*நண்டு மற்றும் இறால் சாப்பிடுவதின் சட்டம் என்ன?*

‬: *நண்டு மற்றும் இறால் சாப்பிடுவதின் சட்டம் என்ன?*

فقد اختلف أهل العلم في حكم أكل سرطان البحر على قولين:

நண்டு சாப்பிடுவதில் இரண்டு கருத்துகள் உண்டு, 

الأول: 
أنه يحرم لكونه ‏حيواناً سلطاناً، 

*1,அது கூடாது*

ஏனெனில் அது தனது இரையை இறுக்கி இடுக்கி உண்ணும் பிராணியாகும்... 

அப்படி பட்டவையை சாப்பிட ஹதீஸில் தடை வந்துள்ளது. 

وقد ثبت أن النبي صلى الله عليه وسلم نهى عن كل ذي ناب من السباع 

‏وعن كل ذي مخلب من الطير. 
கீறி கிழித்து தின்னும் வனவிலங்குகளையும் கூரிய நகங்களால் தனது இரையை உண்ணும் பறவை வகைகளையும் சாப்பிடு வதை விட்டும் நபி அவர்கள் தடுத்தார்கள்

أخرجه مسلم وأصحاب السنن

الثاني أنه يجوز أكله، 

மேலும் அது மீனைப் போன்று அல்ல மாறாக அது தண்ணீர் இல்லாமலும் வாழும் பிராணியாகும் 
எனவே நண்டு உண்டு புசிப்பதற்கு உரிய உணவு அல்ல

இதுவே இமாம் *அபூ ஹனீஃபா* ரஹிமஹ் அவர்களின் ஆய்வாகும்

*2, அது கூடும்*

ஏனெனில் அல்லாஹ் குர்ஆனில் 

لعموم الأدلة على جواز أكل صيد البحر كقوله الله تعالى 

اُحِلَّ لَـكُمْ صَيْدُ الْبَحْرِ وَطَعَامُهٗ مَتَاعًا لَّـكُمْ وَلِلسَّيَّارَةِ‌ وَحُرِّمَ عَلَيْكُمْ صَيْدُ الْبَـرِّ مَا دُمْتُمْ حُرُمًا‌ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْۤ اِلَيْهِ تُحْشَرُوْن
َ‏ 
உங்களுக்கும் (இதர) பிரயாணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் கட்டியிருந்தாலும்) 👉🏻கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக - ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது;👈🏻

 ஆனால் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் காலமெல்லாம் தரையில் வேட்டையாடுவது உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது. 
எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்,

 அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.

(அல்குர்ஆன் : 5:96)

وقول النبي صلى الله عليه وسلم في البحر: " هو ‏الطهور ماؤه الحل ميتته" 
கடலில் கிடைக்கும் அனைத்தும் புசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது 
என்பது ஆதாரப்பூர்வமான நபிமொழியாகும்

இதுவே மற்ற *இமாம்களின்* ஆய்வாகும் 

أخرجه الإمام أحمد في المسند والنسائي وابن ماجه في سننهما .‏ 
وهذا القول هو الراجح إن شاء الله تعالى.‏


*நண்டு சாப்பிடக்கூடாது என்பவர்களின் வாதங்கள்*

இறைமறை வசனமும், நபிமொழியும் கடல் வாழ் உயிரினங்களை மட்டுமே குறிப்பிடுகின்றன.

கடலிலும், கரையிலும் வாழும் உயிரினங்கள் என்று குறிப்பிடவில்லை.

 கடலில் மட்டும் வாழும் பிராணிகளையே “கடல் பிராணிகள்“ என்பர்.

 நீரிலும்,
நிலத்திலும் வாழ்பவற்றை ஒரேயடியாக “நீர் வாழ் பிராணிகள்“ என்று சொல்லிட முடியாது 

நண்டு கடலில் மட்டுமா வாழ்கிறது? 

இல்லையே! 

நீர்,
நிலம் இரண்டிலும் அது வாழும் தன்மைக்கொண்டது 

நண்டை கடலிலும் வேட்டையாடலாம்.

கரையிலும் பிடிக்கலாம்.

மேலும் அது அறுவருக்கத்தக்க பிராணியாகும். 

وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبٰتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبٰۤٮِٕثَ

மேலும், அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில்

 அவர்களுக்குத் தூய்மையானவற்றை அனுமதிக்கின்றார்;
 தூய்மையில்லாத அறுவருப்பானவற்றைத் தடை செய்கின்றார்.

(அல்குர்ஆன் : 7:157)


மேலும் நண்டுக்கு பத்து கால்கள் உள்ளன.

அவற்றில் இரண்டு கால்கள் (இரைகளை )
உயிரினங்களை இடுக்கிப் பிடித்து உண்ண உதவுபவை.

 கால்களால் இடுக்கி உண்ணும் உயிரினங்களைப் புசிப்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது ..

கால்களால் இடுக்கி, இறுக்கி சாப்பிடும் உயிர் வாழ்வன ஹராம் என்ற அடிப்படையில் தான் காகம், பருந்து,
போன்றவற்றை நாம் உண்ணத் தடை விதிக்கப்பட்டுள்ளோம்.

எனவே, நீரிலும், நிலத்திலும் வாழ்பவை, கால்களால் பிடித்து இறுக்கி இரையைத் திண்பவை அறுவருக்கத்தக்கவை என்ற காரணங்களால்

 நண்டை உணவாக உட்கொள்வது ஹராமாக்கப்பட்டுள்ளது.

*நூல் : மீஸானுல் குப்றா*


அடுத்து *இறாலை* ப்பொறுத்தமட்டில் அது மீனைப்போன்றே முட்டையிலிருந்து உண்டாகிறது. 
மீனுடைய மற்ற அடையாளங்களும் இறாலில் உள்ளதால் இறாலை உண்பது கூடும்... 

எனினும் இதை தவிர்த்துக்கொள்வது நல்லதாகும்... 

*ஃபதாவா ரஹீமிய்யா (6/257)*


وبناء على ما سبق : فأكل الجمبري وسرطان البحر : حلال ، لا مانع منه ، 

ஆக மேற்படி கருத்தின் அடிப்படையில் கடல் நண்டு மற்றும் இறால் இவைகளை தாராளமாக சாப்பிடலாம்

لعموم الأدلة الدالة على جواز أكل صيد البحر. 

فإن ثبت في شيء أن أكله سام ، أو مضر لآكله ، 

فهنا يحرم أكله ، لأجل ما فيه من الضرر ، لا لأن جنسه محرم في ذاته
அதே சமயம் அவைகளை சாப்பிடுவதில் உடலுக்கு கேடு இருக்கிறது அது உடலுக்கு இடரை தரும் என்கின்ற பொழுது அவைகளை சாப்பிடாமல் இருப்பது அவசியமாகும்

*والله اعلم بالصواب،✍*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?