மூன்று பிரச்சினைகளும் மூன்று தீர்வுகளும்
பிரச்சினை 1.
இச்சைகளின் மீது பற்று
தீர்வு:
தொழுகையை மீழ்பரிசீலனை செய்க!
ஆதாரம்:
“ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் வந்தனர்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; இச்சைகளைப் பின்பற்றினர்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.” (19:59)
#தொழுகையை வீணாக்குவது இச்சையை பின்பற்ற வழிவகுக்கின்றது.#
பிரச்சினை 2:
துரதிஷ்ட நிலையும் வெற்றியின்மையும்.
தீர்வு:
பெற்றோருக்கு உபகாரம் செய்யும் நிலையை மீழ்பரிசீலனை செய்க!
ஆதாரம்:
"என் தாய்க்கு உபகாரம் செய்பவனாக (இருக்குமாறு உபதேசம் செய்தான்) துரதிஷ்ட நிலையுடைய அடக்கியாள்பவனாக என்னை அவன் ஆக்கவில்லை." (19:32)
#பெற்றாருக்கு உபகாரம் செய்யாவிட்டால் துரதிஷ்டமே விளைவு#
பிரச்சினை 3:
உள ரீதியான நெருக்கடியையும் அழுத்தத்தையும் உணர்தல்.
தீர்வு:
அல்குர்ஆனுடனான உறவை வீழ்பரிசீலனை செய்க!
ஆதாரம்:
" யார் எனது வழிகாட்டலை (அல்குர்ஆன்) புறக்கணிக்கிறாரோ, நிச்சயமாக அவருக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்." (20:124)
#அல்லாஹ்வின் வழிகாட்டலான அல்குர்ஆனை புறக்கனிப்பது நெருக்கடியான வாழ்க்கைக்கே வழிவகுக்கும்.# Dr.Nayeem
கருத்துகள்
கருத்துரையிடுக