பாக்கவிகளின் பெருநாள் வாழ்த்துக்கள்
சோதனைகளை எல்லாம் சாதனைகளாக்கி சரித்திரம் படைத்த அல்லாஹ்வின் தோழர் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குடும்ப தியாகத்தை நினைவு கூறுவதே தியாகத் திருநாள் என்னும் *ஈதுல் அல்ஹா* பெருநாள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் நெஞ்சார்ந்த *"ஈதுல் அழ்ஹா" ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்*
*தகப்பல்லல்லாஹு மின்னா வ மின்கும்*
இந்நாளில்,நாம் அனைவரும் சந்தோஷமாக, ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டு ,
ஒற்றுமையாக இருக்கவும்,
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குடும்பத்தார்களை போல அநீதிக்கு எதிராக நம்முடைய பாதங்கள் உறுதியாக இருக்கவும் *எல்லாம் வல்ல அல்லாஹ்* நமக்கு நற்கிருபை செய்வானாக!
*ஆமீன்! யா ரப்பல்* *ஆலமீன்!*
இப்படிக்கு
மௌலவி அல்ஹாபிழ்
*சையத் அப்பாஸ் அலி மஸ்லஹி ஃபாஜில் பாகவீ*
பேராசிரியர்:
மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி, தூத்துக்குடி
*தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்..*
கட்டளையிட்ட இறைவனுக்கு
காட்டத் துணிந்த நபி இப்ராஹிமின் தியாகம்;
வெற்றிப் பெற்றச்
சோதனைக்குப் பகரமாய்
களிப்புடன் பலியிட்டு
கண்டுக்கொள்ள இத்திருநாள்!
அறுக்கும்கறி ஏதும்
அடைவதில்லை
இறைவனை;
அது புதுப்பித்துக்கொண்டு
பூப்பூக்கும் என்றும் நம் ஈமானை!
புத்தாடைப்
போர்த்திக்கொண்டு
முழக்கமிடுவோம்
தக்பீரை;
மனம் குளிர்ந்து
முகம் மலர்ந்து
அள்ளித் தெளிப்போம்
வாழ்த்துகளை!
கசந்துப்போன நினைவுகளை
கசக்கி எறிவோம் இந்நாளில்;
முட்டிநின்றச் சகோதரனை
முத்தமிடுவோம் இப்பெருநாளில்..
எரியும் வெறுப்புகளை
என்றும் அணைத்து விடுவோம் நம் வாழ்நாளில்..
நம் தந்தை இப்ராஹிமின் அர்ப்பணிப்பை உணர்ந்து கொள்வோம் இப்பெருநாளில்...
அனைத்து ஈமானிய சொந்தங்களுக்கும் இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~
*செய்யது அஹமது அலி. பாகவி*
இறைவனுக்காய்
இறக்கத் துணிந்த
இஸ்மாயீல் (அலை)
தியாகத்தையும்
அல்லாஹ்வுக்காய்
அறுக்கத்துணிந்த
இப்ராஹீம் (அலை)
தியாகத்தையும்
இன்னல்கள் பலதையும்
இசைவாய் ஏற்ற
ஹாஜரா (அலை)
தியாகத்தையும்
நினைவுகூறுவதோடு
நின்றிடாமல்
அக்குடும்பம் போல்
நித்தம் நடைபோட
நம் குடும்பத்துக்கும்
வல்லோன் அல்லாஹ்
நல்லருள் புரிவானாக!
உங்களுக்கும்
உம் குடும்பத்தினருக்கும்
*ஈதுல் அழ்ஹா*
*ஹஜ்ஜுப்பெருநாள்*
*நல் வாழ்த்துக்கள்*
*தகப்பலல்லாஹு மின்னா வ மின்கும் ஸாலிஹல் அஃமால்*
*அல்லாஹ்*
*எங்களிடமிருந்தும்*
*உங்களிடமிருந்தும்*
*நல்லமல்களை*
*ஏற்றுக்கொள்வானாக!*
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.
--- ஃபக்ருத்தீன் ஃபாஜில் பாகவி
மண்ணடி ------
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....
*ஈதுல் அள்ஹா நல் வாழ்த்துக்கள்*
💐💐💐💐💐💐💐💐
*தனக்கு மிஞ்சியதைக் கொடுப்பது தர்மம்.*
*தனக்குள்ளதைக் கொடுப்பது தயாளம்.*
*தன்னையே கொடுப்பது தியாகம்*
தன்னைவும் தன் குடும்பத்தையும் இறைவனுக்காக தியாகம் செய்ய முன் வந்த இப்றாஹிம் நபி யின் தியாகத்தை நினைவு கூறும் எனது அன்பு நட்புகளுக்கும் எனது அன்பு உறவுகளுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
அவர்களைப் போன்று
குடும்ப சகிதம் தியாகம் செய்யும் பாக்கியத்தை *நம் குடும்பத்தினருக்கும்*
அல்லாஹ் தந்தருள்வானாக!
*ஆமீன்*
*تقبل الله منا و منكم*
*அல்லாஹ் உங்களிடம் இருந்தும் நம்மிடம் இருந்தும் (நற்செயல்களை) ஏற்றுக் கொள்வானாக!*
*இக்கொடுமையான காலச்சூழலிலிருந்து மீண்டு மனநிம்மதியோடு வாழும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!*
*ஆமீன்*
பாசத்துடன்...... 🌹🌹
*ஜியாவுதீன் ஃபாஜில் பாகவி*
❤️❤️❤️ *பெரியூர்பட்டி (நத்தம்)* 🌹🌹
91 95661 82929:
*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பு ஈமானிய சொந்தங்களுக்கு இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள் . இந்த நன்னாளில் தேகத்தில் நலத்தையும் பொருளில் வளத்தையும் வாழ்க்கையில் அபிவிருத்தியையும் நோய்ப் பொழுதுகளில் நிவாரணத்தையும் தருவதற்கு இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். அல்லாஹ் நம்முடைய நல்அமல்களை ஏற்றுக் கொள்வானாக*
மௌலவி
ஷா. அப்துல் கரீம் பாகவி M.A, இமாம் பெரிய பள்ளிவாசல். போரூர். சென்னை.116
கருத்துகள்
கருத்துரையிடுக