அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.....
கண்ணியத்துக்குரிய உலமாப்பெருந்தகைகளே!!!...
உற்சாகமான மானசீக *உள்ளொளிப்* *பயணமாய்* அமைந்த இளமைப்பருவம்....
ஆம்!!!. "" அந்த ஆசிரியரின் பெயரைக்கேட்டாலே *சும்மா* *அதிருதுல்லே* "" என்றே சொல்லத் தோன்றும். அப்படி ஓர் ஈர்ப்பு அவரின் பாடத்துக்கு உண்டு...
ஆசிரியர் அவர்களின் விளக்கும் திறன் கண்டு ஒவ்வொரு நாளும் வியந்து போவதுண்டு...
இப்படித்தான் ஒருநாள், வாலிப விவேகத்தைப் பற்றி விமரிசையாய் மலர்ந்தார்கள்.
"" வாலிபம் , இது இறைவனால் மனிதனுக்கு தரப்பட்ட ஆச்சர்யமான இளமைக்கால வளர்ச்சி.
அதனை அருளாக நினைத்து ...முறையாக பயன்படுத்தினால்,
வாழ்வாங்கு வாழ்ந்து வாழ்வில் சிகரத்தை தொட முடியும்.
அப்படி தங்களின் தன்னம்பிக்கையால் வல்ல நாயனின் அருள் பெற்று.... இளைஞர்களுக்கு
விண்ணுலகின் விண்மீன்களாய் இன்று வரை....
இனி இறுதிநாள் வரை ஜொலித்துக்கொண்டிருக்கும் ""اصحاب الكهف"" ( அஸ்ஹாபுல் கஹ்ஃப்) குகை வாலிப இறைநேசர்கள்...
'' வாலிபம்" எனும் சொல்லுக்கு ஓர் உருவம் கொடுத்தால், அது இந்த இறைநேசச்செல்வர்களையே படம்பிடித்துக்காட்டும். அதனால்தான், அல்லாஹ் அருள்மறையில் அந்த வாலிபர்களை குறித்து
*انهم* *فتية*
( இன்னஹும் ஃபித்யதுன் ) நிச்சயம் இவர்கள்தான் வாலிபர்கள் "" என்று சிலாகித்துக்கூறுகிறான்.
காரணம், அவர்கள் மெய்யுணர்ந்து உள்ளத்தில் பதிந்த மெஞ்ஞானத்தை பாதுகாக்க ....
தாய்மண்ணை தாரவார்த்துக் கொடுத்துவிட்டு, இலட்சியப்பாதையில் தடம்பதிக்கச் சென்றார்கள்.
அது மட்டுமல்ல, கொடுங்கோலனான அரசனின் சந்நிதானத்தில்....
சத்திய வாக்கை சத்தமாகச் சொல்லி....
மன்னனையே மண் கவ்வ வைத்தார்கள்.
நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள் அல்லவா....
"" افضل الجهاد كلمة حق عند سلطان جاءر""
( அப்ஃளலுல் ஜிஹாதி கலிமது ஹக்கின் இன்ந்த சுல்தானின் ஜாயிரின்) மிகச்சிறந்த அறப்போர் என்பது
அநீதக்கார அரசனின் முன்னிலையில் சத்திய பிரகடனத்தை துணிச்சலாகக் கூறுவதே ஆகும்"" என்று.
இந்த சொற்றொடருக்கு
வாழ்வின் நிஜங்களில் வடிவம் தந்த வாலிபப் பெருந்தகைகள் தான், அந்த குகைவாசிகள்.
இந்தத் தோரணையில், அல்லாமா இப்னு மாலிக் ரஹிமஹுல்லாஹ்...
அல்பிய்யா கிதாபிலே
وهل فتي فيكم فما خل لنا
ورجل من الكرام عندنا
(வஹல் பதன் பீகும் பமா ஹில்லுல் லனா...
