இமாம்களுக்கு வழிகாட்டுநெறி

இமாம்களுக்கு வழிகாட்டுநெறி---------வழங்குபவர்:O.M.அப்துல் காதிர்,பாகவி.-------
1,இது பிரச்சினைகள்
கூடிய பள்ளிவாசல்,அது
குறைந்தது என்று பார்க்காதீர், இங்கும் நல்லவர்கள்இருப்பர், அங்கும் இருப்பர்.
2,சம்பளம் கூடக் குறைவு என்று பார்க்காதீர்,நாம் அல்லாஹ்வுக்காக வேலை செய்யும் போது அல்லாஹ் வேறு வழியில் நமக்கு சம்பளம் தந்துவிடுவான்.
3,வேலை பார்க்கும் ஊரில் நிலம்,வீடு,கார்,
விலையுயர்ந்த பைக் என்று வாங்காதீர்,அது உங்கள் வேலைக்கே உலை வைத்து விட்டும்.
4,ஹவ்ளில் கால் விட்டு விட்டீர் என்று குறை சொன்ன ஊரில்,உங்கள் காலை ஹவ்ளில் விட்டுக் கழுகுங்கள் ஹள்றத் அதன் பரக்கத்து மக்களுக்கு கிடைக்கட்டும் என்று,அந்த ஊர்க்கார்ர்களே சோல்லும் அளவுக்கு 
தக்வாவில் உயருங்கள்.
5,கிடைக்கும் அன்பளிப்புக்களை கணக்கெழுதி வையுங்கள்,அது அந்த ஊரில் நீங்கள் நிரந்தரமாகப் பணி செய்ய வகை செய்யும்.
6,மக்தப் மதறஸாக்களில் நன்கு உழைப்புச்செய்யுங்கள்,நீங்கள் முதுமை அடையும் போது அவர்கள்தான் முத்தவல்லிகள்,ஊர்ப் பெரிய மனுஷிகள்.
7,சொற்பொழிவை கண்ணியமாக அமைத்துக் கொள்ளுங்கள்,நீங்கள் மூசா(அலை)அவர்களுமல்ல,ஊர் மக்கள் பிர்அவ்னுமல்ல,மூசா(அலை) அவர்களையே அல்லாஹ் கண்ணியமாக உரையாடச்சொன்னான்.



8,நம்மீது யார் சந்தேகம்
கொள்ளப்போகிறார்?
எள்று எண்ணம் கொள்ளாதீர்,நம் தாய்
ஆயிஷா(ரலி)அவர்கள் மீதே இச்சமூகம் இட்டுக் கட்டியுள்ளது.
9,நாம் பணியில் சேறும் போது ஜமாஅத்தார்கள்
அனைவரும் நம்மீது நல்லெண்ணமே கொள்கிறார்கள்,நாம் செய்யும் சிறுசிறு தவறுகள் தான் அவர்களை நம்மீது வெறப்புக்கொள்ளச்
செய்கிறது.
10,ஆறு நாட்கள் குறிப்பெடுத்து ஜும்ஆ பயானை தேர்வு செய்யவேண்டும்.
சொன்னதை திருப்பிச்
சொல்வதை முற்றிலும்
தவிற்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?