மழலையர் பாடல்
மழலையர் பாடல்
مصطفي...مصطفي...
முகம்மதே....முகம்மதே....
தேர்ந்தெடுக்கப்பட்ட முகம்மதே...!
منبع للصفاء
தங்கத் தூய்மையின் பிறப்பிடமே
سيد الانبياء
உலகத் தூதர்களின் தளபதியே...
مشعل في الوفا
வாக்கை காக்கும் ஒளிச்சுடரே
كان في عطفه لليتامي دفي
அவரது அன்பில் இருக்கிறதே
அநாதைகளின் அரவணைப்பே...
مصطفي...مصطفي...(ايضا)
حن قلبي له
என் இதயம் தான் ஏங்குகிறதே...
فاض شوقا اليه
தன் பாசத்தையே பொழிகிறதே...
ليس ارجو سوي
ஆசைகள் எதுவும் எனக்கில்லையே...
شربة من يديه
அவர் கையால் பருகுவதைத் தவிர...
الصلاة عليه
அவருக்கே நிகழட்டும் வாழ்த்துக்கள்
والسلام عليه
அவருக்கே நிகழட்டும் நிம்மதிகள்
للسماء ارتقي
அவர் தான் விண்ணகம் சென்றாரே...
فاتي بالنقاء
தூய்மையுடன் மண்ணகம் வந்தாரே...
وغدا وجهه نيرا مشرقا
கதிரொளி வதனத்தைப் பெற்றாரே...
كان من عفوه
மன்னிக்கும் குணத்தில் இருந்தாரே...
حين حان اللقاء
எதிரிகளை சந்திக்கும் போதெல்லாம்
قال فالتذهبوا
செல்லுங்கள் என்றே சொல்வாரே
انتم الطلقاء
நீங்களும் விடுதலை பெற்றவர்களே...
مصطفي...مصطفي...(ايضا )
كان في هديه منهجا وسطا
சமநிலைப் பாதையில் நின்றவரே...
كان تسعده بسمة البسطاء
புன் நகைச் சிரிப்பில் வென்றவரே...
سيد في الكرم قمة في العطاء
தானம் தருவதில் தனித் தலைவரே...
தருமம் செய்வதில் தனிச் சின்னமே..
مصطفي...مصطفي...(ايضا)
கருத்துகள்
கருத்துரையிடுக