வரஜுலும் மினல் கிராமி இன்தனா) என்கிற கண்ணியை அரபி இலக்கண சட்டத்தின் உதாரணமாய் கூறியிருப்பினும்...
ஆன்மிகச் சிந்தைக்கு இனிக்கும் அமுதமாய் மலர்கிறார்கள்.
அதாவது, ஒரு மாணவன் தனது கல்விப்பயணத்தில் தகப்பனாய் பார்க்கும் ஆசிரியப்பெருமகனாரைப் பற்றி மெய்சிலிர்த்து சொல்வதைத் தான் , உலக அரங்கில் வியப்பாக நாம் கேட்டிருக்கிறோம் அல்லவா.....
ஆனால், இங்கு ஒரு வித்தியாசமான பார்வை பார்க்கப்பட்டுள்ளது...
ஆம்!!! "" ஓர் ஆசிரியர் , தனது மாணவனின் அபாரமான திறமையைக்கண்டு...
அகிலத்தையே பார்த்து சவால் விட்டுக்கேட்கிறார் ....
பாருங்கள்.
"" ( என் வாலிப மாணவனைப்போல...) ஒரு வாலிபன் , உங்களில் உண்டா???.
( அப்படி இருந்தால் அழைத்து வாருங்கள்.பார்க்கலாம்)
அவரோடு நாம் , இறையருள் பொருந்திய தோழமை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
உங்களால் கொண்டு வர முடியுமா????.
அதே சமயம், "" எங்களிடம் கண்ணியமான மனிதர்களில் கட்டுப்பட்ட அற்புதமான வாலிப மாணவர் இருக்கிறார் "" என்று வையகமே வியக்கும் அளவிற்கு பாராட்டி சொல்கிறார்கள் இப்னு மாலிக் ரஹிமஹுல்லாஹ்.
அந்த மாணவர் வேறு யாருமில்லை. நமது ஷாபியீ மத்ஹபின் முன்னோடிகளில் ஒருவரான "" அல்லாமா இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் "" அவர்களே ஆவார்கள்.
நாமெல்லாம் அரபி இலக்கணத்தின் பேரற்புத படைப்பாளராய் இப்னு மாலிக் ரஹிமஹுல்லாஹ்வை காண்கிறோம்....இல்லையா!!!!
இங்கு, அவர்களே தங்களின் வாலிப மாணவரை "" மிகச்சிறந்த மனிதராய்"" மகுடம் சூட்டி மார்தட்டிக்கூறுகிறார்கள் என்றால் .....
இதை விட வேறொரு கிரீடம் இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு தேவையில்லை....
வாழ்ந்தால் இப்படிப்பட்ட ஒரு நல்லாசிரியரைப்போல....
ஒரு நல்ல மாணவனைப்போலத்தான் வாழ வேண்டும் அல்லவா....
அருள் மழை பொழியும் அல்லாஹ், என்னை அப்படி ஓர் ஆசிரியராகவும்....
உங்களை அப்படிப்பட்ட மாணவர்களாகவும் ஆக்கி அருள் புரிவானாக....ஆமீன்!!!!.
என்று எனது ஆசிரியப்பெருமகனார் உபதேசிக்கும்போது...
உள்ளத்தில் உயிரோட்டமாய் லட்சியத்தின் வித்துக்கள் விதையத் தொடங்கின....
இவ்வாறு புருவத்தை உயர்த்திப் பார்க்கும் உபதேசத்தை உரைத்த அந்தப் பேராசிரியர் யார்??? என்பதை அறிய கண்களை திறந்தே வைத்திருங்கள்...
*வஸ்ஸலாம்*
என்றும் உங்களில் ஒருவன்,,,
*M.Y.அப்துர்ரஹ்மான்* *பாகவி* *பாஜில்மழாஹிரி* . *இராயபுரம்.சென்னை* .
*20.7.2021* .
கருத்துகள்
கருத்துரையிடுக