*பள்ளப்பட்டியும் வகையறாவும்


*பள்ளப்பட்டியும் வகையறாவும்*

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டிக்கு என்று தனிச்சிறப்புகள் உண்டு. இஸ்லாமியர்கள் மட்டுமே ஒருங்கிணைந்து வாழும் இந்த ஊரில் இணைபிரியா சகோதரர்களாக மாற்றுமத நண்பர்கள் ஒரு சதவீதம் மட்டுமே உள்ளனர். அந்த ஒரு சதவீதமும் ஆசிரியர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கோவில் தெரு என்ற தெருவும் பள்ளப்பட்டியில் உள்ளது. இங்குள்ள இஸ்லாமியர்கள் சிறுவர் முதலே தலையில் தொப்பி போட்டு தனித்து தெரிவர். பெண்கள் ஹிஜாபுடன் எப்போதும் ஒழுக்க நெறியுடன் இருப்பர். பள்ளப்பட்டியின் பிரியாணி, பள்ளப்பட்டி மைசூர்பாக், பள்ளபட்டி பூந்தி பள்ளப்பட்டியில் வருடந்தோறும் நடைபெறும் உருஸ் நிகழ்வு போன்றவை தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று. இந்த பள்ளப்பட்டிக்கு மற்றுமொரு சிறப்பும் உண்டு. பள்ளப்பட்டியில் ஒருவரை பெயர் சொல்லி அடையாளம் காண்பது என்பது இயலாத காரியம். அவர்களது *வகையறா பெயரைச் சொன்னால்* மட்டுமே எளிதில் அடையாளம் காண முடியும் அந்த வகையறாக்களுக்கு என தனித்தனி சிறப்புகளும் உண்டு. அந்த வகையறாக்கள்தான் எத்தனை எத்தனை. அத்தனை வகையறாக்களையும் *ரஸ்வி அட்வர்டைசிங் ஹபீப்* அவர்கள் அழகிய வரிகளில் பிரித்து பிண்ண *ராயல் ஷேக் அப்துல்லா* அவர்கள் எஸ்பிபி அவர்களின் பிண்ணனியில் மூச்சு விடாமல் பாடிய பாடல் உங்களின் செவிகளுக்கு இதோ இனிய விருந்தாக அனுப்பி உள்ளோம். நிச்சயம் இந்த வகையறாக்களின் வரிகளும் பாட்டின் மெட்டும் உங்களை ரசிக்க வைக்கும். 

குறிப்பாக பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர்கள் தங்கள் வகையறா பெயர் இந்த பாட்டினிடையே வருகிறதா என எதிர் பார்ப்பது இயல்பு. எனது வகையறா *கூலச்சி* வந்துள்ளது. மகிழ்ச்சி. 

*குறிப்பு* இதில் ஏதேனும் தங்கள் வகையறா பெயர்கள் விடுபட்டு இருப்பின் தெரிவியுங்கள் அதை அடுத்த பாடலில் இணைத்து தனிப்பாடலாக அனுப்புகிறோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?