இளம் ஆலிம்களே உங்களைத்தான்

(ஆலிம்கள் குழுவிற்கு மட்டும்) 

இளம் ஆலிம்களே உங்களைத்தான்!
1. நீங்கள் அதிகாலைத் தொழுகைக்குப்பின் (ஸுப்ஹ்) துயில்கொள்ள மாட்டேன் என்று உறுதிகொண்டுள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் வாழ்க்கையின் வெற்றிப் பாதையை நோக்கி முதலடி எடுத்து வைத்துவிட்டீர்கள் என்று பொருள்.

மேலும் “இறைவா, என் சமுதாயத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்புரிவாயாக” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்த துஆவின் பங்கையும் பெற்றுக்கொண்டுவிட்டீர்கள்.

2. ஓய்வு நேரங்களைத் தூங்கிக் கழிக்க மாட்டேன்; ஏதாவது பயனுள்ள வேலையைத்தான் செய்வேன் என்று உறுதியான கொள்கையோடு நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றீர்களா? அப்படியானால் நீங்கள் வாழ்க்கையின் வெற்றிப் படிக்கட்டுகளில் பாதியைக் கடந்துவிட்டீர்கள் என்று பொருள். 

3. நீங்கள் நாள்தோறும் மஃக்ரிப் தொழுகைக்குப்பின் அல்வாக்கிஆ அத்தியாயத்தை ஓதும் வழக்கமுடையவரா? அப்படியானால் உங்கள் வாழ்க்கையில் வறுமை உங்களைத் தொட்டுப் பார்க்க முன்வராது. நீங்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக வாழ முனைந்துள்ளீர்கள் என்று பொருள். 

வாழும் பொழுதுகளை மதித்து வாழும்போது நம்மைக் காலம் மதிக்கும். நொடிகள் வேகமாக அடித்து அடித்துச் சென்றுகொண்டிருக்கின்றன. எனவே நாமும் கால ஓட்டத்திற்கேற்ப வேகமாக ஓடாமல் மூலையில் முடங்கிக் கிடந்தால் பொருளாதார உதவிகளைப் பெறும் வரிசையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
“இருக்கும் இடத்திலேயே ஏதாவது தொழில் செய்து வாழ்வின் உயர்நிலையை அடைய வேண்டும். பிறர் ஈதலைப் பெறும் கையாக இல்லாமல் பிறருக்கு ஈயும் கையாக என் கை உயர்வு பெற வேண்டும்” என்ற உயர் எண்ணத்தோடு முயற்சி மேற்கொள்ளும்போது நாமும் அத்தகைய நிலையை இறையருளால் இன் ஷாஅல்லாஹ் அடையலாம்.

அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி
(துணை ஆசிரியர் இனிய திசைகள் மாதஇதழ்)
08 07 2021
==============

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?