பெரும்பான்மை-சிறுபான்மை

பெரும்பான்மை எல்லாம் பெருமைக்குரியதல்ல
-------------------------------------------------------------
-கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பயி
         ********
அமீருல்முஃமீனின் ஹஜரத் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், கடைத்தெருவில் ஒருவர், “யா அல்லாஹ்! உன்னுடைய குறைவான அடியார்களுடன் என்னை சேர்ப்பாயாக!” என துஆ செய்து கொண்டிருப்பதைப் பார்த்தார்கள்.

 அருகே சென்ற கலீஃபா அவர்கள், “இந்த துஆவை எங்கிருந்து கற்றீர்?” எனக் கேட்டார்கள்.
அதற்கு அவர், “கலீஃபா அவர்களே! நீங்கள் குர்ஆன் ஒதுவதில்லையா?’ என்று கேட்டவர் .“.

 என் அடியார்களில் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே” 34:13.
என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்

அதைக் கேட்ட உமர் அவர்கள் “உமரே! உன்னை தவிர மற்ற அனைவருமே குர்ஆனை நன்கு விளங்கியுள்ளனர்” என கண் கலங்கச் சொன்னார்கள்.

பொதுவாக நம்மில் ஒருவரிடம் இந்த தவறை ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டால் அதற்கு அவர் நம்மில் பெரும்பாலானோர் அப்படி தானே செய்கின்றார்கள்" என சொல்கிறார்கள்.
ஆனால், குர்ஆனில் பெரும்பாலானோர் என்று வருகின்ற இடங்களில் அவர்களை பற்றி எதிர்மறையான கருத்துக்களே சொல்லப்பட்டிருக்கிறது.

பெரும்பாலானோர் நன்றி கெட்டவர்கள் என்றும், மூடர்கள் என்றும் பாவிகள் என்றும், குர்ஆன் சொல்கிறது. 
உதாரணத்திற்கு சில,

 ஆகவே, அவர்களில் பெரும்பாலோர் ஈமான் கொள்ள மாட்டார்கள் 2:100 

ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. 2:243

எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். 3:110  
 
அவர்களில் பெரும்பாலோர் நல்லறிவு பெறாதவர்களாகவே இருக்கின்றனர்5:103.

எனினும் அவர்களில் பெரும்பாலோர் அதை அறிந்து கொள்வதில்லை” 6:37  
 
அவர்களில் பெரும்பாலோர் மூடர்களாகவே இருக்கின்றனர். 6:111 
  

எனினும் அவர்களில் பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள். 26:223  
 
இன்னும் அவர்களில் பெரும்பாலோர் பொய்யர்களே. 26:223

எனவே, எங்கே பெரும்பான்மை இருக்கிறதோ அது தான் சரி என்பதும் அதற்கு மாறாக சொற்பானவர்களே இருக்கும் கூட்டம் ஏற்புடையது அல்ல என்பதும் பெரும் கூட்டம் தான் வெற்றி பெரும் சிறு கூ ட்டம் வெற்றி பெறாது என்பதும் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் தவறானதாகும்.

இஸ்லாமிய வரலாற்றில், மிக குறைந்த கூட்டம் தான் பெரும்பான்மை மக்களை வீழ்த்தி இருக்கிறது.

 
“எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள்;”2:249
 இறைவனுக்கு கட்டுபட்டு நடப்பவர்கள் சொற்பமானவர்களே 
என குர் ஆன் கூறுகிறது 

ஆகவே, அவர்கள் சொற்பமாகவே ஈமான் கொள்வார்கள். 2:88.

எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான். 2:246

வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை11:40

.என் அடியார்களில் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே” 34:13.

 இமாம் இப்னு கய்யிம் (ரஹ்) சொல்கிறார்கள் :
“நீ செல்லு கின்ற பாதை நேர்வழியா எனப்பார்.
நேர்வழியில் செல்பவர்கள் குறைவாக இருப்பது உன்னைத் தடுமாற வைத்து விடவேண்டாம்
அசத்திய பாதையை நீ தேர்ந்தெடுப்பதைப் பற்றி உன்னை எச்சரிக்கிறேன் 
அழிவை நோக்கி செல்பவர்கள் அதிகமாக இருப்பது உன்னை ஏமாற்றி விடவேண்டாம்” 

அல்லாஹ் உங்களையும் என்னையும் நேரான பாதையில் செலுத்துவானாக 
ஆமீன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?