பெண்கள் மதரசா

10ம் வகுப்பு, பிளஸ்2  படித்த முஸ்லிம் பெண்கள் 
ஆலிமா பட்டதுடன்,
உலக கல்வியையும் கற்று  தரும்
கல்லூரி படிப்பும்,
நிஸ்வான் மதரஸாக்கள் எங்கெல்லாம்
உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் சகோரர்களே!

1, அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி அம்மாபட்டிணம்.

2,  உஸ்வதுல் ஹஸனா, பள்ளப்பட்டி.

தொலைபேசி: 04320 240 282

3, ஆயிஷா ரலியல்லாஹூ அன்ஹா மகளிர் ஷரீஅத் கல்லூரி,
மங்கலம்பேட்டை கடலூர் மாவட்டம்.

4, முஅஸ்கர் ரஹ்மான் மகளிர் அரபிக்  கல்லூரி,
கூடலூர் பாடந்துரை மர்கஸ்
(கேரள சிலபஸ்)....

5, SBZ (பிலாலிய்யா) பெண்கள் கல்லூரி.
சென்னையிலும் உத்தமபாளையத்திலும், பாண்டிச்சேரியிலும்  இரு கல்வி திட்டத்துடன் சிறப்பாக நடைபெறுகிறது.

6, அய்மான் கல்லூரி, சேலம், திருச்சி.
பட்டப்படிப்புடன்,  ஆலிமிய்யத் கோர்ஸ்ம் நடத்தப்படுகின்றது

7,  அன்னை  ஹாஜரா  கல்லூரி மேலப்பாளையம்
பட்டப்படிப்புடன்,  ஆலிமிய்யத் கோர்ஸ்ம் நடத்தப்படுகின்றது..

8. கிரஸண்ட் மகளிர் கல்லூரி
மதுரை, கீழக்கரை

இன்னும் பல இருக்கலாம்.

நிஸ்வான் மதரஸாக்கள் தமிழகத்தின்
பலபாகங்களிலும் நிறைய இருக்கின்றன.

பெண்மக்களை இருபாலர் கல்லூரிகளில்
முடிந்த வரை சேர்க்காமல் இருப்பதே மேலானது.

பெண்மக்களுக்கு உலகப்படிப்பை கொடுக்கிறோமோ, இல்லையோ
கட்டாயமாக மார்கக்கல்வியை ஊட்ட கடமைப்பட்டுள்ளோம்.

10, +2 படித்த பெண்மக்களை வீட்டில் சும்மா
இருக்கவிடாமல்  நிஸ்வான் மதரஸாக்களில்
சேர்த்து விடலாம்.

அல்லது
10, +2 படித்த பெண்மக்களை வீட்டில் சும்மா
இருக்கவிடாமல்  தையல், எம்ராடிங், கம்யூட்டர் போன்ற விஷயங்களை கற்க வைக்கலாம். கரஸில் படிக்க  வைக்கலாம்

பெண்மக்களை எதையும் எதிர்கொள்ளும்
மனநிலை உள்ளவர்களாக, துணிவு கொண்டவர்களாக, இஸ்லாமிய வட்டத்திற்குள் இருந்துகொண்டு ,
ஷரீஅத்தின் வரம்புகளை மீறாமல்
வாழ்க்கையின் இன்பதுன்பங்களை
சமாளிக்கக்கூடியவர்களாக வளர்த்தெடுப்பது காலத்தின் கட்டாயம்
என்பதை பெற்றோர்கள் உணர கடமைப்பட்டுள்ளோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?