்கஃ (ரலி) அவர்களை சந்தித்தப்போது கேட்டேன், தங்களின் இந்த கைகளினால் தானே தாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் முபாரக்கான கரங்களில் பைஅத் செய்தீர்கள்? அதற்கு அவர்கள் ஆம் என்று கூறியதும் நான் அவர்களிடம் தங்களின் கைகளை காட்டுங்கள் நான் அதனை முத்தமிட வேண்டும் என கேட்டேன். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டு தன்னுடைய கைகளை நீட்டினார்கள், நான் அதனை முத்தமிட்டேன்." ( நூல்: தப்ரானி)

4) ஸாபிதுல் பொன்னானி (ரலி) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களை சந்தித்தப்போது கேட்டார்கள், தங்களின் இந்த கைகளினால் தானே தாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் முபாரக்கான கைகளை தொட்டுள்ளீர்கள்? அதற்கு அனஸ் (ரலி) ஆம் என்றதும், தங்களின் கைகளை தாருங்கள் நான் அதனை முத்தமிட வேண்டும் என கேட்டார்கள். அனஸ் (ரலி) அவர்களும் தனது கைகளை கொடுக்க, அதனை அவர்கள் முத்தமிட்டார்கள். ( நூல்: அஹ்மத், அதபுல் முஃப்ரத்) 

மேல்கூறபட்ட ஹதீஸ்களின் மூலம் ஷைக்குமார்கள், ஆலிம்கள், பெற்றோர்களின் கைகால்களை முத்தமிடுவது நம் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்பது நிருபனமானது. 

*இதனை பற்றிய பிக்ஹ் அறிஞர்களின் கருத்துக்கள்:*

"பரகத் பெறுவதற்காக மார்க்க அறிஞர் மேலும் மார்க்க பேனிக்கை உடையவர் ஆகியோரின் கைகளை முத்தமிடுவது அனுமதிக்கப்பட்டதாகும், மாறாக கூறப்படுகிறது ஸுன்னத்தாகும். "   
( நூல்: ரத்துல் முஹ்தார் 254/5)

"மார்க்க அறிஞர், நீதமான அரசர் ஆகியோரின் கைகளை முத்தமிடுவது அனுமதிக்கப்பட்டதாகும்."
(நூல்: ஹாஷியத்துத் தஹ்தாவி)

இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், 
"பெருமைக்காக ஒருவரின் கையை முத்தமிடுவது மக்ரூஹ். மேலும் இறை நெருக்கம் பெறுவதற்காக மார்க்க பேனிக்கை உடைய அல்லது மார்க்க கல்வி உடைய ஒருவரின் கையை முத்தமிடுவது அனுமதிக்கப்பட்டதாகும்." 
(நூல்: ஃபத்ஹுல் பாரி)

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், 
" ஒருவரின் கையை முத்தமிடுவது அவருடைய பேனுதலின் காரணமாகவோ அல்லது அவருடைய நல் அமலின் காரணமாகவோ அல்லது அவர் மார்க்க கல்வியை கற்றிருப்பதின் காரணமாகவோ இருக்குமேயானால் அது அனுமதிக்கப்பட்டது மாறாக நன்மையான காரியம். அதுவே முத்தமிடுவது அவரின் செல்வத்தின் காரணமாகவோ அல்லது மக்களுக்கு மத்தியில் அவருக்கு உள்ள பதவி உயர்வின் காரணமாகவோ இருக்குமேயானால் அது கடுமையான மக்ரூஹ் ஆகும்." 

எனவே ஷைக்குமார்கள், ஆலிம்கள் போன்றோருக்கு கண்ணியம் செய்வதற்காக அவர்களின் கைகால்களை முத்தமிடுவது அனுமதிக்கப்பட்டது மாறாக முஸ்தஹப் என்பது மேல்கூறபட்ட ஹதீஸ்களின் மூலமும், அறிஞர்களின் கூற்றுகளின் மூலமும் தெளிவானது.

*அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்*

தங்களின் துஆவை ஆதரவு வைத்தவனாக, 
அடியேன் நியாஸ் அஹ்மது கலீமி ஆமிரி  

Group-1 
https://chat.whatsapp.com/CzcCIkUTySVFfdMTMUy93h


ஒரு செயல் வணக்கமா இல்லையா என அறிய எண்ணம் முக்கியமாகும். முஷ்ரிக்குகள் செய்யும் ஒரு வணக்க முறையை ஒத்த ஒரு செயலை ஒரு முஸ்லிம் செய்வதனால் அவன் முஷ்ரிக் ஆகி விட மாட்டான். அச்செயலுக்கு பின்னாலுள்ள நிய்யத்து வேறாக இருந்தால் அச்செயலுக்கான தீர்ப்பும் வேறுபாடும். இமாம் தஹபி (ரஹ்) கூறுகிறார்கள்:

"யூஸுப் அலை அவர்களுக்கு அவர்களின் சகோதரர்கள் செய்த சுஜூது வணக்கத்திற்குரிய சுஜுது அல்ல. மரியாதைக்காகவும் பெருமதிப்பு செலுத்துவதற்காகவும் ஒரு முஸ்லிம் ரசூலுல்லாஹ்வின் (ஸல்) கப்ருக்கு சுஜுது செய்வதானது எந்த ஒரு விதத்திலும் குப்ர் ஆகாது. அனால் அவர் ரசூலுல்லாஹ்விற்கு (ஸல்) (கட்டளைக்கு) கீழ்படியாதவராகிரார். அதனால் இது தடுக்கப்பட்டது என்பதை அவருக்கு தெரியப்படுத்துங்கள். கப்ரை நோக்கி தொழுபவர் விடயத்திலும் இவ்வாறே செய்யவேண்டும்.."
மு'ஜமுஷ் ஷுயூஹ் (பாகம் 1 பக்கம் 25 )

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?