காத்திரு!
எளிதில் எதுவும்
இங்கு நடந்திடாது
காத்திருப்பு
கருவறையில்
தொடங்கி
கற்றுத்தரும்
பாடங்கள் பல
தாயின் மடியில்
தவழுவதற்காக
குழந்தை
காத்திருக்கிறது
தவழும்
குழந்தை
நடந்து செல்ல
காத்திருக்கிறது
கல்வி
பயில்பவன்
பட்டம் பெற
காத்திருக்கிறான்
பட்டம்
பெற்றவன்
பணிகளுக்கு
காத்திருக்கிறான்
ஒன்றிலிருந்து
மற்றொன்றை
பெறுவதற்கு மனிதன்
காத்திருக்கிறான்
மனிதனை
அடைவதற்கு
மரணம்
காத்திருக்கிறது
மரணத்தின் பின்
மனிதனுக்காக
மண்ணறை
காத்திருக்கிறது
எளிதில் எதுவும்
இங்கும் அங்கும்
கிடைத்திடாது
இறை கருணைக்காக
காத்திரு!!!
வடகரை வாஹிதி அபு ஸயீத் ஆஸிம்
கருத்துகள்
கருத்துரையிடுக